Sunday, January 9, 2022

நபியும் வந்தது நமக்காக வேதம் தந்ததும் நமக்காக


 பாடல்: A. முஹம்மது மஃரூஃப்

பாடகர்: தேரிழந்தூர் தாஜ்தீன் ஃபைஜி

நபியும் வந்தது நமக்காக

வேதம் தந்ததும் நமக்காக

நபியும் வந்தது நமக்காக

வேதம் தந்ததும் நமக்காக

வாழ்வும் வளங்களும்  நமக்காக

நன்றி இறைவனுக் குரைப்போம் அதற்காக

நபியும் வந்தது நமக்காக

வேதம் தந்ததும் நமக்காக

 

நாளும் தொழுகும் வேளையிலே

ஸஜ்தாவில் விழும் நிலையினிலே

அடியான் இறைவனை நெருங்குகிறான்

நபியும் உரைத்தார் நாமறிவோம்

அடியான் இறைவனை நெருங்குகிறான்

நபியும் உரைத்தார் நாமறிவோம்

நபியும் வந்தது நமக்காக

வேதம் தந்ததும் நமக்காக

 

தினமும் அவனை நினைத்திடனும்

தீய  செயல்கள் தவிர்த்திடனும்

இறைவன் வாழும் இருதயமும்

அமைதி அங்கே நிலைபெறனும் 

இறைவன் வாழும் இருதயமும்

அமைதி அங்கே நிலைபெறனும்

நபியும் வந்தது நமக்காக

வேதம் தந்ததும் நமக்காக

 

அல்லாஹ் தந்த திருமறையும்

அண்ணல் நபியின் மணி மொழியும்

இரெண்டும் நமக்கும் வழிகாட்டும் 

இறுதிப் பயணமும் எளிதாகும்

இரெண்டும் நமக்கும் வழிகாட்டும் 

இறுதிப் பயணமும் எளிதாகும்

நபியும் வந்தது நமக்காக

வேதம் தந்ததும் நமக்காக

No comments: