Monday, July 16, 2018

உன்னை அறிந்தால்...



நான் ஒரு டாக்டர் ஆக வேண்டும்!
ஒரு தலை சிறந்த ஹீமடாலஜிஸ்ட்
ஆக வேண்டும்.ஹீமோபிலியா என்ற
கொடிய இரத்த ஒழுக்கு நோய்க்கு
புதிய மருந்தை
கண்டு பிடிக்க
வேண்டும்.இந்த நோயின் பிடியில்
இருந்து இளம் உயிர்களை காப்பாற்ற
வேண்டும்.அதற்காகவே நான் உயிர்
வாழ வேண்டும் டாக்டர் !

இன்று, என்னை மருத்துவமனையில்
சந்தித்த இந்த சிறுவனின் மன உறுதி சாதாரணமான ஒரு விசயமல்ல.தன்னால்
நிச்சயம் முடியும் என்ற தன்னம்பிக்கை அவன் கண்களில் பளிச்சிட்டது.


ஹீமோபிலியா என்ற மரபணு
நோயின் பிடியில் வாழும் இந்த
சிறுவன் தான் அநுபவித்த துன்பங்களை
பற்றி இம்மியளவும்
கவலைப் படவில்லை. மாறாக
தன் நோயின் தன்மை பற்றி முழுமையாக
தெரிந்து வைத்திருக்கிறான்.

வாரம் இருமுறை
இதற்கான மருந்தை மருத்துவர்
ஆலோசனைப்படி தன் உடலில்
செலுத்தவும் கற்று வைத்திருக்கிறான்.
தன் மூத்த சகோதரனின் உயிரை
பலி வாங்கிய இந்த நோய் அவன்
குடும்பத்தில் அவனது இளைய
சகோதரனையும் விட்டு வைக்கவில்லை.

சின்ன சின்ன விசயங்களுக்கே
அழுது புரளும் இந்த உலகில்
இந்த அதிசய சிறுவனின் மன
தைரியம்,தன்னம்பிக்கை என்னை
மிகவும் வியக்க வைத்தது.

உன்னை அறிந்தால்..நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
என்று அன்று எம்ஜிஆர் பாடிய
பாடல் நினைவில் வந்து போகிறது.
His willpower at his tender age
Is remarkable. I wish him all success
in his precious life
Vavar F Habibullah

No comments: