Friday, July 19, 2019

காற்று ....


பகலோடு 
உறவாடுவதால் 
கோடைக் காற்று ....

இரவோடு 
உறவாடுவதால் 
வாடைக் காற்று ....

மழையோடு 
உறவாடுவதால் 
குளிர்க் காற்று ....

சுகமாக 
உறவாடுவதால் 
தென்றல் காற்று ....


கோபமாக 
உறவாடுவதால் 
புயல் காற்று ....

வெயிலோடு 
உறவாடுவதால் 
அனல் காற்று ....

பாலையோடு 
உறவாடுவதால் 
மணல் காற்று ....

காலையோடு 
உறவாடுவதால் 
சுத்தக் காற்று ....

ஆலையோடு 
உறவாடுவதால் 
அசுத்தக் காற்று ....

சோலையோடு 
உறவாடுவதால் 
பூங்காற்று ....

சாலையோடு 
உறவாடுவதால் 
புகைக் காற்று ....

அணுவோடு 
உறவாடுவதால் 
நச்சுக் காற்று ....

இடமறிந்தும் 
தடமறிந்தும்
வீசுகிற காற்றுக்குள் 
எத்தனை அதிசயம் .....

எல்லாமும் இறைவனின்
செயலன்றி வேறில்லை ....


அப்துல் கபூர் 

No comments: