*விஜய் ஆன்டனி!*
(மூத்த
எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பேரன்)
// கேள்வி:
மற்ற மதங்கள்
மீதான சகிப்புத்தன்மை அபூர்வமாகி வரும் வேளையில் இஸ்லாமிய
அடையாளம் கொண்ட கதாப்பாத்திரங்களில் தொடர்ந்து
நடித்து ஆச்சரியப் படுத்துகிறீர்களே?
விஜய் ஆண்டனி: இதைப் பெருந்தன்மை
என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.
ஓரு சகோதரனாக இது என் கடமை.
என் நண்பர்களில் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும்
இருக்கிறார்கள்.
அவர்கள் என்னை கிறிஸ்துவனாகப்
பார்ப்பதில்லை.
அன்பு மட்டுமே சிறந்த
மதம் என்பதை இந்த மாநகர
வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கிறது.
எந்த மதத்தைச் சேர்ந்த
சகோதரர்களுக்கும் நெருக்கடி என்றாலும் கைகொடுக்க வேண்டியது நம் கடமை.
இஸ்லாமிய
சகோதரர்கள் மீது திணிக்கப்படும் கட்டுக்கதைகளால்
சமீபகாலமாக அவர்களது மன அழுத்தத்தை நானும்
உணர்ந்தேன்.
சினிமாவிலும் அவர்கள் மீதான கட்டுக்கதைகள்
அதிகமானதை சகித்துக் கொள்ள முடியாதவர்களில் நானும்
ஒருவன்.
இதை நான் என்
பெருமைக்காகவும் பேருக்காகவும் செய்யவில்லை.//
‘கைகொடுக்க
வேண்டியது நம் கடமை’
சல்யூட்
விஜய் ஆண்டனி!
நன்றி:
தி இந்து (தமிழ்)
Ark.Kareem-இளங்குமரன்
No comments:
Post a Comment