Sunday, December 5, 2010

விவசாயம்..


வளர்ந்துவிட்டக்
கணிணி உலகத்தில்;
சாயம் போகும்
விவசாயம்!

ஒடிந்துப்போன
முதுகெலும்பால்;
படுத்தப்படுக்கையாய்
வயல்கள்!

பெருகிவரும் ஆசையால்
சுருங்கிவரும் நிலங்கள்;
அடிக்கல்லை வைத்து
அடிக்கணக்கில் விலைப்பேசி;
மடிநிறையப் பணம் கட்டும்
புது வியாபாரம்!

வாய்க்காலுக்கு
வாய் பார்த்து;
நதி நீருக்கு
விதி நொந்து;
அறுவடைச் செய்தாலும்
அடிமாட்டு விலைக்கு!

வளர்ந்து வரும் வேகத்தில்;
பள்ளிப் பாடத்தில்
மட்டும் வரும்
பின்னொருக்காலத்தில்;
விவசாயம் என்றத் தொழில்...
-யாசர் அரஃபாத்
Source : http://itzyasa.blogspot.com/2010/12/blog-post_3930.html

அசத்தும் இணையம் ...



நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இணையபவனையை மக்கள் தொகையோடு ஒப்பிட்டு ஆய்வினை நடத்தியுள்ளது www.internetworlds.com எனும் இணையம்.இந்த ஆய்வில் பல வியப்பூட்டும் சுவாரசியம் மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளது.அந்த ஆய்வின் முடிவு இதோ ...

  1. மொத்த இனைய பாவனையாளர்களில் 42% மான மக்கள் ஆசிய கண்டத்திலிருந்தே இணையத்தை பாவிக்கின்றனர்.
  2. மொத்த இனைய கொள்ளளவு ஏறத்தாள  5 மில்லியன் TERABYTES .மனித மூலையில் சேமிக்க கூடிய தகவலின் கொள்ளளவின் அளவு  1-10 TERA BYTES
  3.  Google சேர்வரின் கொள்ளளவு  200 TERABYTES இது மொத்த கொள்ளளவின் 0.004% மாகும் .
  4. 193 மில்லியன் டொமைன் பெயர்களை இணையத்தில் பதிவு செய்துள்ளனர் .
  5.  500 மில்லயன் மக்கள்  Face book இல் பயனர்களாக பதிவு செய்துள்ளனர்.இதில் சராசரியாக ஒரு பயனருக்கு  130 நண்பர்கள் வீதம் உள்ளனர் .
  6. இனைய பாவனையில்  சீனா 1.3 பில்லியன் பாவனயர்களுடன் முதலாமிடத்திலும் இந்தியா 1.18 பில்லியன் பாவனையாளர்களுடன்  இரண்டாம் இடத்திலும் உள்ளது இதற்கு அடுத்து உலக அளவில்  500 மில்லியன்  பாவனையாளர்களுடன் மூன்றவது  இடத்தில் உள்ளது.
  7. மேலதிக  தகவல்கள் கீழே படங்களில்....

Source : http://qaruppan.blogspot.com/2010/11/blog-post.html

Saturday, December 4, 2010

வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவ கல்லூரி!

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் கூறியுள்ளார். சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழ்நாடு வக்பு வாரியமும், நீடுர் மிஸ்பாஹு ஹுதா மதராஸாவும்
இணைந்து மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவ கல்லூரி மயிலாடுதுறை அருகே உள்ள நீடுரில் அமைக்கப்பட உள்ளது. மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா மதராஸா நிர்வாகம் தங்கள் வக்பு நிலத்தில் இருந்து 23 ஏக்கரை நிலத்தை அளிக்க முன்வந்துள்ளது.


மருத்துவக் கல்லூரியை கட்ட ரூ.60 கோடி வரை தேவைப்படுகிறது. இந்த கல்லூரியை ஒரு அறக்கட்டளைதான் நடத்த உள்ளது. ஒரு உறுப்பினர் கட்டணம் ரூ.10 லட்சம் ஆகும். மொத்தம் 170 பேர் வரை தலா ரூ.10 லட்சம் நன்கொடை தருவதாக உறுதி அளித்துள்ளனர். முதல் கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மருத்துவ கல்லூரி 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு கூறினார். இச்சந்திப்பின்போது இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதயத்துல்லா, வக்பு வாரிய உறுப்பினர் சிக்கந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Source : http://www.inneram.com/2010120512296/wakf-board-to-start-medical-college

Friday, December 3, 2010

உணர்வுகளில் வகையிரண்டு

 

உணர்வுகளில் வகையிரண்டு உணர்ந்தேன் நான்
உள்மனதின் மென்மைதனில் தெளிந்தேன் நான்

கள்ளமில்லா வாழ்வெண்ணி தேடித்தேடி
நிற்கையிலே
...வந்தமர்ந்தாய் நீயும் எந்தன்
உள்ளமெனும் மாளிகையில்
உயிர் கொடுத்தான் இறைவன் அன்று ..
உணர வைத்தாய் என் வாழ்வை நீ இன்று.

Sithi Samira Begam

 

Thursday, December 2, 2010

இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்

41 வெளிநாடுகளுக்கு இணையம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
 
அமெரிக்கா, கனடா , ஜப்பான் , சீனா, Singapore, Malaysia, Hong Kong போன்ற 41 நாடுகளுக்கு இலவசமாக பேக்ஸ் (Fax) அனுப்பலாம்
 
 

தகவல்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் ,
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு அனுப்புவதற்கும்
முன்பு நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டிருந்த பேக்ஸ் (Fax)
என்ற இயந்திரத்தின் பயன்பாடு அதிகமாக இல்லை என்று
கூறினாலும் சில முன்னனி நிறுவனங்கள் இன்றும் பேக்ஸ்
பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றது. இதற்காக நாம்
இப்போது வெளிநாட்டில் இருக்கும் நண்பருக்கோ அல்லது
நிறுவனத்திற்கோ பேக்ஸ் அனுப்ப வேண்டும் என்றால் எந்தவித
பணச்செலவும் இல்லாமல் இலவசமாக நம் இணையம் மூலமே
அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
 
இணையதள முகவரி : http://www.myfax.com/free/sendfax.aspx
 
41 நாடுகளுக்கு மட்டும் தான் நாம் இலவசமாக இந்ததளம்
மூலம் பேக்ஸ் அனுப்ப முடியும். இந்தியாவிற்கு பேக்ஸ்
இலவசமாக அனுப்பும் வசதி இந்த தளத்தில் கொடுக்கப்படவில்லை.
அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா,கொரியா,இத்தாலி,பிரான்ஸ்,
இஸ்ரேல் போன்ற மற்ற அனைத்து (41) நாடுகளுக்கும் நாம்
இந்த இணையதளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்பலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு பேக்ஸ் செய்தி மட்டுமே அனுப்ப
முடியும். 178 File Format -க்கு துணை செய்கிறது. 10 MB அளவிலான கோப்பு வரை நாம் அனுப்ப முடியும். இந்ததளத்தின் மூலம் நாம் பேக்ஸ் அனுப்ப எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.
வெளிநாட்டு வேலைக்கு பேக்ஸ் அனுப்பும் நம் தமிழ்
நண்பர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்
 By:ganik70
நன்றி: மின்னஞ்சல் மூலம் அனுப்பிய சகோதரர் நபி நேசன்  
Source :  http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1116

Wednesday, December 1, 2010

தங்கத்தில் முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்...2


24 கேரட் என்பது சுத்தமான தங்கம். அதில் ஒரு சதவீதம் மட்டுமே காப்பர் கலந்திருக்கும்.அதை995 என்றும், 999 என்றும், 999.9 என்றும் தரத்தன்மையில் பிரிக்கப்படுகிறது.
சுத்தமான தங்கம் பல கிலோக்களில் இருக்கிறது ஆனால் அதிகமாக புலக்கத்தில் ஒரு கிலோ பாராகவும்
116.64 கிராம் பிஸ்கட் என்று அழைக்கப்படும் பத்து தோலாவாகவும் (டிடிபார்)
31.10 கிராம் கொண்ட அவுண்ஸ் காயினும் 20 கிராம் 10 கிராம் என்று சுத்தத்தங்கத்தில் விற்கப்படுகிறது.
எதையும் கலக்காமல் தங்கத்தை வடிவமைக்க முடியாது.

தங்கத்தில் காப்பரின் கலவை அதிகரிக்க அதிகரிக்க அதன் வலுகூடுகிறது.
24கேரட் தங்கக்கட்டிகள் அதிகமாக சுவிஸ் முத்திரையுடன் இருக்கும்.இது சுவிஸ்லாந்துதில் தயாரிக்கப்படுகிறது.நம் இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் சுத்தத்தங்கக் கட்டிகளை உலகத்தரத்திற்கு தயார்செய்து விற்கிறார்கள். ஆனால் உலக வார்த்தகத்தில் இந்திய தங்கத்தை அவ்வளவாக யாரும் சோதிக்காமல் வாங்குவதில்லை.
சுவிஸ் முத்திரைப்பதித்த தங்கக்கட்டிகளை நம்பிவாங்கலாம்.இது உலகதரம் பெற்ற சுத்த தங்கமாகும்.

முதலீடு செய்ய நினைப்பவர்கள் 24கேரட் சுத்தத் தங்கத்தை விலை குறையும் தருவாயில் வாங்கி வைத்துக் கொண்டு விலை கூடும் சமயத்தில் விற்பனைச் செய்யலாம்.ஆனால் இதில் சிரமம் என்னவென்றால் வாங்கக் கூடிய தங்கத்தை
பத்திரப்படுத்த வேண்டிய பொருப்பு அதிகமாகிறது.வங்கிகளில் லாக்கர்ஸ் வைத்திருப்பவர்கள் அதில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

சென்ற வருடம் ஆகஸ்ட் தருவாயில் 10 தோலா (116.64) 10,000 திரஹம் (இந்திய ரூபாய் மதிப்பு 130,000) விற்பனையானது. பலர் தங்கத்தை வாங்கி சேமித்துக்கொண்டார்கள்.
இந்த ஒரு வருடத்தில் சுமார் 4500 திரஹம் (இந்திய ரூபாய் 58,500) 10 தோலாவிற்கு சுமார் பத்து மாதத்திற்குள் லாபம் கிடைத்திருக்கிறது. இன்றைய விலை 14,500. இது இன்னும் கூடும் என்றே வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

தங்கச்சுரங்கங்கள் ஆப்பிரிக்காவில் மின்தட்டுப்பாட்டினால் மூடப்பட்டதாலும் (நம் நாட்டில் பெங்களுருக்கு அருகில் கோலார் தங்கச்சுரங்கம் இருக்கிறது. இதில் தற்போது தங்கம் மிகக்குறைவாகக் கிடைப்பதால் அதை எடுப்பதில் தங்கத்தை விட கூடுதல் சிலவு ஆகிறது என்றக்காரணத்தினால் அந்தச் சுரங்கத்தை மூடிவைத்துள்ளார்கள்.)
தங்கம் தட்டுப்பாட்டினாலும் இணையதள வணிகம் அதிகரித்திருப்பதாலும் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணம்.

பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் டாலரின் மதிப்பு குறைவதினால் தங்கத்தின் விலை ஏறுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இணையதளம் மூலம் வாங்கப்படும் தங்கம் நம் கைக்கு வருவதில்லை அது டிமேட் அக்கவுண்ட் இருந்தால் அந்த கணக்கில் எழுத்துரூபத்தில் வைக்கப்படும்.
விற்கப்படும்போதும் டிமேட் அக்கவுண்ட் மூலமே விற்பனைச் செய்யப்படும்.
கிட்டதட்ட பங்குச் சந்தை முறையில்தான் இணையதள தங்க வர்த்தகம் நடக்கிறது.
தங்கத்தைப் பார்க்காமல் தங்கம் வாங்கி எழுத்துருவில் வைத்துக் கொள்வதும் அதை விற்பனைச் செய்வதுமே ஆன்லைன் டிரேடிங் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கியில் டிமேட் அக்கவுண்ட் மூலம் தங்கம் வாங்குவதை நிறுத்திவைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

22 கேரட் இது 916- 8.40 சதவீதம் காப்பர் 91.60 சதவீதம் தங்கம்.
நம் நாட்டில் 22 கேரட் தங்கம் செய்பவர்கள் அதை பற்றவைக்கும்போது காப்பரைக் கொண்டும் சில்வரைக்கொண்டும் பற்றவைப்பதினால் தங்கத்தின் தரம் குறைகிறது.அது மட்டுமல்ல 91.6 கிராம் தங்கத்திற்கு பதிலாக 85.00 கிராம் மட்டும் தங்கமும் 15 கிராம் காப்பரும் கலந்து நகை செய்வதால் தங்கத்தின் தரம் 18 கேரட்டுக்கு தள்ளப்படுகிறது.
இதில் கேடிஎம் நகைக்கு கூடுதலாக விலை சொல்வார்கள்.

கேடிஎம்(KDM) என்றால் என்ன…?

"கேரட் டிவைசிங் மெட்டல்" என்று சொல்வார்கள். தமிழ் படுத்தவேண்டுமென்றால் உலோகத்தின் தரத்தை பிரித்துக் கொடுக்ககூடியதே .

அதாவது 91.6 கிராம் தங்கமும் 8.40 கிராம் காப்பரும் கலந்து நகைச் செய்யும் பொழுது அதை ஒட்டவைப்பார்கள் அப்படி ஒட்டவைக்கப்டும்போது கேடியத்தினால் பற்றவைப்பதற்கு பெயர்தான் கேடிஎம் நகைகள்(KDM).

வெளிநாடுகளில் விற்கக்கூடிய நகைகள் அனைத்தும் கேடிஎம் நகைகள் அல்ல.... அதன் தரத்தை பரிசோதித்துப்பார்த்தால் 22 கேரட்916 லிருந்து 920 க்குள் இருக்கும்.எப்படி என்பதை பின்னர் பார்ப்போம்...
தொடர்வோம்…
My Photo
கிளியனூர் இஸ்மத்
Source:http://kismath.blogspot.com/2009/11/blog-post.html

தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்


பதிவர் பராரி அவர்கள் பின்னூட்டத்தில் தங்கத்தைப்பற்றி எழுதுங்களேன் என்று கூறியிருந்தார். நான் தங்கக் கடையில் பணிப்புரிவதை அறிந்தவர் என்றே நினைக்கிறேன். இதற்கு முன் பதிவிட்டுக் கொண்டிருந்த கவிவனம் என்ற எனது வலைப்பூ வைரஸ் தாக்குதலினால் முடங்கிப்போனது. அதில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் தங்கத்தை வாங்குபவர்களுக்கும் சில யோசனைகளை எழுதியிருந்தேன். அதை மீள்பதிவாக இங்கு எழுதவில்லை யென்றாலும் தங்கத்தைப்பற்றிய நிகழ்காலத்தின் நிலைகளை எனக்கு தெரிந்த விசயங்களை கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். எழுதத்தூண்டிய நண்பர் பராரி அவர்களுக்கு நன்றி.
(0)
தங்கம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது.வீடு இல்லாமல் இருப்பவர்களைவிட தங்கம் இல்லாமல் இருப்பவர்கள் மிகக்குறைவு என்றேதான் சொல்லவேண்டும். ஆண்களைவிட பெண்களை அதிகமதிகம் கவரக்கூடியது தங்கம்.
(0)
பல ஏழைகளின் வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருப்பது இந்தத்தங்கம்.
வரதட்சணை என்பது பணமாக கொடுக்கப்படும் கைக்கூலி. ஆனால் இன்று வரதட்சணை பணமாக அல்லாமல் பல இடங்களில் தங்கமாக வாங்கப்படுகிறது கொடுக்கப்படுகிறது.100 சவரண் 200 சவரண் என்று வசதிக்கேற்ப கேட்கப்படுகிறது.
(0)
ஆசியா கண்டத்தில் அதிகமான தங்கம் இறக்குமதியும் விற்பனையும் நம் இந்தியாவில்தான் நடக்கிறது. இந்தியர்கள் பெரும்பாலோர் தங்கத்தை சேமிப்பு நோக்கம் கருதியே வாங்குகிறார்கள்.
இப்படி சேமிப்பின் நோக்கத்தில் வாங்கக்கூடிய தங்கம் தரமானது தானா.? நாம் கொடுக்கக்கூடிய பணத்திற்கு தகுந்த மதிப்பு அந்ததங்கத்தில் இருக்கிறதா.? என்ற பல சந்தேகக்கேள்விகள் நம்பலரிடையே இருந்து வருகிறது.
(0)
காய்கறி கடைகளில் நம்பெண்கள் காய்களை ஒடித்துப்பார்த்து அழுத்திப்பார்த்து நசுக்கிப்பார்த்து முகர்ந்துப்பார்த்து வாங்குவார்கள்.
புடவைக்கடைகளில் தரம் நிறம் துணியின் தன்மை என்று பார்த்து பார்த்து பல கடைகளில் ஏறி இறங்கி வாங்குவார்கள்.
ஆனால் தங்கக்கடையில் மட்டும் நம்பெண்களும் ஆண்களும் எளிமையாக ஏமாந்துவிடுகிறார்கள் ஏமாற்றிவிடுகிறார்கள்.காரணம் தங்கத்தை உரசிப்பார்க்க அதன் தரத்தை அலசிப்பார்க்க ‘லேப்;’ வசதி எல்லா ஊர்களிலும் இல்லை.
(0)
இன்று பல நகைக்கடைகளில் வாங்கக் கூடிய தங்கத்தை இயந்திரத்தில் வைத்து சோதனை செய்து கொடுப்பதாக நிறைய விளம்பரங்கள் பார்க்க முடிகிறது. இதுவும் ஒருவகையான ஏமாற்றல்தான்.
இன்றைய பெண்கள் கொஞ்சம் விழிப்புணர்வாக இருப்பதினால் தங்கத்தைப்பற்றி பலவிதமான கேள்விகள் கேட்பதினால் அதே விழிப்புணர்வுக்கு தங்கவியாபாரிகளும் இயந்திரங்களின் மூலம் வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எல்லா நகைக்கடைக்காரர்களும் ஏமாற்றுகிறார்கள் என்று நான் கூறவில்லை. அதிகமானோர் ஏமாற்றுகிறார்கள் என்றே சொல்கிறேன்.

ஒரு கடையில் வாங்கிய நகையை அதை விற்கும் போது இன்னொரு கடைக்காரர் வாங்குவதில்லை அப்படியே வாங்கினாலும் அடிமாட்டு விலைக்கு எடுத்துக்கொள்வார்கள். காரணம் என்ன.? அதன் தரம் அவர்களுக்கு தெரியும்.இது இந்தியாவில் செய்து இந்தியாவில் விற்கப்படும் நகைகளுக்கு மட்டும்தான்.இதே வெளிநாட்டிலிருந்து குறிப்பாக துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாங்கிய நகைகளுக்கு எந்தக்கடைக்கு போனாலும் நல்ல தொகை கிடைக்கும்.காரணம் தரம்தான்.
(0)
ஏன் நம்மவர்கள் அந்தத்தரத்தை கொடுக்கக்கூடாது.?
(0)
அப்படிக்கொடுத்தால் அவர்களால் அதிகமான லாபம் ஈட்டமுடியாது. உல்லாசமான வாழ்க்கை வாழமுடியாது. பல நகைக்கடைக்கார்களின் வாழ்க்கையைப் பாருங்கள். எனக்கு தெரிந்த பத்தர்கள் சிலர் இன்று பெரிய நகைக்கடை அதிபராகத் திகழ்கிறார்கள்.
(0)
சாதாரனமாக துவங்கிய கடைகள் நாளடைவில் அழங்காரமாக வடிவமைத்து விஸ்திரப்படுத்தி குளிர்சாதனங்கள் வைத்து மக்களை கவரக்கூடிய அளவிற்கு வளர்ந்திருப்பார்கள். நேர்மையான வியாபாரத்தில் எளிதில் இப்படியானதொரு வாழ்க்கைக்கு வரமுடியாது என்பது உண்மை. அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அப்பாவிமக்களின் உழைப்பை வேர்வையை சுவைப்பது எந்த வியாபாரிக்கும் நியாயமானதல்ல.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று சொல்வார்கள்.நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் நம் பணத்தை நாம் வாங்கக்கூடிய பொருளை தரமாக நியாயமாக வாங்கலாம்.
(0)
இந்தியாவில் வாங்கிய 22கேரட் நகையை துபாயில் விற்பனை செய்தால் அல்லது நகைமாற்றம் செய்தால் அதற்கான மதிப்பு என்னத் தெரியுமா.?
18kt மதிப்புபோட்டு எடுப்பார்கள் அதாவது ஒரு கிராம் 22கேரட் இந்திய ரூபாய்படி 1500 க்கு வாங்கி இருப்பீர்கள். அதை விற்கும் போது 1200 க்கு வாங்குகிறார்கள்.இந்த 1200- 18kt விலை.300ரூபாயை நாம் ஒரு கிராமுக்கு இழக்கிறோம்.
இதே துபாயில் வாங்கப்பட்ட 22kt தங்கத்தை துபாயிலேயே நகைமாற்றம் செய்தால் 30 ரூபாய் மட்டும் (3திரஹம்)ஒரு கிராமுக்கு குறைத்து எடுத்துக் கொள்வார்கள்.இந்தியாவில் அதேவிலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
அப்படிப்பார்த்தால் 270 ரூபாய் ஒரு கிராமுக்கு இந்திய நகைக்கடைக்காரர்கள் நம்மிடம் அதிகமாக வாங்குகிறார்கள்.
ஒரு கிராமுக்கு 270 என்றால் 10 சவரண் நகை (80 கிராம்) வாங்கப்படும்போது 21600 ரூபாயை நாம் ஏமாறுகிறோம்.இது தரமில்லாத நாம் 22kt என்று நம்பி வாங்கப்படும் நகைக்கு இந்த நிலை.
(0)
22kt, 21kt, 18kt - என்று தரம் வைத்துள்ளார்கள் அது எதன் அடிப்படையில் என்று பார்க்கலாம்.
இந்த கட்டுரை கொஞ்சம் பெரிதாக வரும்போல இருக்கிறது ஆதலால் தொடராக எழுதலாம் என்று நினைக்கிறேன். நகைப்பற்றி உங்கள் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் எழுதுங்கள்.தொடர்வோம்…


தங்கத்தைப் பற்றி மொத்தம் ஏழு தொடராக எழுத இருக்கிறேன்
Source : http://kismath.blogspot.com/2009/10/blog-post_31.html