Tuesday, July 10, 2018

முக நூலும் பத்திரிகை மீடியாவும்

முக நூலும் பத்திரிகை மீடியாவும்

1980 களில் எல்லாம் பத்திரிகை
களில் எழுதினால் மட்டுமே வாசகர்
மத்தியில் பிரபலமாக முடியும் என்ற
நம்பிக்கை, எழுத்தாளர் மத்தியில்
நிலவியது. பத்திரிகைகளில் போட்டோ
சகிதம் செய்தி வந்து விட்டால்
கேட்கவே வேண்டாம்.

அப்போது எல்லாம்
நாகர்கோவில் நகரில்,
ஹிந்து ஆங்கில நாளிதழ் யார் யார்
வாங்குவார்கள் என்ற விவரம்
நியூஸ் ஏஜண்டுக்கு நன்கு தெரியும்.
வாங்கும் சிலர் கூட, அதை படித்து
பார்ப்பது இல்லை.கையில் வைத்து
இருப்பதையே ஒரு ஸ்டைலாக
கருதிய காலம் அது.



சாதாரண மக்கள் விரும்பி
படிக்கும் பத்திரிகையாக
தினத்தந்தி திகழ்ந்தது.
படித்தவர் கைகளில்
தினமலர்,தினமணி
பத்திரிகைகள் தவழும்.
சில படித்த பெரிய
மனிதர்கள் செய்திகளை
சுவாரசியமாக உரக்க படித்து
சொல்வதை ரசித்து கேட்கும்
ஒரு பாமர கூட்டம் அவர்களை
சுற்றிவலம் வரும்.தினகரன்
பத்திரிகை கையிலிருந்தால்
அவர்களை திமுக காரர்கள் என்று
உடன் தெரிந்து கொள்ளலாம்.
தினத்தந்தி படிப்பவர்களை
அவர்கள் ஏளனம் செய்வார்கள்.

சினிமா,அரசியல்
செய்திகளுக்காகவே அந்நாளில்
பத்திரிகைகள் விற்பனையாயின.
தினகரன் பத்திரிகை முதன் முறையாக
மருத்துவ பகுதி
வெளியிட தீர்மானித்தது.
அதன் நிறுவனர் திரு கந்தசாமி
அவர்கள் எனது நல்ல நண்பர்.
மருத்துவ பகுதியின் ஆசிரியரான
திரு சவுந்திரராஜனை என்னிடம்
அனுப்பி வைத்தார் அவர்.

குழந்தைகள் மருத்துவ
சம்பந்தமாக உள்ள எனது
மருத்துவ கட்டுரைகள் வாரம்
தோறும் தினகரனில் வெளியாகும்.
இது பல வருடங்களுகாக
தொடர்ந்தது.இதைத் தொடர்ந்து
தினத்தந்தி,மாலை முரசு,ராணி,
வாசுகி என்று எல்லா வார,மாத
இதழ்களில் எழுதினேன்...
எழுதினேன்,சிலகாலம் எழுதிக்
கொண்டே இருந்தேன்.

அந்த நாட்களில், சென்னை
பிரபல டாக்டர்கள் பலரை நான்
தான் தினகரன் பத்திரிகையில்
எழுத தூண்டினேன்.பலர் தமிழில்
எழுத மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
அது சரி..அந்த காலத்தில்
பத்திரிகைகளில் வெளிவரும்
மருத்துவ கட்டுரைகளை
எத்தனை பேர் பொறுமையாக
படித்து பயன் பெற்றிருப்பார்கள்!
Hardly very few people,I hope

இப்போது முகநூலில் நண்பர்கள்
கேட்கிறார்கள், நீங்கள் ஏன்
பத்திரிகைகளில் எழுதக் கூடாது!
எழுதினால்...
முகநூலில் நம்மை விமர்சிப்பவரை
உடன் தெரிந்து கொள்ளலாம்.
பத்திரிகைகளில் இது ஒருபோதும்
சாத்தியமில்லை.இப்போதைய
அவசர உலகில் பத்திரிகை
படிப்பவர் எங்கே இருக்கிறார்கள்!
Hardly people read news papers
nowadays. It has become the costly recreation of the elderly people who struggle to read the content with their defective eye sight.





Vavar F Habibullah

No comments: