Thursday, January 12, 2017

ஆணென்பவன்

Malikka Farook
ஆணென்பவன்
##########
அன்பைக்குழைத்து
உணர்வுக்குள் பூசத்தெரிந்தவன்...
ஆதரவுக் கரத்தை
அன்போடு நீட்டுபவன்....
இன்பதுன்பத்தில்
இணக்கமுடன் இருப்பவன்..
ஈர்ப்பின் நுண்ணறிவை
என்னவென்று அறிந்தவன்....
உள்ளத்து ஊர்தலை
விளங்க முயல்பவன்....

ஊற்றெடுக்கும் கனவுக்கு
உற்சாகம் தருபவன்....
எண்ணியதை செய்திட
இயன்றவை உழைப்பவன்....
ஏற்றமொன்றை உருவாக்கிட
தன்னையே இழைப்பவன்...
ஐயத்தின் ஐயத்தை
ஐயமின்றி தகர்ப்பவன்....
ஒழுக்க விழுமியத்தை
காக்கத் தவிப்பவன்....
ஓர் எல்லையைத் தொடும்வரை
ஓடிக்கொண்டே இருப்பவன்...
ஒளடத குணத்தோடு
ஆழ்மனதை பேணுபவன்...
அஃதே அனைத்தையும்
அடக்கியாளும் ஆண்மகன்...


Malikka Farook

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails