Sunday, December 27, 2015

கொடூரப் பிம்பங்கள்...!

Hilal Musthafa
எதிர் எதிர் கருத்துகள் சந்தித்துக் கொள்ளும் வேளைகளில், அந்த அந்த அணியினர் தாக்கிக் கொள்ளுவது சாதாரணசாதாரணமான நடைமுறை. கொஞ்சம் கூடுதலாகப்போய்க் கொடூரமாக மோதிக் கொள்வதும் நடப்புத்தான். உலக வரறாற்றில் இது வாழைப்பழம் சாப்பிடுவது போல லேசானதாகவே நிகழ்ந்து விடுகிறது.

ஆனால் இச்செயலை ஒரு யுத்த தர்மமாகவும் போர் விதியாகவும் புரிந்து கொள்ளும் போதுதான் ஆபத்தின் தலைவாசலுக்குள் நாம் நுழைந்துவிட நேரிடுகிறது. அதிலும் எத்தகைய போரானாலும் பெண்களை அவர்களின் இருப்பிடத்திலோ அல்லது அங்கிருந்து அவர்களைப் பறித்தெடுத்து வந்தோ சிதைப்பதைத் தர்மமாக்கியதுதான் கேவலமான கொடூரம்.

இரண்டு தத்துவங்களின் கடைபிடிப்பால் போர் நிகழ்வதும் உண்டு.
அப்போதும் இதே தர்மங்கள் சட்டவிதிகள் போலவே கடைபிடிக்கப்
படுகின்றன. நாடு பிடிப்புப் போர்களிலும் இது நடைமுறையாகிறது.
தத்துவப் போர்களிலும் இதுவே தர்மமாகவும் மாறிவிடுகிறது.
எல்லாப் பொழுதுகளிலும் பெண்களே சுரண்டப் படுகிறார்கள்.

ஒரு நாடு, வேறொரு நாட்டின்மீது போர் தொடுக்கும் போது தோற்ற நாட்டின் பெண்களை வென்ற நாட்டின் வீரர்கள், கைப்பற்றிக் கொண்டு வந்து அப்பெண்களைச் சீரழிப்பதைப் போர்முறைச் சட்டவிதியாக்கியச்
சரித்திரமும் இங்கே உண்டு.

கிரேக்கப் போர்க்களங்களில், பாரசீகப் போர்க்களங்களில், சுமேரியப் போர்க்களங்களில், எகிப்திய போர்க்களங்களில், அரேபிய போர்க்களங்களில், குப்த, அசோக, சேர, சோழ, பாணடியப் போர்க்களங்களில் இக் கொடூரச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. உலகம் எங்குமே நிகழ்ந்திருக்கின்றன.

நமது பழைய இலக்கியங்களில், பேசப்படும் செய்திகள் நம்மை அதிர வைக்கக் கூடும். தோற்ற நாட்டின் அரச குடுப்ப மற்றும் இதர குடும்பப் பெண்களின் தலைமுடியைக் கத்தரித்து கயிறு தயாரித்து அதைக் கொண்டு தேர் இழுத்த கதை சொல்லப் படுகிறது.

எதிர் நாட்டுப் பெண்களைக் கொத்துக் கொத்தாக அள்ளி வந்து சீரழிந்த
சம்பவங்களை வீர வரலாறாகவும் பதிவு செய்திருக்கின்றனர்.

கிரேக்க வரலாற்றிலும், பாரசீக,அரேபியப் பண்டைய வரலாற்றிலும் இச் செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

தேசத்திற்கான போரானாலும் சரி, தத்துவத்துக்கான போரானாலும் சரி
இந்த நிகழ்வுகள்தாம் அங்கீகரிக்கப் பட்ட அணுகு முறையாக இருக்கின்றன.

பாரசீகத்தில் , கிருஸ்துவப் பரவல் நிகழ்ந்த ஆரம்ப கால கட்டத்தில் யூத மரபினர், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கிருத்துவ மதப் பெண்களை அலைக்கழித் திருக்கின்றனர்.

அரபிய பாரான் சமவெளியில் இஸ்லாம் பரவிய போது அதனை ஒப்புக் கொள்ள மறுத்தவர்கள் அப்பகுதி இஸ்லாமியப் பெண்கள் மீது இந்த அழிம்புகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.

அரபிய மண்ணில் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் ஒரு பெண்மணி. அவரை இஸ்லாத்தைவிட்டு வெளியேற, அரபியப் பழம் மரபினர் கட்டளை இட்டனர்.அதனை ஏற்க மறுத்த அப்பெண்மணியைக் கோரக் கொலை செய்தனர்.

அப்பெண்மணியைப் பாலைவன மணலில் படுக்க வைத்து, அவரின் வலது காலில் கனத்த கயிற்றைக் கட்டி அந்த கயிற்றின் மறுமுனையை ஒரு கொழுத்த ஒட்டகத்தின் காலில் கட்டினார்கள்.
அதே போல மறுகாலிலும் கயிற்றைக் கட்டி இன்னொரு ஒட்டகக் காலில் கட்டினார்கள். பின்பு அந்த ஒட்டகங்களில் இருவர் ஏறி அமர்ந்து
எதிர் எதிர் திசையில் ஒட்டகங்கள் விரட்டினார்கள். ஒட்டகங்கள் ஓடிய வேகத்தில் அந்தப் பெண்மணியின் தேகம் இரண்டாகப் பிழந்து சிதறியது.

பாரசீகர்களும் சளைத்தவர்கள் அல்லர். நம் இந்தியத்துக்குள் நுழைந்த
முகலாயர்கள் நம் தேசத்துப் பெண்களின் மீது நிகழ்த்திய வன்கொடுமைகள் சாதாரணமானதல்ல. இந்து முஸ்லிம் எனப் பாகுபாடின்றிப் பெண்களைக் கோரப்படுத்தி இருக்கிறார்கள்.

ரஷ்யப் புரட்சிக் காலத்தில் லெலினை ஒப்புக் கொண்ட பெண்களும் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாயினர். சீனத்திலும் மாசேதுங்கை
பின்பற்றிய பெண்களுக்கு இந்த வரலாறு நிகழ்ந்திருக்கிறது.
வியட்நாமில், ஹோசிமின் போராட்ட களத்திலும் அமெரிக்க வல்லரசு ராணுவத்தினரின் அநியாயத் தாக்குதலுக்கு லட்சக்கணக்கில்
வியட்நாம் பெண்கள் பலியானார்கள்

ஒரு முறை ஹோசிமின் குறிப்பிட்டாராம், ' அமெரிக்க ஏகாதிபத்திய ராணுவத்தினரை ஒரு கட்டத்தில் நாங்கள் நிச்சயம் அழித்து விடுவோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனாலும் எங்கள் இதயங்களிலும் விழிகளிலும் ரத்தம் என்றும் சிந்திக்கொண்டேதான் இருக்கும். எங்கள் வியட்நாமின் பலப்பல இளம் பெண்களின் நாளையக் குழந்தைகளின் மீது அமெரிக்க ராணுவத்தினரின் சாயல் படிந்திருப்பதை நாங்கள் காண நேரிடலாம்.'

குவைத் அமெரிக்க ராணுவம் தாக்கிய போது சதாம் ஹுசைனும், குவைத்தும் மட்டும் சீரழியவில்லை. குவைத்துப் பெண்களை அமெரிக்க ராணுவ வல்லூறுகள் தாக்கிய கொடூரத்தை சமீபத்தில் உலகம் காணத்தான் செய்தது

கிருஸ்துவ பணியும், மக்கள் சேவையும் புரிந்த கன்னியா ஸ்திரிகளைத் தத்துவ மாறுபாட்டு வெறித் தனத்தால் கற்பழித்துக் கொன்ற கோரங்களும் நடந்துதான் இருக்கின்றன.

முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காகவே ஒரு நிறை மாத கர்ப்பிணிப் பெண்ணின் அடி வயிற்றைக் கிழித்து,உள்ளிருந்த கருவை பிடிங்கி எடுத்து அநதக் கருவின் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எறித்த
கேவலமான அவமானகரமான கொடூரம் இங்கே நடந்துதான் இருக்கிறது.

இந்தியப் பிரிவினையின் போது, இந்து என்பதற்காகவே தீயில் வெந்தழிந்தவர்களும், முஸ்லிம் என்பதற்காகவே வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களும் ஏராளம் . ஏராளம்.அப்போதும் அதிகம் பெண்களே தேடப்பட்டு தேடப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.

26/12/2015 தேதியிட்ட 'தி இந்து தமிழ் நாளிதழலி'ல் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

'தில்வாலே' திரைப்படத்தை நிறுத்தச் சொல்லி மங்களூருவில் 'பஜ்ரங் தளம்' போராட்டம் நடத்தித் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கிறது. இதற்கு மங்களூருவைச் சேர்ந்த பெண்ணியவாதியான
'வித்யா டிங்கர்'எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.

இந்துத்துவ அமைப்பினரைக் கண்டித்து தனது சமூக வலைத்தளத்தில்
குறிப்பிட்டிருக்கிறார். 'திரைப்படக் காட்சிகளை தடுத்தவர்கள் மீதும் அது தொடர்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாகவும்' அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்

இதற்கு இந்துத்துவ அமைப்பினர் கண்டனம்தெரிவித்துள்ளனர்.
இது நிச்சயமாகத் தப்பே இல்லை கண்டனம் தெரிவிப்பது அவர்களின் கருத்துரிமை.அதை ஏற்பதும் மறுப்பதும் கேட்பவர்களின் முழு உரிமை.

ஆனால் பஜ்ரங் தளத்தின் மங்களூருவின் மாநகரப் பொறுப்பாளர் ஷர்வன் பம்ப்வெல் தனது சமூக வலைத்தளத்தில், மனித நாகரீகமே
அற்ற முறையில் ஒரு தாக்குதல் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவை மட்டுமே ஏற்றுக் கொண்டு இந்திய உச்ச நீதி மன்றமே தானே தலையிட்டு விசாரணை நடத்தி உச்சபட்சத் தண்டனை வழங்கினாலும் அது தகுமானதாகவே இருக்கும்.

'இந்துத்துவ அமைப்பினரை எதிர்த்தால், உன்னைப் பலாத்காரம் செய்து விடுவேன்.' வித்யா டிங்கருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி செய்தியில்
ஷர்வன் பம்ப்வெல் என்னும் அந்த மனித ஜந்து மிரட்டல் விடுத்துள்ளது.

வித்தியா டிங்கர் முழுமையான ஒரு இந்துப் பெண்மணிதான். இந்த இந்துப் பெண்மணியைத்தான் பஜ்ரங் தள் பொறுப்பாளர் ஷர்வன் பம்ப்வெல், பலாத்காரம் செய்யப்போவதாக மிரட்டி இருக்கிறார்.
இதற்கு 'நான் இந்துத்துவவாதி' எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

கருத்துரிமையின் கழுத்தை வெறிநாய்போல் குதறி இருக்கிறார்.இந்து ஜந்து குதறித்துப்ப நினைக்கும் கழுத்து ஒரு இந்து சகோதரியின் கழுத்து.

மதவெறிக்கு எந்த இஸமும் தப்பிவிட வில்லை. மதவெறி பேசும் மிருகங்கள் மனிதர்களை அழிக்கக் கூடிய ஆபத்து அறிவிப்புகள்.

ஆப்கானில் தாலிபான்களின் தத்துவ ஒடுக்கு முறைக்குப் பலியான பெண்கள் வேறுவகையானவர்கள். கற்பழிப்புகள் நடக்கவில்லை. அதனையொத்த கொடுமையான அறிவு அழிப்புகள், சமூக உரிமைப்
பறிப்புகள் தாலிபான்களால் பெண்கள் மீது தொடுக்கப்பட்டக் கோரக் கொடூரங்கள்

மலாக்கா என்ற குறுந் தளிர் சுட்டுத் தாக்கப்பட்டது. இதற்கும் மதம் அனுமதி தந்தது என அந்தக் கோரத்தனமான தாலிபான்கள் நியாயம் கற்பித்தார்கள்

இஸ்லாம் மார்க்கத்தில் இதற்கு அனுமதி இல்லை. ஆனால் தாலிபான் மதத்திற்கு இந்தக் கேவலம் உடன்பட்டதாக இருக்கிறது.

மலாக்கா இஸ்லாமியப் பெண் மலர். தாலிபான்கள் என்போரும் தங்களை முஸ்லிம் எனச் சொல்லிக் கொள்கிறார்கள்.

மலாக்காவிடம் இஸ்லாம் மார்க்கம் இருக்கிறது. தாலிபான்களிடம் தாலிபான் மதம் இருக்கிறது. ஐ.எஸ்.ஐக்கும் இதில் விதிவிலக்கல்ல.

இதுபோலவே வித்யா டிங்கர் மிரட்டல் சம்பவமும்.
இந்துக்கள் மகத்தான கண்ணியத்துக் குரியவர்கள். இந்துத்துவாக் காரர்கள் கேவலமான கொடூரத்தின் பிம்பங்கள்.
 Hilal Musthafa

No comments: