Kalaimahel Hidaya Risvi
கணவன்-மனைவி♥
மகன்-மகள்♥
அம்மா-அப்பா♥
தம்பி- தங்கை♥
அண்ணன்-அக்கா♥
எந்த உற்ற உறவானாலும் சரி
ரத்தப் பாசமானாலும் சரி
இருப்பவர்களது வரிசையில்
விட்டுச் செல்லாதுதன்னோடுஒட்டிக் கொண்டு
உறவாடிக் கொண்டிருப்பது
இன்று
பலருக்கும் உயிர் நாடியாய் இருப்பது
கைத்தொலைபேசி
அது தொலைந்துவிட்டால்
தொல்லைகள்
மனதில் பலநூறு
சிலர்
உயிரைவிட
அதிகம் நேசிப்பதும் இந்த தொலைபேசிதான்
சுமைகளை விட பாரமான சுமை
இந்த தொலைபேசி
அதனால் தானே
இரவு பகல்பாராது
பேசிப் பேசி
அடுத்தவர்கள் கதைகளை புரட்டிப் புரட்டி
தூக்கமுடியாத அசிங்கங்களையெல்லாம்
தூக்கி தூக்கி
உலகை கைப்பிடிக்குள்
வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்
Kalaimahel Hidaya Risvi
 

 
 
No comments:
Post a Comment