சொர்க்கமென்று தெரியாதவன் ...
*****
அல்லாஹ் எனக்குத் தந்த
பேரருளே
என் உம்மாதான்!(அம்மா)
(உம்மா என்றால் கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் சுமந்து பெற்றெடுத்து தாய்ப்பால் தந்து வளர்த்த தாய் )
***
உம்மா முகத்தில்தான்
எத்தனை அமைதி...
எத்தனை சாந்தம்!
***
முக்காடு நீங்காதா உம்மா
வீட்டு மேகத்துக்குள்
மூடிக் கிடந்த
முழு நிலா!
***
முஹம்மதரின்
உம்மத்தாயிருந்ததில்
அர்த்தமுள்ள ஆச்சரியம் என் உம்மா!
***
பெருமானாரின் உம்மாப் பெயரே
என் உம்மாவுக்கும்..
ஆமினா உம்மா!
உம்மாவின் தாயார் பெயர்
கதீஜா!
உம்மாவின் வாப்பா பெயர்
நைனா முஹம்மது!
உம்மாவின் வாழ்க்கையில்
வசந்தமாய் வந்த
என் வாப்பாவின் பெயரோ...
பக்கீர் முஹம்மது!
***
ஒரு பெண் குழந்தைக்கு
ஆசைப்பட்ட
உம்மா....
ஆசை ஆசையாய்
ஆறு பிள்ளை பெற்றாள்!
ஆறும் ஆண் பிள்ளை!
***
தஸ்பீஹ் மாலையில்
மணிகளை கோர்த்ததுபோல்
பிள்ளைகளுக்கு பெயரிட்டாள்
உம்மா!
***
ஹபீபுல்லாஹ்
ரஹீமுல்லாஹ்
கரீமுல்லாஹ்
அதாவுல்லாஹ்
நஜீமுல்லாஹ்
சைபுல்லாஹ்
அல்லாஹ்வின் பெயர்களைக் கொண்டே
பிள்ளைத் தமிழ் எழுதிய
உம்மாதான்
என் தமிழ் ஆசான் !
***
இரக்கம் ...
உம்மாவின் கூடப் பிறந்த குணம்
பசித்தோர் தேடிவந்தால் மட்டுமல்ல...
தேடித் பிடித்தும்
பசி தீர்க்கும் சீமாட்டி...
வீட்டையே
யாகசாலையாக ஆக்கி
ஆக்கிப் போட்டு ஆக்கிப் போட்டு
ஆனந்தம் கொண்ட பெருமாட்டி!
***
எத்தனையோ குமர்களுக்கு
மணமுடித்து வைத்து
மகளில்லாத மனக்குறையை
விரட்டிவிட்டு
மன நிறைவானவள் உம்மா!
***
உம்மாவின் நகைகளிலெல்லாம்
எனக்குப் பிடித்தது
எப்போதும் மாறாத
அந்த புன்னகைதான்!
***
சுகவீனம் வந்தாலும்
முகம் சுளிக்காத சீதேவி...
இன்பத்திலும் துன்பத்திலும்
சிந்தை மாறாத ஈமான்தாரி !
***
கால் வலிக்கும் போதெல்லாம்
இதமாகப் பிடித்து விடுவேன்..
கொஞ்ச நேரத்திலேயே
"போதும்..போ .."என்பாள்
காரணம் கேட்டால்
"உனக்கு கை வலிக்கும் " என்பாள்!
***
சிறு பிள்ளை எனக்கு
அன்றைக்குத்
தெரியாமல் போய் விட்டது...
நான் பணிவிடை செய்தது
"சொர்க்கத்தின் பாதத்திற்கென்று"
அபூஹாஷிமா வாவர்
அபூஹாஷிமா வாவர்
கண்மணிகள்..>
பேத்தி ...... >
ஹனியா
பேரன் ....... ரசீன் >
6 comments:
/// இன்பத்திலும் துன்பத்திலும்
சிந்தை மாறாத ஈமான்தாரி ! ///
சிறப்பான வரிகள் பல...
வாழ்த்துக்கள் பல...
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது கருத்துரைக்கு நன்றி
கவிதை வரிகள் நெகிழவைத்து விட்டது.உங்கள் உம்மாவைப்பற்றிய கவிதைதானே?
//தஸ்பீஹ் மாலையில்
மணிகளை கோர்த்ததுபோல்
பிள்ளைகளுக்கு பெயரிட்டாள்
உம்மா!
***
ஹபீபுல்லாஹ்
ரஹீமுல்லாஹ்
கரீமுல்லாஹ்
அதாவுல்லாஹ்
நஜீமுல்லாஹ்
சைபுல்லாஹ்// இவ்வரிகளில் நீங்கள் எது?
//பெருமானாரின் உம்மாப் பெயரே
என் உம்மாவுக்கும்..
ஆமினா உம்மா!
உம்மாவின் தாயார் பெயர்
கதீஜா!
உம்மாவின் வாப்பா பெயர்
நைனா முஹம்மது!
உம்மாவின் வாழ்க்கையில்
வசந்தமாய் வந்த
என் வாப்பாவின் பெயரோ...
பக்கீர் முஹம்மது!// பெயர் வரிசியினை பார்த்து பிரம்மித்து விட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்!
கவிதை வரிகள் நெகிழவைத்து விட்டது.உங்கள் உம்மாவைப்பற்றிய கவிதைதானே?
//தஸ்பீஹ் மாலையில்
மணிகளை கோர்த்ததுபோல்
பிள்ளைகளுக்கு பெயரிட்டாள்
உம்மா!
***
ஹபீபுல்லாஹ்
ரஹீமுல்லாஹ்
கரீமுல்லாஹ்
அதாவுல்லாஹ்
நஜீமுல்லாஹ்
சைபுல்லாஹ்// இவ்வரிகளில் நீங்கள் எது?
//பெருமானாரின் உம்மாப் பெயரே
என் உம்மாவுக்கும்..
ஆமினா உம்மா!
உம்மாவின் தாயார் பெயர்
கதீஜா!
உம்மாவின் வாப்பா பெயர்
நைனா முஹம்மது!
உம்மாவின் வாழ்க்கையில்
வசந்தமாய் வந்த
என் வாப்பாவின் பெயரோ...
பக்கீர் முஹம்மது!// பெயர் வரிசியினை பார்த்து பிரம்மித்து விட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்!
Abu Haashima Vaver
சாதிகாவின் கமெண்ட்ஸ் என்னையும்தான் நெகிழ வைத்து விட்டது... நன்றி சாதிகா... நன்றி தனபாலன் ... நன்றி முகம்மதலி அண்ணே.
Abu Haashima Vaver
சாதிகாவின் கமெண்ட்ஸ் என்னையுதான் நெகிழ வைத்து விட்டது... நன்றி சாதிகா...
நன்றி தனபாலன் ...
நன்றி முகம்மதலி அண்ணே.
Post a Comment