Friday, September 12, 2014

நெனச்சான் நெனச்சான் எனை நினைச்சான்

நெனச்சான்
நெனச்சான்
எனை நினைச்சான்
ஒரு கால நேரம் பாக்காமலே நெனச்சான்

ரசிச்சான்
ரசிச்சான்
எனை ரசிச்சான்
என் பேச்சும், மூச்சும் ஓரக் கண்ணால் ரசிச்சான்

நானொரு அழகிய
பம்பரமா
உந்தன் கையிலே
பம்பரமா
உன்னைச் சுத்தற
பம்பரமா, பம்பரமா

நூலில் ஆடற
பம்பரமா
தோளில் ஆடற
பம்பரமா
கண்ணில் ஆடற
பம்பரமா, பம்பரமா ?



கண்ணினோரம்
நெஞ்சினோரம்
காதல் தட்டுதோ

தத்தளிக்கிற
பாய்மரமா
கரையில் தட்டுதோ

அட
கண்ணு ரெண்டும் கட்டிக் கிட்டு
காட்டில் விட்ட தாரு

எட்டுத் திக்கும் எப்பவுமே
காதலென்று ஆச்சு

ஒண்ணு ரெண்டு மூணு கூட
மறந்திங்கு போச்சு

மூச்சுக்குள்ள நீ தானே
கிசு கிசுப் பேச்சு

கெஞ்சிக் கெஞ்சிப் பாத்தேன்
தூக்கம் வரவில்லை
பஞ்சணைக்கு கொஞ்சம் கூட
கூச்சம் வரவில்லை

கண்ணிமையில் கத்தி ரெண்டு
தொங்க விட்ட தொல்லை
என்னுடைய நிலமையை
வேறென்ன சொல்ல



அவளொரு தேவதை
அவளொரு மேனகை
அவளொரு பூங்கிளி
அவளொரு பூங்கொடி

அவளொரு அதிசயம்
அவளொரு பரவசம்
அவளொரு பாச்சரம்
அவளொரு புதுசுரம்



தந்திரனோ
மந்திரனோ
அவனொரு அழகிய சுந்தரனோ

அதிசயமோ
பரவசமோ
அவனது காதலும் என்வசமோ

மயங்கிடுமோ
பயந்திடுமோ
சொல்லிட உதடுகள் தயங்கிடுமோ

பூத்திடுமோ
காய்த்திடுமோ
உயிரிலே காதலின் கனிவருமோ

பாடல் : பம்பரம் ; இசை : சஞ்சே; 
வரிகள்
சேவியர்
குரல் : 
பென்சியா டோன்; ஆல்பம் : மன்மதா, A TBB Production !

தரவிறக்கம் செய்ய : http://www.tbbstars.com/Album/Manmatha%20Album.zip
------------------------------------------------------

To Listen

https://soundcloud.com/writerxavier/manmatha_bambaram_sanje_xavier_bensia-don

Thursday, September 11, 2014

அம்மாவின் கல்யாணப் பட்டுப்புடவை

காலப்பெட்டகத்தின் சீரான
நினைவு அடுக்குகளை
வரிசைப்படுத்துவது போல
மடிப்பாக..
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
அந்தப் பட்டுப்புடவை!

மாப்பிள்ளையைத் தேடியதற்குச்
சற்றும் குறையாமல்
தேடி வாங்கிய புடவையென
எடுக்கும் போதெல்லாம்
பெருமிதத்தோடு அம்மா சொல்வாள்!

எத்தனை வருடம் ஆனாலும்
அதை அணியும்போதெல்லாம்
அம்மாவின்
நினைவுகளிலும்,நடத்தையிலும்
ஒரு மணமகள் வந்து
கூச்சத்தோடு அமர்ந்துகொள்கிறாள்!

கடந்து செல்லும்
காலத்தின் மீதான
மிச்சம் இருக்கும்
காற்றின் வாசமாய்
அந்துருண்டைகளையும்
வாசனைத் திரவியங்களையும்
தன் மேல் சுமந்து அவள்
நினைவுகளுக்கு நறுமணமூட்டுகிறது!

அம்மாக்களின்
கல்யாணப் புடவைகளைப்
பார்க்கும் ஒவ்வொரு முறையும்...
அப்பாக்களின் பட்டுவேட்டிகளை
நாம் பார்த்ததே இல்லை என்ற
உண்மை சற்று ஓங்கி
அறைந்துவிட்டுச் செல்கிறது!

Tuesday, September 9, 2014

லியோ டால்ஸ்டாயின் 186th பிறந்த நாள்

இன்று கூகிள் Doodle லியோ டால்ஸ்டாயின் 186th பிறந்த நாளை கொண்டாடுகிறது
லியோ டால்ஸ்டாயின் உயர்ந்த படைப்புகளில் ஒன்று ‘War and Peace’ மற்றொன்று ‘Anna Karenina’

லியோ டால்ஸ்டாய் ஒரு பெரிய எழுத்தாளர் ஆனால் அவரால் "நன்றாக முறையாக படிக்க முடியவில்லை மற்றும் படித்து அறிய விரும்பவில்லை " என்று அவரது ஆசிரியர்கள் அவரைப் பற்றி விவரித்தார்கள்..அவர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு Yasnaya போலியானாவில் சேர்ந்தார். அங்கு சில ஆய்வுகளை செய்து பின்பு இராணுவத்தில் இணைந்துகொண்டார். அங்குதான் அவரது எழுதும் பழக்கம் அதிகமானது.அவரது எழுத்து நடைகள் எளிமையானது, மற்றவர்களால் எளிமையாக புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் .அவரது தத்துவார்த்த கட்டுரைகள் மக்கள் மனதை தொட்டன .அவரது அறநெறிகள் கொண்ட கட்டுரைகள் அவரை ஒரு தார்மீக சிந்தனையாளராக , சமூக சீர்திருத்தவாதியாக மக்கள் மத்தியில் புகழடைய வைத்தது.
காலத்தால் அழியாத பெருமையை லியோ டால்ஸ்டாய் பெற்று விளங்குகின்றார்

Monday, September 8, 2014

மழலையெனும் மருந்து....

மழலையெனும் மருந்து

(இன்னிசை வெண்பாட்டுகள்)

====================================

====================================

அஞ்சுதலோ மிஞ்சுதலோ ஏதுமற்ற நன்மழலைக்

கொஞ்சுமொழிக் கோலம்! கொடுமை யறியாத

பிஞ்சுமலர் பொக்கையிதழ் புன்சிரிப்பால் நெஞ்சினிலே

வஞ்சமிலா இன்னமிழ்தா மூற்று!



கொடியிற் சிரித்திடும் கொன்றையின் தேனாய்,

மடியில் முகிழ்ந்திடும் மல்லிகைப் பூவாய்,

நொடியில் நமையே நுகர்ந்திட வைக்கும்

வடிவெழில் வண்ண மலர்!

Thursday, September 4, 2014

கொக்கு பிடிக்கப் போய் ...!

நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது நான் ஏறாத மரம் அது பாவம் செய்த மரமாகத்தான் இருக்கும்.
ஒரு முறை தென்னை மரத்தில் ஏறி கொக்கு பிடித்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது எங்க அம்மா திடீரென்று வந்து விட்டார்கள்

அப்புறம் என்ன வழக்கம்போல் கொஞ்சல் தான் ..
பிறகு வீட்டுக்கு வந்து என்னிடம் சத்தியம் பண்ண சொன்னார்கள் இனி நீ 'தென்னை மரத்திலே ஏற மாட்டேன் என்று சத்தியம் பண்ணு' என்று சொன்னார்கள் நமக்கு அப்பொழுது சத்தியத்தை பத்தி என்ன தெரியும் அதனால் நானும் சரி 'சத்தியம்' என்று சொல்லி விட்டேன்.

Wednesday, September 3, 2014

கடித இலக்கியம்

நவீன இலக்கியத்தில்...
கடித இலக்கியம் என்றோர்
நட்சத்திர சங்கதி ஒன்று உண்டு!
அது வளமாக இருந்தக் காலம் போய்
இப்போது மங்கி தேய்ந்து வருகிறது.
டெலிபோனின் உபயோகப் பெருக்கமும்
ஈமெயில் பரவலும்
தளைத்து கிளைத்துவிட்ட இன்றையப் பொழுதில்
கடித இலக்கியம் நசிந்துவிட்டதில் வியப்பில்லை.
ஒரு காலக் கட்டத்தில்
ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு
அமர்க்களப்பட்ட
காதல் கடிதங்கள் கூட
இப்போதெல்லாம் அவ்வளவாக
உபயோகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
உலக மயமாக்கப்பட்ட காலக்கட்டமிது!
எல்லாமே துரிதம்...
எல்லாமே நேரடி ஆக்,ஷன்!

*

Monday, September 1, 2014

இது பொதுநல வழக்கு அல்ல

பிரதமருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு. அந்த ஜனாதிபதிக்கே பதவி பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரத்தை இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு வழங்கியிருக்கிறது நமது அரசியல் சாசனம்.

சதாசிவம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கவில்லை. அந்த பதவியின் பெயரே இந்தியாவின் தலைமை நீதிபதி என்பதுதான். சீஃப் ஜஸ்டிஸ் ஆஃப் இந்தியா. சொல்லும்போதே எவ்வளவு பெருமையாக இருக்கிறது. அதற்கு மேல் வகிக்க இந்த நாட்டில் பதவிகள் கிடையாது.

மிக உயர்ந்த அந்த ஆசனத்தை அலங்கரித்த நமது சதாசிவம் ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்படுவது விசித்திரம், வேடிக்கை மட்டுமல்ல. அரசியல் சாசனத்துக்கு பொருத்தமானதாகவும் தெரியவில்லை. கேரள ஹைகோர்ட் நீதிபதி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அது அத்தனை கவுரவமானதா?