Sunday, January 8, 2017

நெருக்கம் ....!

வாழ்க்கைப் பயிருக்கும்
விவசாயப் பயிருக்கும்
இடைவெளி நல்லது
செழித்து வளர்ந்து
நற்பலன் தரும்
வயலில்
நாற்றின் நெருக்கம்
விளைச்சலில்
பலனைக் குறைக்கும்
உற்றாரோடு நெருங்கிப்பழக
உறவில் இடைவெளி குறையும்

வேற்றுமைகள் மறையும்
அந்நியருடனான நெருக்கம்
ஆபத்தை அருகழைக்கும்
தூரத்தில் வைத்திருந்தால்
அமைதி தவழும்
சமுதாயத்தில் நெருக்கமாய்
கூட்டாய் செயல்பட்டால்
உறுதியான பலன் கிட்டும்.
இல்லறத்தில்
இறுக்கம் வேண்டாம்
நெருக்கம் அவசியம் வேண்டும்

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails