Friday, May 15, 2015

ஆணாதிக்கம்- பெண்ணே தான் காரணம்

ஆணாதிக்கம்- பெண்ணே தான் காரணம்


தன்னை விட இளையனிடம் தன் பலத்தை காட்ட நினைப்பது தான்
ஆதிக்கம் என்று பொருள்கொள்கிறோம். இதையே தான் கொஞ்சம் மாத்தி.......... ஆண் பெண்ணிடம் தன் அதிகாரத்தை செலுத்த முற்படும் போது அங்கே ஆணாதிக்கம்  உருவாகுது. இதற்கு ஆண்கள் தான் முழுக்க முழுக்க காரணம்னு நம் சமுதாயத்தில் ஒரு தோற்றம் வலுப்பெற்றது. என்னை பொறுத்த வரையில்  ஆண்கள் சரியா தான் இருக்காங்க. பெண்களுக்கு தன்னை ஆண்களிடத்தில் அடிமை என காட்ட முயலும்  முட்டாள்தனம் தான் எதற்கு என்று தெரியவில்லை. அவர்களிடத்தில் ஆணாதிக்கம் உருவாகியதற்கும் அதை அழியாமல் பாதுகாத்து வருவதற்கும் முழு பொறுப்பு பெண்கள் தான் என்பதை பற்றிய பதிவு தான் இது
 காலை 5 மணிக்கு வாக்கிங் போயிட்டு வரும் போது நிறைய பெண்கள் வீடுதிரும்பிடுவாங்க. நம்ம தான் சோம்பேறி ஆச்சே... நமக்கு முன்னாடியே சீக்கிரமா வந்து எப்படி தன் நலனின் மேல் அக்கறைபடுறாங்கன்னு நெனச்சுக்கிட்டேன். அப்ப தான் ஒரு பெண் சொன்னார் "நீங்க என்ன ஆம்பிள்ளைங்க வர நேரத்துல வாக்கிங் வரீங்க?" . உடனே நான் ஐய்யய்யோ எனக்கு இப்படி ஒரு ரூல்ஸ் இருக்குறதா தெரியாது. தனித்தனியா நேரம் ஒதுக்கியிருக்காங்களா? எத்தன மணிக்கு பெண்கள் வரணும்?. அதற்கு அவர், இல்லை நானாதான் சொல்றேன். எப்பவும் ஆம்பிளைங்க 5 மணிக்கு மேல வரதுனால "நாங்களாம்" அவங்க வரதுக்கு முன்னாடியே போய்டுவோம்" ஒன்னும் பதில் சொல்ல முடியல....

கல்யாண பெண்ணுக்கு அவங்க அம்மா அட்வைஸ் பண்ணிட்டிருக்குறத கவனிச்சுருக்கீங்களா?

    யார் என்ன சொன்னாலும் அமைதியா இரு. (நீ தான் இனி ஜடமாச்சே)
    அவங்க என்ன சொல்றாங்களோ அதகேட்டு நடந்துக்கோ (நீ தான் இனி மெஷின் ஆச்சே)
    சத்தமா பேசாத (நீ தான் இனி ஊமையாச்சே)
    வீட்ல எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்பறமாதான் சாப்பிடணும். (நீ தான் வேலக்காரி ஆச்சே)
    வீட்ல பெரியவங்க பேசும் போது குறுக்க பேசாத ( நீ தான் இனி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாச்சே...)என்னது???? உன் தனிபட்ட கருத்தா??? ஹைய்ய்யோ ஹைய்ய்யோ.... காமெடி பண்ணாத.. அப்படி ஒன்னு இனி உன் அகராதியில் இல்லையாக்கும்)
    மாமியார்,நாத்தனார் திட்டினாலும் ஒன்னும் எதிர்த்து பேசிடாத (இனி நீ தான் உணர்ச்சியற்ற பொம்மை ஆச்சே)
    அவங்க என்ன சொன்னாலு சரிசரின்னு சொல்லி பொறுமையா போ (ஆமா சாமி போடு)


இப்படி நிறைய விஷயங்கள் சொல்லி அனுப்புவாங்க. இது கேக்குற பொம்மையும் சாரி சாரி பொண்ணும் இப்படிதேன் இருக்கணும் போலன்னு  புகுந்த வீட்டுக்குள் நுழையும் போதே  அடிமைசாசனத்தை எழுதி கொடுத்துடுவா. இத அப்பாவோ அண்ணாவோ சொல்லி கொடுப்பதில்லை. அடுத்த அடிமையை தயாராக்கும் பழைய அடிமை தான்... தன் உணர்வுகளை தீயிலிட்டு கொழுத்தி தன் பிறந்த வீட்டின் பெருமையை காப்பாற்ற நினைப்பதில் எந்த அளவுக்கு திருப்தி அவங்களுக்கு கிடைக்கும்னு தெரியல.. யாராச்சும் சந்தோஷமா இருக்கீங்களா... இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இப்படி நிறைய விசயங்கள் சமுதாயத்தில் பாக்க முடியும்
1. தன் மருமகன் வந்ததும் முகத்தை மறைத்து வாங்க என்று அழைத்த உடன் ஒளிந்துக்கொள்ளும் மாமியார்

2. அனைத்து ஆண்களும் சாப்பிட்ட பின் சாப்பிடும் வீட்டுப்பெண்கள்

3. திருமண விஷேஷங்களில் முதல் பந்தியும் இரண்டாம் பந்தியும் ஆண்களுக்கு விட்டுகொடுத்து கடைசி பந்தியில் சாப்பிட நினைக்கும் பெண்கள்

4. தன் வீட்டில் உள்ள ஆண்கள் சிறுவேலைகளை செய்தாலும் தடுத்து "இதெல்லாம் பொம்ப்ளைங்க செய்ய வேண்டியது" என கூறும் பைத்தியங்கள்

5.சட்டியில இருக்குற கறி,மீனையெல்லாம் அரிச்சு எடுத்து கணவனுக்கு வைத்துவிட்டு கஞ்சி சாப்பிடுபவள்.

6.வரதட்சணையை, சடங்குகளை தீர்மானிக்கும் பெண்கள்

இப்படியாக ஒவ்வொரு செயலுக்கு பின்னும் தன்னை மட்டமானவளாய் காட்டிக்கொண்டு ஆண்களை உயர்த்திவிட முயற்சி செய்ததன் விளைவு தான் ஆண்களிடத்தில் தற்போதிருக்கும் "நா ஆம்ப்ளை டீ" என்ற குணம்.


தன் மகளை அடித்துக்கொண்டிருக்கும் மகனை அப்பவே ஓங்கி கன்னத்துல ஒன்னு விட்டா அவனும் எல்லாரும் சமம் என புரிஞ்சுருப்பான். அத விட்டுட்டு "ஆம்பிள புள்ளைய போயி அடிக்கிறீயான்னு மகளை திட்டுனா....???? இத பாத்து வளரும் அந்த சிறுவனும் காலர தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சுடுவான். அடுத்த ஆணாதிக்கவாதி ரெடி...

 நாலு எடத்துக்கு போற ஆம்பிள்ளைங்க மொதல்ல சாப்பிடட்டும்னு விட்டுகொடுக்கும் பெண்களுக்கு  தெரியல மறைமுகமா அவள் தன்னை அயம் எ வெட்டி அன்ட்  ஒதவாக்கரையாக காட்டிகொண்டிருக்கிறோம் என்பதை....

 எனக்கு மட்டும் ஏன் டா தாலி,மெட்டி? அப்ப நீ கல்யாணம் ஆனவன்னு அடையாளபடுத்த என்ன வச்சுருக்கன்னு கேட்குறத விட்டுட்டு காலைல எழுந்ததும் தாலியை கண்ணுல ஒத்திக்கிடுறதும்,  அது தவறி விழுந்தாலும்  "அச்சச்சோ அவருக்கு எதுவோ ஆக போகுதுன்னு ஜோசியம் சொல்வதும்...... அப்பப்பப்பா.... இதெல்லாம் எந்த ஆண்களும் எதிர்பார்ப்பதில்லைங்குறது வேற விஷயம். ஆனாலும் இவுகதான் தன்னை அடிமைன்னு காட்டிக்கணுமே...

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சகிப்புதன்மை இருக்கவேண்டுங்குறத சம்ரதாயம் மூலமா சொல்லிகொடுக்கணுமாம்? எப்படி? அதாவது கணவன் சாப்பிட்ட  இலையில் பெண்கள் சாப்பிடணும்... என்னைக்காவது ஏன் நா மட்டும் சகிச்சுக்கணும். அவர என் எச்சில் இலையில் சாப்பிட சொல்லுங்கன்னு சொல்லி பார்த்தாதான் என்னவாம்?


என்னமோ காலைல 4 மணிக்கு எந்திரிச்சு மெஷின் மாதிரி வேலை பார்த்துட்டு இரவு எல்லாரும் உறங்கிய பின் படுக்கைக்கு செல்வதை தியாயம்னு மேடைல சொல்றதெல்லாம் ஐய்யோ... கடவுளே........... கஷ்ட்டகாலம்.. ஏன்பெண்கள் அவர்களை இன்னும் சுருங்கிய எல்லைக்குள்ளாகவே வைத்திருக்க வேண்டும்? அப்பறம் இன்னொரு க்ரூப் அலையுது...  நாங்க ஊசி போட்டு  மீச வச்சா சரியா தவறா? பச்சை பச்சையா கேள்விகள் கேட்டா சரியா தவறா?? ஆண்கள் கொழந்தை பெத்துக்கிட்டா என்ன... அப்பதான் ஊருக்குள்ள ஆண்,பெண் என்ற பேதம் இருக்காது கத்திக்கிட்டே பத்து பயபுள்ளைகளோட ரோட்டுல டான்ஸ் ஆடி பிரச்சாரம் செய்யும்... கொடுமை!


முற்போக்குவாதிகளே... முதலில் ஆண்களை  வசைப்பாடுவதை விட்டுவிட்டு பெண்களின் மனநிலையை மாற்றுங்கள்.இல்லைன்னா எத்தன காலம் ஆனாலும் பெண்களின் அடிமை குணம் மாறாது... இப்படி தன்னை தானே தாழ்த்திக்கொள்ளும் பெண்கள் இருக்கும் வரையில் ஆணாதிக்கமும் ஓயாது. எதிர்த்து கேள்வி கேட்டா ஒரு பய வாய் தொறக்கணுமே? கேட்டுதான் பாருங்களேன் பெண்களே....

யோசிங்கோ

ஆக ஆண்களிடத்தில் ஆதிக்க மனப்பான்மை வளர்த்துவிட்டது பெண்களே பெண்களே பெண்களே என கூறி பட்டிமன்றத்தை (ஹி..ஹி...ஹி..) நிறைவு செய்கிறேன்

காளிமார்க் சோடா ப்ளீஸ்........

டிஸ்கி : பெண்கள் தாராளமா கமென்டில் திட்டலாம்... வாங்கிகட்டிக்க அயம் ரெடி அவ்வ்வ்வ்வ்
 ஆமினா
http://kuttisuvarkkam.blogspot.in

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails