Monday, December 7, 2015

இங்கிலாந்து சென்று வந்த எனது பயண அனுபவங்கள- தக்கலை கவுஸ் முஹம்மத் ..

கடந்த ஒரு வாரகாலமாக இங்கிலாந்து சென்று வந்த எனது பயண அனுபவங்களை நண்பர்கள் கேட்டுகொண்டதால் உங்களிடையே பகிர்ந்து வருகிறேன்.. இன்று அதன் இறுதி பகுதி மிக சுருக்கமாக !....

பயணம் வந்த முதல் இரண்டு நாட்கள் Mohamed Jeseer Jaleel அவர்களுடன் லண்டன் மாநகரை சுற்றி பார்த்தோம்.. பின்னர் பார்க்காத சில இடங்களை பார்ப்பதற்காக இடைப்பட்ட ஒருநாளில் மீண்டும் லண்டன் மாநகருக்கு வந்தோம்.. Hop on Hop Off ( லண்டன் நகரை பஸ்ஸிலிருந்தவாறு அல்லது் ஒவ்வொரு முக்கியமான சுற்றுலா இடங்களில் இறங்கி சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பஸ்ஸில் ஏறிக்கொண்டு நாள் முழுவதும் ( காலைமுதல்மாலைவரை அவர்கள் போட்டுள்ள பஸ் ரூட்டில் எல்லா இடங்களையும் பார்த்தோம் !..


இப்படி நாங்கள் பார்த்த இடங்கள் Tower of London, Buckingham Palace , London Eye, Science Museum, British Parliament, Big Ben Clock , Tower Bridge, Thames River, Hyde Park, Green Park, Trafalgar Square, Central London , Piccadilly Circus, Ripley's Believe it or Not , Wembley Square, Marble Arch, Royal Yacht Britannia, & Crickle Wood ..

இந்த இடங்கள் எல்லாம் டபுள்டக்கர் பஸ்ஸிலும், ஸ்பீட் டிரெயினிலும், அண்டர் கிரவுண்ட் டியூபிலும் (டிரெயினிலும்) ஆக பயணம் செய்து பார்த்தோம் .. Train மற்றும் Tube லும் Full Day Family Pass எடுத்தால் நாள் முழுவதும் எத்தனை தடவை வேண்டு மானாலும் பயணம் செய்யலாம்... மேலும் Oyster Card வாங்கி Recharge பண்ணி எல்லா வகையான Transport களிலும் உபயோகிக்கலாம்... Train Route Network மிக பிரமிப்பாகவே இருக்கிறது.. 1 நிமிடம் முதல் 15 நிமிடத்திற்குள்ளாக அனைத்து வழிகளிலும் Train தொடர்ந்து இருக்கிறது ....இந்த அருமையான ஈசியான வசதி லண்டன் மாநகரத்தில் மட்டுமே ...

லண்டன் மக்களில் மிக பெரும்பாலோர் இந்தவசதிகளைத்தான் சரமாரியாக பயன்படுத்துகிறார்கள் .. காரணம் காரை விட வெகு சீக்கிரத்தில் எந்த இடத்திற்கும் சென்று விடலாம்... மக்கள் ஓட்டமும் நடையுமாய் எப்போதும் காட்சியளிக்கிறார்கள் .. போக்குவரத்து விதிகளை சரியாகவே கடைபிடிக்கிறார்கள்.. கிட்டதட்ட எல்லா ஸ்டேஷன்களும் திருவிழா கோலத்தில் பிசியாகவே இருக்கிறது... இரவு நேரத்தில் கோட்டு சூட்டுடன் கையில் கொழு கொழு நாயுடன் பிச்சைக்காரர்களையும் பார்க்கலாம்....

லண்டன் நகரம்தான் இங்கிலாந்திலேயே மிகப்பெரிய நகரம். ரோமானியர்கள் காலத்திலேயே நிர்மாணிக்கப் பட்ட நகரம்.
கட்டிடங்கள் பசுமையானவையும், பழமையானவையும் , புதுமையானவையும் கலந்து இருக்கிறது ... வீடுகள் பெரும்பாலும் ஓடுகள் வேய்ந்து அடுக்கடுக்காக ஒரே மாடலாக புகை போக்கிகளுடன் காணப்படுகிறது ..தேம்ஸ் நதி லண்டன் நகரில் பல பகுதிகளில் வளைந்து வளைந்து ஓடுகிறது. தேம்ஸ் நதியில் Cruise ல் பயணம் போனோம்.. நதிக்கரையில் உள்ள இடங்களை பார்க்க அருமையாகவே இருந்தது !

எனது இந்த பயணத்தில் நடந்த இன்னொரு சம்பவத்தையும் நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும் ... பொதுவாக UK செல்பவர்கள் மிக அருகில் இருக்கும் சில Europe நாடுகளுக்கும் செல்வார்கள்.. அந்தவகையில் நாங்களும் இங்கிலாந்து பக்கத்தில் இருக்கும் பாரீஸ் மற்றும் சுவிஸ்சர்லாந்து Interlaken எனும் சுற்றுலா நகருக்கும் செல்வதற்கு திட்டமிட்டு டிக்கட்டுகள் , தங்குவதற்கான Hotel எல்லாம் Confirm செய்து Schengen Visa வுக்காக பஹ்ரைனிலுள்ள பிரஞ்சு Embassy யில் Apply செய்தோம் ... ஆனால் ஒரு சில Document கள் complete ஆக இல்லாத காரணங்களால் Schengen Visa reject ஆகியது .. மீண்டும் சரி செய்து விசா re apply பண்ண போதிய கால அவகாசம் இல்லாததால் பாரீஸ் , சுவிஸ்சர்லாந்து செல்லும் எண்ணத்தை வருத்தத்துடன் கைவிட்டோம் ... எந்த தேதியில் Paris ல் நாங்கள் இருக்க வேண்டுமோ அந்த நாளில்தான் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்து Paris முழுவதும் ரத்தக்களமாகி பலஉயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள் என்கிற செய்தியை லணடன் சென்றடைந்த அன்று அறிந்து அதிர்ச்சியுற்றோம் .... அல்லாஹ்தான் எங்களை காப்பாற்றினான் ... அல்ஹம்துலில்லாஹ்.....

அல்ஹம்துலில்லாஹ் ....எதை நாம் விரும்புகிறோமோ அது கிடைக்காமல் போகும் போது நாம் வருந்துகிறோம்.. ஆனால் அல்லாஹ் எதை ,எப்போது ,எப்படி தர வேண்டுமோ அதை உரிய நேரத்தில் தருவான்.. சில சமயம் நமது விருப்பங்கள் நிறைவேறாமல் போனால் அது நல்லத்துக்குத்தான் என்கிற படிப்பினையை இச்சம்பவம் மூலம் பெற்றுக்கொண்டதோடு அல்லாஹ்வுக்கு ஷுக்கூர் செய்தவர்காளாக நிம்மதி ஆனோம்
அல்ஹம்துலில்லாஹ்....


- தக்கலை கவுஸ் முஹம்மத் ....தக்கலை கவுஸ் முஹம்மத்


தக்கலை கவுஸ் முஹம்மத் தனது மகனுடன்
 Adil's MSc (Automotive Engineering )Graduation ceremony photos in Coventry University of England on 17th morning Alhamthulillah ...


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails