அமைந்தகரை சந்தையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன், யாரோ என் வேட்டியை இழுத்தது போல உணர்வு, திரும்பிப் பார்த்த போது கிழிஞ்சல் ஆடைகளோடு சுமார் 90 வயது மதிக்கத்தக்க எலுமிச்சை வியாபாரம் செய்யும் பாட்டி
"பாய் தம்பி எலுமிச்சம்பழம் வேணுமாய்யா" என்ற ஏக்கமான குரலை கேட்டவுடன் அருகிலேயே அமர்ந்து விட்டேன்,
ஏன் பாட்டி இன்னமும் வியாபாரம் முடியலயா?
"இல்லய்யா. நாங்கலாம் அன்னன்னைக்கு காலைல கடனுக்கு வாங்கி கடை போடுவோம். ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விக்கும். கடனும் வட்டியும் கொடுத்துட்டு வீட்டுக்கு அரிசி பருப்பு வாங்கிக்குவோம். இப்பலாம் வாங்கனது எதுவுமே விக்க மாட்டேங்குது. யாரும் இங்க வர மாட்றாங்க. என் வயசுக்கு வீட்டு வேலைலாம் செய்ய முடியாததால சாக்குல கடை போட்ருக்கேன். " என கூறி முடிக்கும் முன்பே கண்கள் கலங்கியது
Tuesday, November 29, 2016
Sunday, November 27, 2016
ஃபிடல் காஸ்ட்ரோ குறித்த தலைவர் கலைஞரின் கவிதை :
உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில்
உங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்;
உயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள
ஒரு தலைவர் உண்டு; அவர் தான் பிடல் காஸ்ட்ரோ என்றேன்.
இளம்பிராயத்திலேயே அவர் எழுச்சி முரசு! புரட்சிக் கனல்!
இனங்கண்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டும் மூளைக்குச் சொந்தக்காரர்!
இருளில் சர்வாதிகாரியாகவும், வெளிச்சத்தில் ஜனநாயகவாதியாகவும்
இரட்டை வேட அரசியல் நடத்திய 'பாடிஸ்டா' எனும் பசுத்தோல் வேங்கை;
அந்த விலங்கின் வேஷத்தைக் கலைக்கத் துணிந்து; அதற்கோர்
அணியைத் தயாரித்துப் போரிட்டுத் தோல்வியுற்று; சிறைப்பட்டு;
நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்ட போது தான்
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" எனும்
வைர வரிகளைச் சரித்திரப் புத்தகத்தில்
வையம் புகழ் சித்திரமாகப் பதிய வைத்தார்; காஸ்ட்ரோ!
பாடிஸ்டா ஆட்சியில் பிடலுக்கு பதினைந்தாண்டு சிறை என்றதும் -
பற்றி யெரிந்த மக்களின் புரட்சி நெருப்புக்கு;
ஈடு கொடுக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில்
சிறைக் கதவு திறந்தது, சிங்கம் வெளியே வந்தது - அந்த
சிங்கத்துக்கோர் சிறுத்தை துணை சேர்ந்தது; அதன் பெயர்தான் சேகுவேரா!
தங்கத் தம்பியாம் ராவ் காஸ்ட்ரோவையும், தம்பி போன்ற சேகுவேராவையும்,
அங்கம் வகிக்கச் செய்து ஆர்த்தெழுந்து போரிட்டு முன்னேறவே;
பங்கமுற்ற பாடிஸ்டா பயந்து நடுங்கி - இனி
கியூபா மக்களிடம் தன் சேட்டைகள் செல்லாதென்று
நீயும் வா என்று ஆணவத்தையும் அழைத்துக் கொண்டு;
நாட்டை விட்டே ஓடி விட்டான்; நல்லாட்சி மலர வழி விட்டு!
கேட்டைக் களைந்தெறிந்த காஸ்ட்ரோ; தலைமை வழி காட்டியானார்!
கடமையும் பொறுப்பும் வந்தவுடன்
கடந்த காலத்தை மறந்து விடாமல்;
சோதனைகளை சந்தித்து மறைந்த
ஜோஷ் மார்ட்டியின் தலைமைக்கும்,
சாதனைகள் புரிந்து மறைந்த
சிபாசின் வழிகாட்டுதலுக்கும்,
மதிப்பும் மரியாதையும் அளித்திட
மறக்காத மாவீரர் தான் பிடல் காஸ்ட்ரோ!
'கியூபா' சின்னஞ் சிறிய நாடு
என் எழுத்தும் முகமது அலி அண்ணனும் பின்னே ஞானும் ....!
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் முகநூலில் இணைந்து கவிகள் புனைய ஆரம்பித்த காலத்தில் இரண்டு மூன்று வரிகளில் எழுதி ' செந்தமிழும் நா பழக்கம் ' என்பதற்கிணங்க குறும்பாக்களை எழுதி வந்தேன். அண்ணன் முகமது அலிMohamed Ali நீடூர் அவர்கள் எனது படைப்புகளை இனம்கண்டு மேலும் சீரியதாக பெரிதாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுதற்கு அவர்கள் தந்த ஆக்கத்திலும் ஊக்கத்திலும் கொஞ்சம் பெரிதாக எழுத என்னை நானே பழக்கிக் கொண்டேன்.
எனது குறும்பாக்களை தொகுத்து அவர்களது வலைத்தளத்தில் பகிர்ந்து எனக்கு மிகவும் வியப்பையும் நன்றியுணர்வையும் தந்தது.
அன்றுமுதல் நானும் எழுதிவர அவர்களும் ஆதரவு தந்து அழகு பார்க்கும் அன்பை நேசிக்கும் தம்பிகளில் ஒருவன்
எனது குறும்பாக்களை தொகுத்து அவர்களது வலைத்தளத்தில் பகிர்ந்து எனக்கு மிகவும் வியப்பையும் நன்றியுணர்வையும் தந்தது.
அன்றுமுதல் நானும் எழுதிவர அவர்களும் ஆதரவு தந்து அழகு பார்க்கும் அன்பை நேசிக்கும் தம்பிகளில் ஒருவன்
ராஜா வாவுபிள்ளை
ராஜா வாவுப்பிள்ளைThursday, November 24, 2016
விடியல் வேண்டும் ....!
விடியல் வேண்டும் ....!
சரித்திரம் திரும்பட்டும்சாதிக் கொடுமைகள் திரும்பவே கூடாது
நாகரீகம் முன்னேறலாம்
பின்னேறி பிரிவினைக்கு வழிவகுக்கலாமோ
உயர்வு தாழ்வில்லை பிறப்பில்
ஏனிந்த கொடுமை சாதீயில்
வாக்குகள் பெற்றதால்
வானரங்கள் வானைத்தொட்டிட முடியுமோ
உழைப்பாளிகளுக்குமரியாதை
பணம் செல்லாது என்ற கவலையோ
பேங்க் வாசல்ல நிக்கணுமே என்ற கவலையோ இல்லாமல் தேனீக்களைப்போல் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் பத்திருபது பேரை இன்று எங்கள் வீட்டு முற்றத்தில் பார்த்தேன்.
அத்தனை பேரும் ராஜஸ்தானிகள்.
புதிய டிரான்ஸ்பார்மருக்கு புதிய மின் கம்பிகளை இணைக்கும் வேலையை அநாயசயமாக செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சோர்வில்லை.
முகத்தில் வருத்தமில்லை.
வேலையில் சுணக்கமில்லை.
பெரிய மின் கர்பிகளை வெறும் கைகளால் இழுத்து முறுக்கி இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பத்து நிமிஷம் அந்த வேலையை நாம் செய்தால் நம் கைகள் கிழிந்து
ரத்தம் கொட்டும்.
பேங்க் வாசல்ல நிக்கணுமே என்ற கவலையோ இல்லாமல் தேனீக்களைப்போல் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் பத்திருபது பேரை இன்று எங்கள் வீட்டு முற்றத்தில் பார்த்தேன்.
அத்தனை பேரும் ராஜஸ்தானிகள்.
புதிய டிரான்ஸ்பார்மருக்கு புதிய மின் கம்பிகளை இணைக்கும் வேலையை அநாயசயமாக செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சோர்வில்லை.
முகத்தில் வருத்தமில்லை.
வேலையில் சுணக்கமில்லை.
பெரிய மின் கர்பிகளை வெறும் கைகளால் இழுத்து முறுக்கி இணைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பத்து நிமிஷம் அந்த வேலையை நாம் செய்தால் நம் கைகள் கிழிந்து
ரத்தம் கொட்டும்.
நலமாக இருக்கிறாயா அம்மா
நலமாக இருக்கிறாயா
அம்மா
ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன
நலமாக இருக்கிறாயா
அம்மா
அம்மா
ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன
நலமாக இருக்கிறாயா
அம்மா
Monday, November 21, 2016
ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று .
Priya Thambi
November 14 at 5:39pm ·
ஆயிரம், ஐநூறு செல்லாது என அறிவிக்கப்பட்ட அன்று என்னிடம் செல்லும் நோட்டுக்குள் 316 ரூபாயும், செல்லாத சில ஆயிரங்களும் இருந்தன. இரண்டு நாட்களில் தான் சரியாகி விடுமே அதுவரை டெபிட் கார்டில் பார்த்துக் கொள்ளலாம் என சாதாரணமாக எடுத்துக் கொண்டேன்.
மறுநாளில் இருந்து எங்கும், எப்போதும் கார்டு. பிக் பாஸ்கெட் ஆன்லைன் ஆப்பில் தான் கடந்த சில மாதங்களாக மளிகை, பழங்கள் வாங்குகிறேன். கையில் பணம் இல்லாததால் இந்த முறை காய்கறியும். ஆன்லைனில் மொத்தமாக வாங்கினால் பிரச்னை இல்லை. ஆனால் ஒவ்வொன்றாக வாங்கும்போது ஒவ்வொரு முறையும் டெலிவரி சார்ஜ் தனியாகத் தந்தாக வேண்டும். கூடவே மினிமம் அளவு என ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஆகவே எனக்குத் தேவையானதைத் தவிரவும் அதிகம் வாங்க வேண்டியதாயிற்று.
இன்று மின்னுவுக்கு பள்ளியில் ‘pot painting'. ஒரு பானை வாங்குவதற்காக சனிக்கிழமை ரங்கராஜபுரத்தில் ஒரு கடைக்கு சென்றோம். பானையின் விலை எழுபது ரூபாய். என் கையில் இருக்கும் நூற்று சொச்சத்தை தர பயமாக இருந்தது. குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு வாங்கினால் கார்டு எடுத்துக் கொள்வதாக கடைக்காரர் சொன்னார். ‘’அந்த பானையில நாலு, இந்த விளக்குல இரண்டு, அந்த சட்டி என்னா விலை’’ என 590 ரூபாய்க்கு மண் பொருட்கள் வாங்கினேன்.
பானையில் அடிக்க பெயிண்ட் வாங்க வேண்டும். ஃபேப்ரிக் பெயின் பத்து இணைந்த பாக்ஸ் 190 ரூபாய்.. ‘’மினிமம் 300 ரூபாய்க்கு வாங்கினா தான் கார்டு எடுப்போம்’’.. ‘’இரண்டு பிரஷ், ஒரு பென், ஒரு பேட்’’ என நானூறு ரூபாயை இழுத்து வைத்தேன். இதேபோல் எங்கும், எங்கும் ‘’கார்டு எடுத்துப்பீங்களா?’’ என்கிற கேள்வியோடு செலவை இழுத்துக் கொண்டே இருக்கிறேன். ஒரு காஃபிக்கு கார்டு எப்படி எடுத்துப்பாங்க, வயிற்றில் இடம் இருக்கோ இல்லியோ... குறைந்தது இருநூறு, முந்நூறு ரூபாய்க்கு சாப்பிடு.... இப்படியாக...
உங்களாலாவது புரிந்துகொள்ள முடிகிறதா பெண்ணின் மனதின் ஆழத்தை?
’காதல் கிறுக்கன்’ என்று புனைப்பெயர் சூட்டிக்கொண்ட ஒருவரின் கேள்வி:
"புகாரி ஸார்,உலகம் போற்றும் ஒரு கவிஞர் நீங்கள்.
உங்களாலாவது புரிந்துகொள்ள முடிகிறதா பெண்ணின் மனதின் ஆழத்தை?
சில நேரங்களில் அவள் சிரிப்பின் அர்த்தங்களை?"
*
பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான்.
புரிந்துகொள்ளவே முடியாது என்று
பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான் ;-)
என்று இதற்கு நகைச்சுவையாகப்
பதில் தரலாம்தான்
ஆனாலும் ஒரு வாழ்க்கைச்
சுவாரசியத்தை உங்கள் முன் நான் வைக்கிறேன்
பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்
"புகாரி ஸார்,உலகம் போற்றும் ஒரு கவிஞர் நீங்கள்.
உங்களாலாவது புரிந்துகொள்ள முடிகிறதா பெண்ணின் மனதின் ஆழத்தை?
சில நேரங்களில் அவள் சிரிப்பின் அர்த்தங்களை?"
*
பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான்.
புரிந்துகொள்ளவே முடியாது என்று
பெண்ணின் மனதைத் தெளிவாகவே
புரிந்துகொண்டவன் நான் ;-)
என்று இதற்கு நகைச்சுவையாகப்
பதில் தரலாம்தான்
ஆனாலும் ஒரு வாழ்க்கைச்
சுவாரசியத்தை உங்கள் முன் நான் வைக்கிறேன்
பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்
உண்மையின் திண்டாட்டம் ...!
சுகம் ஒருபுறம்
துக்கம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
சுழலும் வாழ்க்கை ...!
உழைப்பு ஒருபுறம்
சுரண்டல் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
வளர்சியின் வேடிக்கை ...!
துக்கம் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
சுழலும் வாழ்க்கை ...!
உழைப்பு ஒருபுறம்
சுரண்டல் மறுபுறம்
இரண்டிற்கும் இடையே
வளர்சியின் வேடிக்கை ...!
Friday, November 18, 2016
கம்பாலாவில் அந்த கட்டிடத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது..
Saif Saif
கம்பாலாவில் அந்த கட்டிடத்தை அறியாதவர்கள் யாரும்இருக்க முடியாது..
உகாண்டாவிலும் தான்..
இரு நாட்களுக்கு முன்னால் கம்பாலா சென்ற போது அங்கு தங்க நேர்ந்தது...
உறவுகளையும்,
நட்புகளையும்
சந்தித்ததில் மகிழ்ச்சி..
அன்பு,உபசரிப்பு,
பரிவு எதுவும் குறைவில்லை..எப்போதும் போல் சந்தோஷம்..
எப்போது கம்பாலா சென்றாலும் இங்கு தங்குவது தான் வழக்கம்..
இந்த கட்டிடத்தைப் பொறுத்தவரை வசிப்பது பெரும்பான்மை தமிழ் மக்கள் தான்..
இங்கு தங்கும் போது நமதூரில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது...
Wednesday, November 16, 2016
நம்மன்பில் பிரிவில்லை ....!
நின் கரம் கோர்த்தேன்
நித்தமும் நிம்மதி கொடுத்தாய்
நின் நினைவாய் இருந்தேன்
நெஞ்சில் ஆசுவாசம் தந்தாய்
நின் ஸ்பரிசம் உணர்ந்தேன்
நம்மில் பிரிவில்லையென அறிந்தேன்
நின் சுகந்தவாசம் சுவாசித்தேன்
என்னுயிர் உன்வசமென வாழ்கிறேன்
Tuesday, November 15, 2016
பித்தப்பை கற்கள் (Galbladder Stones)
முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.
இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.
சாதிக்க தூண்டிய தொட்டில் பழக்கம்..
Colachel Azheem
குழந்தை பருவத்தில் தினமும் தூங்க வைக்க தந்தை சொல்லிக்கொடுத்த ஹதீஸ சார்ந்த சம்பவங்கள் மனதில் ஆழமாக பதிந்ததால் தற்போது இஸ்லாமிய இணைய உலகத்துக்கு ஒரு சாதனையாளராக உருவெடுத்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்து #சுமையா_ஃபாறூக். .பள்ளிப்படிப்பு காலத்திலேயே நபிகள் நாயகம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த பெற்றோர் மீண்டும் கேள்வி கேட்க ஊக்கப்படுத்தியதும், நண்பர்கள் மூலம் கிடைத்த ஆதரவாலும் Taqva.com எனும் இணைய வீடியோ சேனலை உருவாக்கியதாக கூறியுள்ளார் சுமையா..
கடந்த மார்ச் மாதம் வடிவமைக்கப்பட்ட இவரது Taqva.com சேனலில் 15 பிரிவுகளில் சுமார் 1500 க்கும் அதிகமான பிரபல மார்க்க அறிஞர்களின் வீடியோ பதிவுகள் விளம்பர கலப்பில்லாது பார்க்க கேட்க முடியும்..
கூடவே இஸ்லாமிய வரலாறு, நபிமார்கள் வாழ்க்கை முறை குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் வடிவிலும், குர்ஆன் கிராஅத் ஓத பயிற்சியையும் இந்த தளத்தில் காண முடிகிறது..
சகோதரி சுமையா ஃபாறுக் முயற்சி்க்கு பாராட்டுகள்..
Colachel Azheem
Sunday, November 13, 2016
நீரோடையில் நீந்தும் நினைவுகள்.
by அன்புடன் மலிக்கா
கவிபாடினேன் கவியறியாமல்!
வெண்பாக்களோ! மரபுகளோ!
அறியா மனது
ஆரவாரமில்லாமல் அடுக்கடுக்காய்
அள்ளிகொட்டியது
கவிதைச் சொற்களை!
எனக்குத்தெரிந்த என்வரிகளில்!
நான்
கம்பன் வழி வந்தவளில்லை!
கண்ணதாசன் பேத்தியில்லை!
வாலியின் வார்த்தைகள் கேட்டதில்லை!
வைரமுத்துவின்
வாசக்காற்றும் பட்டதில்லை!-
ஆனாலும்
கவியெழுதுகிறேன்!
கவியெனக்குள் புகுந்ததா! -இல்லை
கவிக்குள் நான் புகுந்தேனா?
கேட்டுக் கேட்டுப் பார்க்கிறேன்
மனதிடம் - அது
காட்டிக்கொடுக்க மறுக்கிறது
கவிவந்த வழிதனையே!
Saturday, November 12, 2016
காங்கோ பயணக்குறிப்பு ....!
ராஜா வாவுபிள்ளை
குள்ளமனிதர்கள் தொடர்ச்சி.
சொல்லில் அடங்காத சுவாரஸ்ய செய்திகளை கொண்டுள்ள குள்ளமனிதர்களின் வாழ்வின் விபரங்களை எழுதிவரும் இக்கட்டுரைத் தொகுப்பில் கழிந்த பதிவில் குள்ளமனிதர் குடும்பத்தில் இளம்வயதினரின் திருமண வைபோகங்கள் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பார்த்தோம்.
இந்த பதிவில் திருமணமான இளம் தம்பதியர் தனியாக தங்கள் இல்லறத்தை எவ்வாறு அமைத்துக் கொள்கிறார்கள் என்று பார்ப்போமா ?
கோலாகலமாக நடத்தப்பட்ட திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும் மணமகன் மணப்பெண்ணை தனது தாய்தந்தையுடன் வசித்துவந்த பாரம்பரிய வீட்டிற்கு அழைத்துச்சென்று அதன் அருகிலேயே ஒருசிறு குடிலை அமைத்து தமது தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் வீட்டிற்கு வந்த மாட்டுப்பெண்ணிற்கு மாமியார் குடும்பம் நடத்தும் கலையையும் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் வாழ்ந்துகாட்டுதல் மூலமாக படிப்பித்துக் கொடுப்பார்.
வட நாடு வாழ்கிறது தென்னாடு தேய்கிறது
Vavar F Habibullah
நேற்று ஓரு பழுத்த திமுக அரசியல்வாதியை சந்தித்தேன். சமீபத்திய நாட்டு நடப்பை பற்றி அதிகமாக பேசினார். இன்றும் அண்ணா
சொன்னது தான் சரி என்று வாதாடினார்.
முதலாளிகளின் பிறப்பிடமே குஜராத்தும் ராஜஸ்தானும் தான். ஈஸட் இந்தியா
கம்பெனிக்காரன் வளர்ச்சிக்கு, முதலில் தடை விதித்ததே முகலாய மன்னன் அவுரங்கசீப் தான். இது பொறுக்காம தான் அவனை
பந்தாடினான் வெள்ளக்காரன்.
டாடா, பிர்லா, கோயங்காவை எல்லாம் வளர்த்து விட்டதே ஈ்ஸ்ட் இண்டியா
கம்பெனிக்காரன் தானே.
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் காரனும் அவங்க வளரத்தான் துணை செஞ்சாங்க.
ஏமன் நாட்டிலே பெட்ரோல் பங்கிலே வேலை பார்த்த அம்பானியை குபேரனாக்கியதும் அவங்க தான்.பண முதலைகளை வளர
விட்டது எல்லாம் காங்கிரஸ்காரன் தான் சார்.
Friday, November 11, 2016
ஹலோ மை அறிவுஜீவி பிரண்ட்ஸ்....
Shahjahan R
அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க. செல்பி எடுக்கிற ஆசையில்தான் கூட்டமா போய் அம்முறானுக. மத்தபடி கூட்டமே இல்லே. பிரச்சினையே இல்லே. நான் நேராப் போனேன், எடுத்துட்டு வந்துட்டேன். எங்கியும் எந்தக் குழப்பமும் இல்லே. எல்லாம் சுமுகமாப் போயிட்டிருக்கு.... அப்படீன்னு சொல்றதை எல்லாம் பார்க்கும்போது குண்டுமணித் தங்கம் வச்சிருந்தவன் கதைதான் ஞாபகம் வருது. அது கிடக்கட்டும்.இவங்க சொல்றதெல்லாம் லாஜிக்கலா சரிதானா? நிசமாவே பணப் புழக்கத்துக்கேற்ப நோட்டுகள் கிடைக்குதா? இங்கே புலம்பிட்டிருக்கிறவன்லாம் மோடி மேலே வெறுப்பால மட்டும்தான் புலம்பறானா? கொஞ்சம் பார்ப்போமா? (கறுப்புப் பணம் அல்ல, கறுப்புப் பொருளாதாரம்தான் பிரச்சினை என்பது பற்றி இங்கே விவாதிக்கப் போவதில்லை.)
புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தித் திணிப்பு இருக்கிறது.
Shahjahan R
புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தித் திணிப்பு இருக்கிறது. தேவநாகரி வரி வடிவ எண்களில் ரூபாயின் மதிப்பு தரப்பட்டுள்ளது.
இதைப்பற்றி எழுதலாம் என்று ஏற்கெனவே நினைத்தேன். ஆனாலும் வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். நேற்று ஹன்சா கேட்டிருந்தார். இன்று பி.ஏ. கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். :)
இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி இந்தி. பயன்படுத்த வேண்டிய எண் முறை - சர்வதேச வடிவிலான எண்வடிவம் என்று அரசமைப்புச் சட்டத்தின் 343ஆவது பிரிவு வரையறுத்துள்ளது.
The form of numerals to be used for the official
purposes of the Union shall be the international form of
Indian numerals.
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பல இருக்கும்போது, ஒவ்வொரு மொழிக்கும் தனி எண்கள் இருக்கும்போது, ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது அநீதி.
வாழ்வெனும் அமைதிக் கடல்....!
எல்லை இல்லா
எண்ணங்கள்
பாதை இல்லா
பயணங்கள்
இலக்கு இல்லா
செயல்கள்
பரிதவிக்கும் பாசப்
பிணைப்புகள்
எண்ணங்கள்
பாதை இல்லா
பயணங்கள்
இலக்கு இல்லா
செயல்கள்
பரிதவிக்கும் பாசப்
பிணைப்புகள்
Sunday, November 6, 2016
படித் தேன் ருசித் தேன்
"சிரித்துக் கொண்டே தீவினை புரிபவன்
பின்னாளில், அழுது கொண்டே தீவினைகளை
அநுபவிக்க நேரிடும்"
கலிகாலத்தில் இப்படித்தான் நிகழும் என்று உங்கள் வேதங்கள் சொல்லவில்லையா?..
மைசூர் மன்னன் திப்பு சுல்தானின் பதிலை கேட்டு மெய் சிலிர்த்து போனார் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சியார் சுவாமிகள்.
மராட்டிய படைவீரர்கள் மடத்தில் நிகழ்த்திய அத்து மீறல்களையும், கோவில்களில் நடத்திய வன்முறை சம்பவங்களையும் மன்னரிடம் முறையிட்ட சுவாமிகளிடம் தான் தக்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மன்னர் திப்பு.
சங்கராச்சாரியார் அறிவுரையின் பேரில் எண்ணற்ற கோவில்களை புணர் நிர்மாணம் செய்வித்தார் மன்னர் திப்பு.
Saturday, November 5, 2016
அஜீஸ் அன்சாரி ...
அஜீஸ் அன்சாரி ...
கொஞ்சம் சுவாரஸ்யமான மேட்டர் இது.கோட்டாறின் மிக பிரபலமான வி.ஐ.பி.க்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த
பக்ருதீன் ஆதம்.
அதென்ன ஆதம் ?
ஆதம்நபி சொர்க்கத்திலிருந்து இறக்கி விடப்பட்ட இடம் குமரி மாவட்டம் என்பது நம்பிக்கை.
அதனால் எங்கள் கோட்டாறு மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு
ஆதம்
ஆதம்பாவா என்றெல்லாம் பெயரிடுவார்கள்.
பக்ருதீன் ஆதத்தின் வாப்பா பெயர் ...
ஆதம்பாவா !
பக்ருதீன் ஆதம் நாகர்கோயில் கோர்ட்டில்
பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்து புகழ்பெற்ற வழக்கறிஞர்.
இவரது மகள் வழிப் பேரன்
அஜீஸ் அன்வர் அமெரிக்காவில்
இன்றைக்கு பிரபல நடிகர்.
அவரைப் பற்றிய ஒரு டாக்குமென்ட்ரி தயார் செய்வதில் அமெரிக்க நிறுவனமொன்று
இறங்கி இருக்கிறது.
ஒபாமாவை ஏன் பிடிக்கிறது?
Kathir Vel
ஒபாமாவை ஏன் பிடிக்கிறது?
------------------------------------------------
நார்த் கேரலினா மாநிலத்தில் நேற்று தேர்தல் பேரணி. ஜனநாயக கட்சி ஏற்பாடு. ஹில்லரி கிளின்டனை ஆதரிச்சு அதிபர் ஒபாமா பேசுகிறார்.
திடீர்னு ஒரு ஆள் எழுந்திரிச்சு நிக்கிறார். கையில ஒரு போஸ்டர். அதுல குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரிக்கும் வாசகம். ’ட்ரம்ப், அமெரிக்காவ மறுபடி நம்பர் ஒன் ஆக்கு!’.
கூட்டம் பூரா கொதிச்சு போச்சு. உக்காரு, பேமானி அது இதுன்னு கூச்சல்.
ஒபாமா அமைதி அமைதின்னு கத்தியும் கூட்டம் கண்டுக்கல. கோரசா கோஷம். போங்கடானு பேச்சை அதோட முடிச்சுகிட்டு போயிருப்பாங்க மத்த தலைவர்கள். ஒபாமா அத செய்யல.
அமைதி அமைதி அமைதி..! ன்னு கூட்டத்தோட கூச்சலுக்கு மேல சவுண்ட் விட்டார். திரும்பத் திரும்ப. விடியோ பாத்தா தெரியும். 50 வாட்டி கத்திருப்பார்.
ஒரு வழியா கூச்சல் அடங்கினதும் ஒபாமா சொன்னார்:
PERFORMERS AND SPECTATORS (The needs of the need)
Vavar F Habibullah
படைப்பாளிக்கு பார்வையாளன் தேவைதலைவனுக்கு தொண்டன் தேவை
பகவானுக்கு பக்தன் தேவை
நடிகனுக்கு ரசிகன் தேவை
முதலாளிக்கு தொழிலாளி தேவை
ஏமாற்ற ஏமாளி தேவை
நல்லவனை கண்டறிய
தீயவன் தேவை.
வரட்சிக்கு மழை தேவை
வறுமைக்கு பணம் தேவை
Friday, November 4, 2016
தேவதையவள் ....!
இல்லத்தேரினில் அனுதினம்தவறாதே
வலம்வரும் தேவதையவள்
=* கனிந்தேமனம் நெகிழ்ந்தேநிதம்
தருமமுதம் திகட்டாதே
அழகேயுருவாகி ஆனந்ததிருவாகி
ஆட்கொள்ளும் தேவதையவள்
=* காதல்களிப்பூட்டி கூடிஉறவாடி
தேனமுதம் தருவாளே
முகில்கார்குழல் பின்நீண்டுதவழ
என்முன்னிற்கும் தேவதையவள்
வலம்வரும் தேவதையவள்
=* கனிந்தேமனம் நெகிழ்ந்தேநிதம்
தருமமுதம் திகட்டாதே
அழகேயுருவாகி ஆனந்ததிருவாகி
ஆட்கொள்ளும் தேவதையவள்
=* காதல்களிப்பூட்டி கூடிஉறவாடி
தேனமுதம் தருவாளே
முகில்கார்குழல் பின்நீண்டுதவழ
என்முன்னிற்கும் தேவதையவள்
பிள்ளைகள் ...
Abu Haashima
ரசம் பூசாமலேநம்மைக் காட்டும்
அசல் கண்ணாடிகள்!
கண்ணாடிகளால் தர முடியாத
ஸ்பரிச இன்பத்தைத்
தொடத்தரும் நிஜக் கண்ணாடிகள் !
விலகினாலும் உருவம் விலகாமல்
கண் முன் நிற்கும்
ஒளிக் கண்ணாடிகள்!
இமைத்தாலும்
கண்ணுக்குள் சிரிக்கின்ற
உயிரோவியக் கண்ணாடிகள் !
காலங்கள் தோறும்
வம்சத்தின் வரலாறு காட்டும்
குடும்பக் கண்ணாடிகள் !
புறச்சுவர்களில் பெயர் எழுதி
அகச்சுவர்களில் ஒளி வீசும்
அழகுக் கண்ணாடிகள் !
Abu Haashima
தோசையம்மா தோசை ஷாஜஹான் சுட்ட தோசை
தோசை வார்க்கும்போது முதல் தோசை வெற்றிகரமாக வந்து விட்டால் முழுக் கிணறும் தாண்டியாயிற்று என்று அர்த்தம். அடுத்தடுத்த தோசைகளும் வெற்றிதான். உங்கள் பிபி எகிறுவதும், வாயில் கெட்ட வார்த்தைகள் துள்ளித்துள்ளி வந்து விழாமல் இருப்பதும் அநத் முதல் தோசையைப் பொறுத்த்து. முதல் தோசையை கல்லிலிருந்து சுரண்டிச் சுரண்டி எடுத்து குப்பையில் போடாதிருக்க என்ன வழி?
கல்லை அடுப்பில் வைத்தபிறகு சரியான சூடேறும் வரை காத்திருக்க வேண்டும். புரோட்டா மாஸ்டர் தண்ணர் தெளித்துப் பார்ப்பதுபோல ஒரு துளி தண்ணீர் தெளிக்க வேண்டும். ஸ்ஸ்ஸ்ஸ்..... என்று தண்ணீர் பொரிந்து துள்ளி மாயமானால் சூடாகிவிட்டதென்று அர்த்தம்.
Subscribe to:
Posts (Atom)