Thursday, July 4, 2013

சீஷேல்ஸ்சும் முருங்கையும்



 முருங்கையின் மருத்துவ மகிமை...
----------------------------------------------------


பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.

முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(Sperm)பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.


இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.

தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்,

முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது, புரதம் – 6.7%, கொழுப்பு – 1.7%, தாதுக்கள் – 2.3% மற்றும் கார்போஹைட்ரேட்கள் – 12.5%.

தகவல் தந்தவர்  Aatika Ashreen
====================================================================

எங்கள் ஜனாதிபதி சமீபத்தில் சீஷேல்ஸ் தீவுக்கு விஜயம் மேட்கொண்டதை அறிவீர்கள் .... ஒருசில குறிப்புகள் அங்கு மாம்பழம் பலாபழம் போன்ற பழங்கள் அனைத்தும் வவ்வாலுக்கு விட்டு விடுவார்கள் ... ஆனால் வவ்வாலை தூண்டி வைத்து பிடித்து சாப்பிடுவார்கள் .........அங்கு வெத்திலையும் முருங்கக்காயும் காடுகளாய் வளர்ந்து உள்ளது ... யாரும் சாப்பிடுவதில்லை .... காரணம் அது நஞ்சுக்காயாம் ...........
நான் எனது காருக்கு மேல் ஏறி ஒருநாள் இரண்டு முருங்ககக்காயை பறித்தேன் ...... உடனே நஞ்சுக்காயை சாப்பிட்டு சாகப்போறதாக போலிசுக்கு தகவல் கொடுத்தார்கள் ..... என்னுடைய டிரைவர் சொன்னான் .....
' இவன் எல்லாம் எங்களுக்கு கீயா காற்றானுவோ .... இங்கு போலீஸ் என்கிற சாமானே ஒன்றும் இல்லை ... கிழமைக்கு ஒரு தடவை போலீஸ் என்கிற ஒரு வூட்டை (காவல் நிலையம்) தொரப்பானுவோ  .........
நீங்க பறிங்க சார் என்றான் .......'
அங்கு பத்து பதினைந்து வருடத்துக்கு ஒரு முறைதான் ஒரு கொலையே ...நடக்குமாம் .......

 தகவல் தந்தவர் Idroos Mohamed Mohamed Illias
 ==============================================================

எனது மகன் நௌஷாத் அலி அங்கு சில வருடங்கள் இருந்தார். அங்கு ,கொசு பாப்பு தொல்லைகள் கிடையாதாம் .மற்றும் அருமையான இயற்கை அழகு நல்ல குளிர்ந்த காற்று ,நல்ல சீதோஸ்ணம். வியாபாரம் செய்தால் நிறைய பணம் சேர்க்க முடியும் .அனைத்து பொருட்களும் ,இந்தியா துபாய் ,அராபிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கூடுதலான விலைக்கு விற்பார்கள் . கட்டடங்கள் கட்டுபவர்களும் துபாயிலிருந்து வந்து கட்டித் தருபவர்கள்தான் ..படத்தில் காண்பவர் எனது மகன் நௌஷாத் அலி


முஹம்மது அலி




There are three official languages in Seychelles: Creole (a lilting, French-based patois), English and French. Many Seychellois also speak fluent Italian or German.Below are some useful Creole phrases: English Creole Hello Bonzour Goodbye Orevwar How are you? Ki dir? Thank you Mersi Where? Kote? Please Silvouple No Non Yes Wi I don’t understand Mon pa konpran I like it Mon kontan How are you? Konman sava? What is this? Kisisa?

No comments: