Hilal Musthafa
எதிர் எதிர் கருத்துகள் சந்தித்துக் கொள்ளும் வேளைகளில், அந்த அந்த அணியினர் தாக்கிக் கொள்ளுவது சாதாரணசாதாரணமான நடைமுறை. கொஞ்சம் கூடுதலாகப்போய்க் கொடூரமாக மோதிக் கொள்வதும் நடப்புத்தான். உலக வரறாற்றில் இது வாழைப்பழம் சாப்பிடுவது போல லேசானதாகவே நிகழ்ந்து விடுகிறது.ஆனால் இச்செயலை ஒரு யுத்த தர்மமாகவும் போர் விதியாகவும் புரிந்து கொள்ளும் போதுதான் ஆபத்தின் தலைவாசலுக்குள் நாம் நுழைந்துவிட நேரிடுகிறது. அதிலும் எத்தகைய போரானாலும் பெண்களை அவர்களின் இருப்பிடத்திலோ அல்லது அங்கிருந்து அவர்களைப் பறித்தெடுத்து வந்தோ சிதைப்பதைத் தர்மமாக்கியதுதான் கேவலமான கொடூரம்.
இரண்டு தத்துவங்களின் கடைபிடிப்பால் போர் நிகழ்வதும் உண்டு.
அப்போதும் இதே தர்மங்கள் சட்டவிதிகள் போலவே கடைபிடிக்கப்
படுகின்றன. நாடு பிடிப்புப் போர்களிலும் இது நடைமுறையாகிறது.
தத்துவப் போர்களிலும் இதுவே தர்மமாகவும் மாறிவிடுகிறது.
எல்லாப் பொழுதுகளிலும் பெண்களே சுரண்டப் படுகிறார்கள்.