Monday, February 6, 2017

என்ன சொன்னார்

போர்ஹே என்ன சொன்னார்
மார்க்வெஸ் என்ன சொன்னார்
பரோட்டா மாஸ்டர் என்ன சொன்னார்
பொடிதோசை முட்டைதோசை அடை அவியல்
தக்காளி ஊத்தப்பம் கொத்து பரோட்டா

அல்லாமா இக்பால் என்ன சொன்னார்
மெளலானா ரூமி என்ன சொன்னார்
இன்பாக்ஸில் ரகசிய சிநேகிதி என்ன சொன்னாள்
கிரில் சிக்கன் ஹைதராபாத் பாஸ்மதி சிக்கன் ஷவர்மா
கொளத்தூர் சீரகசம்பா பிரியாணி தயிர் பச்சடி


போராட்டக் களத்தில் தோழர் என்ன சொன்னார்
காரல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் என்ன சொன்னார்கள்
மார்புக்கச்சை களைந்த கள்ளி கலவிக்குப்பின் என்ன சொன்னாள்
அரசியல் அதிகாரம் எழுச்சி உச்சகட்ட புரட்சி கொதிநிலை
சமதர்மம் சனாதானம் சன்னதம்
#சாந்தி சாந்தி சாந்தி

நிஷா மன்சூர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails