Monday, April 24, 2017

மழையில் ஒரு மெளன💘யுத்தம் /

மழையில் ஒரு மெளன💘யுத்தம்
💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
Saif Saif
உன் பார்வையின் அர்த்தங்களை பரிமாறிக் செல்கையில்
பளிச்சென்ற மின்னல்
கணபொழுதில் அதை
களவாடி பறந்து விட்டதே..
உன் இதயத்தின் விம்மல்களை
உள் வாங்கச் சொல்கையில்
இடியோசை ஒன்று அதை
தூரமாக்கி தொலைத்து விட்டதே..
மழையில் தெறித்த
சாரல் நீரில்
வரைந்த முகக் கோடுகளில்
உன் விசும்பல்களின் கண்ணீர் மறைந்திருக்கிறது..

இருட்டில் உன்
நிழல்கள்
மழையோடு
கதை பேசியது போதும்...
உன் கையில் குத்திய
முள்ளை விட
நீ பறித்த வைத்த மலர்
அழகு தான்..
இரவுகளில்
நனைந்தது
ஒருபுறம்
இருக்கட்டும்...
விடியல்கள்
இனி
சுகமாய்
பிரசவிகட்டும்..!!

Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails