Monday, February 20, 2017

ஏ தாழ்ந்த தமிழகமே!

ஏ தாழ்ந்த தமிழகமே!
இந்த வார்த்தைகளை அண்ணா உதிர்த்ததாக ஞாபகம்.கண்ணதாசன் ஒருபடி மேலே போய்,
'யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் புரியல்லே...அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே' என்று கவிதை நடையில் அவர் காலத்து அரசியல் நிகழ்வை திரைப்பட பாடலாக்கி தமிழனை நெகிழ வைத்தார்.
காலங்கள் பல உருண்டோடி விட்டன.
தமிழ் நாட்டில் இப்போது ஜனநாயகம் பங்கு சந்தை வர்த்தகம் போல் ஆகிவிட்டது.இந்த சந்தையில் அதிகம் உறுப்பினர்களை கொண்ட கார்பரேட் நிறுவனம் கட்சி என்ற பெயரில் அரசியல் அங்கீகாரம் பெற்று விடுகிறது.
சட்டசபையை தங்கள் உறுப்பினர்களால் நிரப் பி விட்டால் தமிழ்நாட்டு நிர்வாகத்தை ஐந்து வருடங்களுக்கு எளிதாக குத்தகைக்கு எடுத்து விடலாம்.
ஆட்சி அமைக்கும் கட்சியின் தலைவரே நிரந் தர தலைவர் அல்லது பொதுச் செயலாளர் என்ற பதவியை பெற்று விடுவதால் கட்சியும் ஆட்சியும் ஒருவரின் கைப்பிடிக்குள் முழுமையாக அடங்கி விடுகிறது.தன்னிகரில் லா அதிகாரம் தனிமனித ஆளுமையின் கீழ் வந்து விடுவதால் சர்வாதிகாரம் தழைத்தோ ங்க ஜனநாயகமே தோள் கொடுக்கிறது.
ஜனநாயக ஏழை நாட்டில் கல்வி அறிவு இல் லாதவரே அதிகம் வாக்களிப்பதால் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பாமர மக்களை வேடிக்கை காட்டி அவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பது என்பது ஹைடெக் அரசியல் கட்சிக ளுக்கு மிகவும் சாதாரண விசயம் தான்.

பணம் பார்ப்பதற்காகவே அரசியல் மீடியாக்கள் அதிக அளவில் தோன்றி விட்டன.மக்களுக்கு முழுமையான அரசியல் எண்டர்டெய் ன்மெண்ட் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகின்றன.கை தேர்ந்த நடிகர்களும் அரசியல் பிரமுகர்கர்கள் என்ற பெயரில் சில அரசியல் புரோக்கர்களும் கமிஷன் அடிப்ப டையில் ஒப்பந்தமாகி விடுவதால் இவர்கள் அலுப்பு தட்டாமல் நிகழ்வுகள் அரங்கேற துணை புரிகின்றனர்.வாங்கும் கமிஷன் அடி ப்படையில் இவர்கள் பணி தொடரும்.
கமிஷன் அதிகம் கிடைக்கும் பட்சத்தில் இந்த ஏஜெண்டுகள் கட்சி மாறுவர்.புதிய பட ஒப்பந் தம் போல் மீடியாக்களில் இவர்கள் தோன்றும் அணியும் மாறும், காட்சியும் மாறும். அரசியல் காட்சிகளையும் சினிமா காட்சிகள் போல் குடும்பத்துடன் பார்த்து ரசித்து மகிழ தமிழ் மக்கள் தயாராகி விட்டனர்.
ஜனநாயகம் என்பது இப்போது தமிழ்நாட்டில் மக்கள் வாக்களித்து தங்கள் எம்எல்ஏக்களை தேர்வு செய்வதோடு முடிந்து விடுகிறது.
வெற்றி பெற்ற எம்எலஏக்கள் தொகுதி மக்களை முற்றிலும் மறந்து விடுகிறார்கள்.
வெற்றி பெரும் கட்சிகளின் கைதூக்கிகளாக மாறி விடுகிறார்கள்.தன்னிலை தாழாமல் இருக்க அரண் அமைத்து கொள்கிறார்கள்.
அரசின் அரவணைப்பில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து தங்கள் பதவி காலத்தை ஓட்டி விடு கிறார்கள்.
மக்களின் தனிப்பட்ட அன்றாட வாழ்க்கை எம்எல்ஏக்களின் துணையின்றியே எப்போதும் போல் நன்றாக நடை பெறுகிறது.
எளிய மக்கள் நலம் காக்க இவர்கள் எந்த உதவியும் செய்வதில்லை.அரசின் திட்டம் சார்ந்த நல உதவிகள் அனைத்தும் இவர்களின் நல விரும்பிகளுக்கே பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.ரேசன் அரிசி கடத்தல் தொட்டு சந்தண மர கடத்தல் வரை ஆட்சி யாளர்களின் அநுமதியோடு தான் வளமாக நடைபெறுகின்றன.
சினிமாவில் முதலீடு செய்வதை காட்டிலும் அரசியலில் முதலீடு செய்வது அதிக லாபத்தை பெற்று தருகிறது.புகழ் வாய்ந்த அரசியல் பிரமுகர்களின் பின்னால் ஒளிந்திருந்து வாழ்கையை ஓட்டியவர்கள் எல்லாம் பெரிய அளவில் அரசியல் பண்ண தயாராகி விட்டார்கள்.கட்சியை கைபற்றினால் ஆட்சி யை கைபற்ற முடியும் என்ற புதிய அரசியல் சித்தாங்கம் டொனால்ட் டிரம்பையே வியக்க வைத்திருக்கிறது.
மீடியாக்களை, வணிக நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி குவிக்கும் கார்பரேட் நிறுவனங்களின் கவனம் இப்போது தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் பக்கம் திரும்பி உள்ளன.பெரிய அரசியல் கட்சிகளில் முதலீடு செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல இப்போது ஆர்வம் காட்டி வருகின்றன.
தமிழக முதல்வர் ஆனால் வளங்கொளிக்கும் தமிழ் மாநிலம் முழுமையையும் தனதாக்க முடியும் என்பது உண்மை... வரலாறாக ஆகி விட்டது. முதல்வரின் தோழியானால் ஒட்டு மொத்த தமிழகமும் தன் வசமாகி விடும் என் பது நம்பகத்தன்மை வாய்ந்த செய்தியாகி விட்டது.122 சட்டமன்ற உறுப்பினர் கைவசம் இருந்தால் தமிழகத்தை முழு குத்தகைக்கு எடுத்து விட முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகி விட்டது.
இனி வருங்காலங்களில் ஈஸ்ட் இந்தியா கம்பெனிகள் தமிழ் நாட்டில் கால் பதிக்கலாம்.
சசிகலா குடும்பங்களை தத்து எடுக்கலாம்.
அவர்கள் மூலம் கட்சிகளை விலை பேசலாம்.
புதிய ராபர்ட் கிளைவுகளும், மவுண்ட் பேட்டன்களும் தமிழ்நாடு பக்கம் வியாபார அரசியல் செய்ய வரலாம்.புதிய காந்தி மகான்கள் இனி தமிழ் நாட்டில் தோன்றலாம்.
சுதந்திரக் குரல்கள் புதுமையாக ஒலிக்கலாம்.
தமிழ் நாடு கூட நாம் கனவு காணும் ஒளிமய மான உடோபியாவாக மாறலாம்.......
ஆனால் அதுவரை...
தமிழக அரசியலில் வெறி பிடித்து அலையும் பதவி மோக போதையில் தள்ளாடும் மனநலம் குன்றிய அரசியல் அரை வேக்காடுகளை கண்டறிந்து புறம் தள்ளுவது எப்படி?
தமிழகத்தின் பண்பட்ட படித்த இளம் தலை முறை நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே நாறிப்போன தமிழக அரசியல் கழி வுகளை அறவே அகற்றி தமிழகத்தை சுத்தம் செய்திட இயலும் என்பது என் போன்றோரின் கணிப்பாகும்.
வரும் காலங்களில் ஓட்டு கேட்டு உங்கள் வீட்டு படிகளில் கால் பதித்து ஏறி வரும் எம்எல்ஏ வேட்பாளர்களை உற்று நோ க்குங்கள்.அவர்களை தகுதி நிர்ணயம் செய்தி டுங்கள்.மீடியாக்களை மூடி விடுங்கள்.சுயமாக சிந்தியுங்கள்.நல்ல முடிவை தேர்வு செய்யு ங்கள்.நல்ல அரசியல் அமைப்பை தேர்வு செய்யுங்கள்.
ஜாக்கிரதை.....மீண்டும் பசுத்தோல் போர்த்திய ஓநாய்களிடம் ஏமாந்து விடாதீர்கள்.ஓநாய்கள் கூட தங்களை சிங்கத்தின் வாரிசுகள் என்று சொல்லித் திரிவதாக சிலர் சொல்லி சிரிக்கிறார்கள்.சிங்கங்களை அதன் குகைகளிலேயே சென்று சந்திக்கும் திறன் பெற்றவன் சிங்கத்தமிழன் என்பதை வரலாற்று ஏடுகள் தெளிவு படுத்துகின்றன.
வானத்தின் மீது பறப்பதாலேயே காக்கை
கிளியாக மாறாது.சிறகை விரித்து ஆடுவதா லேயே வான்கோழி மயிலாகி விடாது.நாய்கள் கடிக்கும் என்பதாலேயே அவை சிங்கங்கள் ஆகி விடுவதில்லை.
சிங்கம் என்றுமே பிறர் பொருளை கொள்ளை யடித்து வயிறு வளர்ப்பதில்லை.

Vavar F Habibullah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails