Friday, June 21, 2019

#வள்ளவிளை / Abu Haashima

குமரி மாவட்டத்தின் ஒரு அழகான கடலோர முஸ்லிம் கிராமம்
வள்ளவிளை.
பெயருக்கேற்றார்போல் கடற்கரையெங்கும் மாநாடு நடத்துவதுபோல் வள்ளங்களின் அணிவகுப்பு..
இங்கேயுள்ள பள்ளிவாசல் அழகாக இருக்கும்.
மிகப்பெரிய தென்னந்தோப்பின் நடுவே அமைந்துள்ளது பள்ளிவாசல்.
பள்ளிவாசல் பின்புறம் வாய்க்கால் ஓடிக் கொண்டிருக்கிறது.
சுற்றிலும் இயற்கையின் வனப்பு.
தண்ணீரின் செழிப்பு.
பள்ளித் தோட்டத்தில் வாழையும் இளநீரும் கைக்கெட்டும் உயரத்தில் காய்த்து தொங்குகின்றன.
நோன்பு கடைசி நாளில் நான் அங்கே போயிருந்தேன்.
ரமளானின் கடைசி நாள் கஞ்சியை
வெகு சிரத்தையாக வைத்துக் கொண்டிருந்தார் சமையல்காரர்.
இனி இந்த கஞ்சி காய்ச்சும் காட்சியைக் காண ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
நல்ல மனிதர்கள்.
அமைதியான ஊர்.
பள்ளி இமாம் கேரளத்துக்காரர்.
கண்ணியமான மனிதருக்கு பொருத்தமான கண்ணியமான தோற்றம்.
பள்ளியின் மிக பக்கத்தில் மீனவர்களின் கிராமம். பெரிய சர்ச்.
கடற்கரையில் மக்கள் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.
என்றென்றும் சாந்தி நிலவட்டும் என
வாழ்த்திவிட்டு வந்தேன்.

                                              Abu Haashima










No comments: