Friday, June 28, 2019

தூர்தர்ஷன் நிகழ்ச்சியின் Free Legal Aid - (27-06-2019)

எனது அண்ணன் மருமகன் ரசீது அவர்கள் பாண்டிச்சேரி பங்கேற்ற தூர்தர்ஷன் நிகழ்ச்சியின் முழு தொகுப்பு. கேள்வி பதில்களுடன்...பார்க்க

Thursday, June 27, 2019

எதை நோக்கிய பயணம்

எதை நோக்கிய பயணம்

இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் தன் அதிகபட்ச சாதனையாக கருதுவது

 பண்டிகை காலங்கள், திருமண நிகழ்வுகள் அல்லது விருந்து நிகழ்ச்சிகள்,சுற்றுலா செல்லுதல் இது போன்றவைகளுக்கு ஒரே மாதிரியான ஆடையணிந்து புகைப்படமெடுத்து பகிர்வதும் பெரும்பாலும் சாப்பாடு நிகழ்வுகளுக்கே இரவென்றாலும் பகலென்றாலும் படையெடுத்துச் செல்வது மட்டும்தான் என்றவகையில் இருக்கும் அவர்களின் நகர்வு
மிகவும் வேதனைக்குறிய விசயமாக உள்ளது.

ஊரில் இருக்கும் இளைஞர்கள் தான் வெளி அனுபவம் என்னவென்று தெரியவில்லை
செய்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்

 வெளிநாடுகளில் வந்து கஷ்டபட்டு
 விடுமுறையில் போகின்றவர்களும் அவர்களோடு சேர்ந்து ஊக்குவிக்கும் விதமாக சுற்றுவது அதைவிட கொடுமை.

Tuesday, June 25, 2019

கேட்டாரே ஒரு கேள்வி!

by Vavar F Habibullah

ஊரறிந்த ஞானியும்
இறை அறிந்த மெஞ்ஞானியும்
நேருக்கு நேர் எதிர்பாராத
விதமாக வழியில் சந்தித்து
கொண்டனர்.

‘எங்கய்யா வேகமாக போகிறீர்!’
ஞானி சற்று இடக்காகவே தான்
கேள்வி கேட்டார்.
“காற்று, என்னை எந்த இடம்
வரை இழுத்து செல்லுமோ
அந்த இடம் வரை போவேன்”

SINGAPORE TRIP-1970 / MOHAMED ALI

SINGAPORE TRIP-1970 / MOHAMED ALI

with J.M.Salih, Mahadi.,Jamal Mohamed

SINGAPORE TRIP-1970 / MOHAMED ALI

SINGAPORE TRIP-1970 / MOHAMED ALI

with J.M.Salih, Mahadi.,Jamal Mohamed

Monday, June 24, 2019

எனக்குப்பிடித்த பாடல்கள் 5 / வே.நடனசபாபதி

எனக்குப்பிடித்த பாடல்கள் 5
உருவத்தை வைத்து ஒருவரை எடை போடலாமா?

உருவத்தில் சிறியதாய் இருப்பவர்கள் என்றால் நம்மில் பலருக்கு ஏளனம்தான். அவர்களைப்பற்றி நம்மிடையே தான் எத்தனைவழக்குச்சொற்கள்!

'கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே'
குள்ளனைக்கொண்டு ஆழம் பார்.
போன்றவை பல உண்டு.

Friday, June 21, 2019

#வள்ளவிளை / Abu Haashima

குமரி மாவட்டத்தின் ஒரு அழகான கடலோர முஸ்லிம் கிராமம்
வள்ளவிளை.
பெயருக்கேற்றார்போல் கடற்கரையெங்கும் மாநாடு நடத்துவதுபோல் வள்ளங்களின் அணிவகுப்பு..
இங்கேயுள்ள பள்ளிவாசல் அழகாக இருக்கும்.
மிகப்பெரிய தென்னந்தோப்பின் நடுவே அமைந்துள்ளது பள்ளிவாசல்.
பள்ளிவாசல் பின்புறம் வாய்க்கால் ஓடிக் கொண்டிருக்கிறது.
சுற்றிலும் இயற்கையின் வனப்பு.
தண்ணீரின் செழிப்பு.
பள்ளித் தோட்டத்தில் வாழையும் இளநீரும் கைக்கெட்டும் உயரத்தில் காய்த்து தொங்குகின்றன.
நோன்பு கடைசி நாளில் நான் அங்கே போயிருந்தேன்.
ரமளானின் கடைசி நாள் கஞ்சியை
வெகு சிரத்தையாக வைத்துக் கொண்டிருந்தார் சமையல்காரர்.
இனி இந்த கஞ்சி காய்ச்சும் காட்சியைக் காண ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
நல்ல மனிதர்கள்.
அமைதியான ஊர்.
பள்ளி இமாம் கேரளத்துக்காரர்.
கண்ணியமான மனிதருக்கு பொருத்தமான கண்ணியமான தோற்றம்.
பள்ளியின் மிக பக்கத்தில் மீனவர்களின் கிராமம். பெரிய சர்ச்.
கடற்கரையில் மக்கள் பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள்.
என்றென்றும் சாந்தி நிலவட்டும் என
வாழ்த்திவிட்டு வந்தேன்.

                                              Abu Haashima

குடிநீர் தட்டுப்பாடு... அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

விஜயகாந்த் சொத்துக்கள் ஏலத்துக்கு வந்தது ஏன்? பிரேமலதா விளக்கம்

பயனுள்ள சமையல் குறிப்புகள்!

ஆக்கம்: சத்தியமார்க்கம்

1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.




2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.



SHAME! SHAME! SHAME!

Thursday, June 20, 2019

Aloor Sha Navas Vs Maalan

தமிழ்_வாழ்க Vs ஜெய் ஸ்ரீராம்
ஆளூர் ஷாநவாஸ் Vs மாலன்
News18 Tamil Nadu காரசார விவாதம்

Sunday, June 16, 2019

கல்வியின்_சிறப்பு

رَبِّ زِدْنِيْ عِلْمًا

ரப்பி ஜித்னி இல்மா

Rabbi zidni ilma

என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! அல்குர்ஆன் - 20 :114

My Lord! Increase me in knowledge - Al Quran 20 :114

சுப்ஹு சிந்தனை #கல்வியின்_சிறப்பு நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் முஹம்மது இஸ்மாயில் பாகவி அவர்கள்

Saturday, June 15, 2019

சிறந்த கவனம் / மேற்கோள்கள்



“திசையின் பற்றாக்குறை, நேரமின்மை அல்ல, பிரச்சினை. நாம் அனைவருக்கும் இருபத்தி நான்கு மணி நேர நாட்கள் உள்ளன. "
ஜிக் ஷிக்லார்

“நீங்கள் எதையாவது சாதிக்க விரும்பும் போதெல்லாம், கண்களைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள், கவனம் செலுத்துங்கள், நீங்கள் விரும்புவதை சரியாக அறிவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யாரும் தங்கள் கண்களை மூடிக்கொண்டு தங்கள் இலக்கை எட்டிவிட முடியாது. "
பாலோ கோயல்ஹோ

"இது எங்கள் இருண்ட தருணங்களில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்."
அரிஸ்டாட்டில் ஓனாஸிஸ்

“கையில் இருக்கும் வேலையில் உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் கவனம் செலுத்துங்கள். சூரியனின் கதிர்கள் கவனம் செலுத்தும் வரை எரியாது. "
அலெக்சாண்டர் கிரகாம் பெல்

சோகம் , பயம் , துக்கம். வலி. வேதனை சந்தோசமா அனுபவிங்கள் - Enjoy the Trouble

Youtube , பா ரஞ்சித் , ராஜா ராஜா சோழன் , சீமான் , மோடி

Friday, June 14, 2019

இது கதையல்ல... நிஜம்


3 மகன்களை கலெக்டர், என்ஜினியர், டாக்டராகிய
துப்புரவு பெண் தொழிலாளி

30 ஆண்டுகள் வெளிவராத ரகசியம் பிரிவு உபச்சாரத்தில் ஊருக்கு தெரிந்தது

ஜார்க்கண்ட், ராஜ்புரா நகராட்சியில்
பார்வையாளர்களை நெகிழ வைத்த சம்பவம்

ராஜ்புரா, ஜூன். 10–

இது கதையல்ல நிஜம்... என்று சொல்ல வைத்திருக்கும் ஒரு சம்பவம். இந்த செய்தியை படிக்கும் வாசகர்கள் உண்மையிலேயே நெகிழ்ந்து போய் விடுவார்கள். இப்படியும் ஒரு தாயா என்று ஆச்சரியக் கேள்வி எழுப்பி விழி ஓரம் திரளும் ஆனந்தக் கண்ணீரை துடைத்து மானசீகமாக அந்த தாயை வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.

Wednesday, June 12, 2019

உள்ளத்தை தூய்மை படுத்துவோம்

#சுப்ஹுசிந்தனை
நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் முஹம்மது இஸ்மாயில் பாகவி

Tuesday, June 4, 2019

ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!

எம் இனிய
ஈகைத் திருநாள் வாழ்த்துகள் …!
                       *********************** *
இந்த உலகில் எல்லாருக்கும் அருள்பாலிப்பவனும்

 மறுமையில் தன்னை நம்பி, தனக்கு அடிபணிந்து நடந்த அடியார்களுக்கு மேலதிகமாக அன்பு செய்பவனும் ஆன

வல்ல அல்லாஹ்,

தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும்,

 இதயத்தில் அன்பையும்,

ஆன்மாவில் மெய்நம்பிக்கையை(ஈமானை)யும்,

சிந்தனையில் ஞானத்தையும்,

செயல்களிலே நன்மைகளையும்

செல்வத்தில் தூயவற்றையும்

வெள்ளமென வெளிப்படுத்துவானாக …

ஆமீன் ….

வானவரை வாழ்த்த வந்த இறை நோன்பு

Saturday, June 1, 2019

#லைலத்துல்_கத்ர் ...#இறுதிப்_பாகம் #குகைக்குள்_இறங்கிய_குர்ஆன் அபு ஹாஷிமா


#இறைவனே_ஆசிரியன்

விந்தை புரிய வந்த
வித்தகனின் தூதரவர்
மென்னகைப் புரிந்தார்
வார்த்தையொன்றை உதிர்த்தார் !

" ஓதுவீராக "
வேதத்தின் முதல் வரியை
வேதம் கொடுத்த முதல்வனின்
ஒளித் தூதர் ஜிப்ரீல்
உலகத்தில்
முதன் முதலாக
அண்ணலுக்கு உபதேசித்தார் !

ஜிப்ரீலின்
அருள் வார்த்தை
ஒளியாக உருவெடுத்து
உத்தமரின் உள்ளத்தில்
ஊடுருவியது !

Bangkok Mosque Tamil Muslim Association in Thailand/ தகவல் தந்தவர் Kiyasudeen Sahabudeen

தகவல் தந்தவர் Kiyasudeen Sahabudeen

TAMIL CARTOON ON ISLAMIC TOPICS

iblis

iblis from mannu on Vimeo.

அருள்மிகு இரவு

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அருள் மிகு இரவு !

almighty-arrahim.blogspot.com
சபீர் அஹ்மது 
ஆற்றல் நிறை அல்லாஹ்
ஏற்றம் உடை யிரவில்
அருள் மறை அளித்தான்
இருள் அகல இகத்தில்