Tuesday, May 14, 2013

உறவும், பாசமும்,மார்க்கமும்(மதமும்) மனிதநேயத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்

Dr.Suri mama letters.Dr.Suri is a Brahmin how is attached with our family.It is wonderful .

எங்கள் தகப்பனாரும்(S.E..A. Abஶ்ரீdul Kader) அவர்களது மூத்த சகோதரர்ரும் (S.E.A.Abdul Rahman) மிகவும் பாசத்தோடு வாழ்ந்தார்கள்.அவர்கள் வாழும்  காலத்தில் மயிலாடுதுறையில் சிறப்பாக வியாபாரம் செய்தார்கள் .அனைத்து மக்களுடனும் நேசமாக இருந்தாகள் . பிராமண குடும்பத்தை சார்ந்த பெரியவர் குடும்ப பாசத்தோடு  இருக்க முதியோராகி உடல்நலம் பாதிக்கப் பட்டு இறக்கும் தருவாயில் தனது சிறு வயது மகளையும் (ராஜம்) மகனையும்  (சூரி) பாதுகாத்து வளர்த்து வரும் பொறுப்பினை S.E.A.Abdul Rahman அவர்களிடம் விட்டு இறைவனடி சேர்ந்தார். .அவர்கள் வசதி குறைவானவர்கள் அல்ல.
அவர்களை பிராமண முறைப்படி  வளர்த்து வந்தார்கள். எங்களுக்கு அவர்கள் உடன்பிறவா சகோதரி,சகோதரர்ராக வளர்ந்தாகள்.
ராஜம் அக்காவுக்கு கேப்டன் Dr . அண்ணாசாமி அவர்களுக்கு திருமணம்  செய்து வைத்தார்கள் , Dr. அண்ணாசாமி சென்னை T .நகரில் புகழ்பெற்ற கண் மருத்துவராக பணி  செய்தார்.
அண்ணன் Dr  சூரி அவர்கள் லாயட்ஸ் சாலையில் மருத்துவ தொழிலும் மற்றும் மருந்தகம் வைத்திருந்தார் .அந்த கடையின் பெயரின் முதல் மூன்று எழுத்துகள் எங்கள் குடும்பத்தைக் குறிக்கும் (SEA )சொல்லாக இருக்கும் கடையின் பெயர் SEAMARS CORPARATION .   SEA - எங்கள் குடும்பத்தைக் குறிக்கும், R -ராஜம்,S- சூரி அவர்களது குழந்தைகள் சிறப்பாக படித்து உயர்ந்த பதவியில் அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் வாழ்கிறார்கள்.
Dr  சூரி அவர்கள் வாழும் காலம் வரை எங்களது பெரியப்பா படத்தினை கடவுள் படத்திற்கு பக்கத்தில் வைத்து மரியாதை தருவார் .
அவர்கள்  இஸ்லாமிய முறைப்படியே எங்களை முறையிட்டு அழைபார்கள்.
(பெரிய சரித்திரம். சுருக்கமாக தந்துள்ளேன்) நான் சென்னையில் படித்ததால் தொடர்ந்து அவர்களை பார்த்து வருவது வழக்கம்
அவர் எழுதிய மடல்களை அவசியம் பாருங்கள்.
ஆரம்பம் 1 ல் 786 வைத்து தொடங்கும்.
( கடிதத்தை கிளிக் செய்து பெரிது படுத்தி படியுங்கள் )

                                               Dr.Suri 
 Dr  சூரி தம்பதியர்களுக்கு ஒரு மகன் பாலா (அமெரிக்காவில் உள்ளார் )மூன்று மகள்கள் கீதா ,தாரா ,ரமா .
ரமா சென்னையில் பற்கள் சிகிச்சை மருத்துவராக (Dentist)பணி செய்கிறார் 


DR Ramakumar
+(91)-44-24994111
No 2/21, 1st Cross Street, Mylapore, Chennai - 600004, CIT Colony Next To Farm Fresh Vegetable Shop Behind Nilgiris (Map)







6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சக மனிதர்களை மனிதர்களாக மட்டுமே அவர்கள் பார்வையில் இருந்துள்ளது... வாழ்த்துக்கள்...

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

என் கொள்ளு தாத்தா குறித்த ஒவ்வொரு பார்வையும் நெகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் அளிக்கின்றது. இந்த விஷயம் முற்றிலும் புதிதாக இருக்கும் வேலையில் உற்சாகத்தையும் அளிக்கின்றது. என் அம்மா மற்றும் அத்தா, ஏன் நீங்க கூட இவ்விசயத்தை இதுவரை என்னிடம் கூறாதது அல்லது நான் அறிந்திட முயலாதது வருத்தத்தை தருகின்றது.

மற்றுமொரு அழகான பதிவிற்கு ஜசாக்கல்லாஹ்,

உங்கள் பேரன்,
ஆஷிக் அஹமத் அ

mohamedali jinnah said...

@ ஆஷிக் அஹமத் அ
உலக சரித்திரம் படிக்கிறோம் .உற்றார், உறவினர் ,உடன் வாழ்வோர் சரித்திரம் தெரிந்துக் கொள்வது அவசியம். தெரிந்தவர் தெரியாதவர்களுக்கு தெரிய வைப்பது கடமை. அது உறவை மேன்மை படுத்தும்.மனித நேயம் மேன்படும் .
பேரனின் அறிவு எப்பொழுதும் தேடலை நோக்கியும் ஆய்வை நோக்கியும் இருப்பது மகிழ்வைத் தருகின்றது. தேடுங்கள் கிடைக்கும் அதன் அடிப்படையில் பேரனுக்கு தெரிய வந்தது மகிழ்வை தருகின்றது

Anonymous said...

மாமாவின் மற்றுமோர் அருமையான பதிவு.
என்னுடைய சிறு வயதில் சூரி மாமா அவர்களை அவர்களது சென்னை இல்லத்தில் சந்தித்த நினைவு இன்றும் எனக்கு பசுமையாக உள்ளது. முன்பு சூரி மாமா அவர்கள் எனது தாயாருக்கு (பாத்திமா ஜின்னா) எழுதிய வேறு சில கடிதங்களை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உண்மையில் அவர்களுடைய அன்பையும் பாசத்தையும் நினைத்து வியந்து, நெகிழ்ந்து போனேன். உடன் பிறந்த சகோதரர்கள் மனக்கசப்போடும், சண்டையிட்டும் வாழ்த்து வாழும் இக்கால கட்டத்தில் இத்தகைய பாசத்தை பற்றிய பதிவு காலத்தால் மிக அவசியம். அவர்களை இந்த அளவு ஒற்றுமையோடு வளர போதித்த, வளர்த்த அப்பா மார்கள் மிக சிறந்த மனிதர்கள்.
சூரி மாமா அவர்களின் குடும்பத்தினரோடு பிறகு நான் தொடர்பில் உள்ளது மகிழ் அளிக்கிறது. சூரி மாமா அவர்களின் மகள் ரமா அவர்களிடம் தான் நான் பல் சிகிச்சை எடுத்து கொண்டேன்.
உலக மக்கள் அனைவரும் உண்மை சகோதரர்களாக வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
அன்புடன் புர்ஹான்

mohamedali jinnah said...

Anonymous said... அல்ல
அன்புத் தங்கை பாத்திமா ஜின்னாவின் இளைய மகன் கணினி பொறியாளர் அன்புடன் புர்ஹான்.
மிக்க மகிழ்வு உமது கருத்துரைக்கு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இப்படியான சொந்தங்களை அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி!