" பெட்டகம் " பாகம் ஒன்று 2001 ல் வெளியிட்டேன். A 4 சைசில் 356 பக்கங்கள் கொண்டது. இதில் குமரி மாவட்ட வரலாறு மட்டுமல்ல... தமிழக முஸ்லிம்களின் வரலாறும் இந்தியாவில் இஸ்லாம் வளர்ந்த வரலாறும் இருக்கிறது. இப்படிப்பட்ட வரலாற்று நூல்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு புதுசு என்பதால் அப்போது இதற்கு
மக்களிடம் அத்தனை வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. ( 2001ல் இதன் விலை வெறும் 100 ரூபாய். அதுவே மிகவும் குறைவு. ஆனால் மக்களுக்கு அது அதிகம் )இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுத் தொகுப்பு
தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு அதுவரை கிடைக்கவும் இல்லை. நான் மனம் நொந்து போனது உண்மை . கொஞ்சம் மக்களே ஆர்வத்தோடு வாங்கிப் படித்து பிரமித்தார்கள். பத்திரிகைகளில் வந்த விமர்சனத்தை பார்த்துவிட்டு மாற்றுமத மாணவ மாணவிகளும் பேராசிரியர்களும் என ஏராளமானவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து என்னைத் தேடி வந்து வாங்கினார்கள். மேலும் பல செய்திகளை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். பெட்டகத்தை ரிசர்ச் செய்து பலர் டாக்டர் பட்டமும் பெற்றார்கள். கோட்டாரில் கூட ஒரு பெண் M.Phil. பட்டம் பெற்றார். சென்னை ... அண்ணாமலை ..மதுரை பல்கலைக் கழகங்களில் இது ஆராய்ச்சி மாணவர்களுக்கான நூலாக இருக்கிறது. பல கல்லூரிகளில் கேட்டு வாங்கினார்கள். அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனார் நூலகத்திலும் இருக்கிறது. தமிழ் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். சில மதரசாக்களில் நான் அன்பளிப்பாகக் கொடுத்தது இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் குமரி மாவட்ட்டத்தின் 54 முஹல்லங்களைப் பற்றிய வரலாறும் பெட்டகத்தில் இருக்கிறது. ஆனால் பல முஹல்லங்கள் ஒரு புத்தகம்கூட வாங்கவில்லை.
புத்தகம் யாரும் வாங்கவில்லையே என்ற வேதனை மறைந்து இப்போது கேட்பவர்களுக்குக் கொடுப்பதற்கு புத்தகம் இல்லையே என்ற வேதனை எனக்கு இருக்கிறது. இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே என்னிடம் இப்போது இருக்கிறது. அது எனது தேவைக்காக ...
இன்ஷா அல்லாஹ் இரண்டாம் பதிப்பும் இரண்டாம் பாகமும் சேர்த்து வெளியிட ஆசை எனக்கு இருக்கிறது. மக்களுக்கு இருக்கிறதா எனத் தெரியவில்லை.. அதை வெளியிட கணிசமான செலவு ஏற்படும் என்பது இன்னொரு பிரச்சினை.
நல்ல உள்ளம் உள்ளவர்கள் துஆ செய்யுங்கள் ...
அபூஹாஷிமா வாவர்
Abu Haashima Vaver
3 comments:
தங்களின் ஆசை விரைவில் நிறைவேற வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள்... நன்றி....
பெட்டகம் என்ற நூலில் ஆசிரியர் தனது ஊரான கோட்டாறின் புகழ் பாட அதிக பக்கங்கள் எடுத்துக்கொண் டுள்ளார்.. கோட்டாறு முஸ்லிம்களும்,தன்னுடைய ஊரிலுள்ள கோட்டாறு மஸ்ஜிதும் தான் முதன்மையானது என்ற வரலாற்றுத்திரிபை மேற்கொண்டுள்ளார்.தேங்காய்ப்பட்டணம் மாலிக் இப்னு தீனார் மஸ்ஜித் தான் குமரிமாவட்டதின் முதல் மஸ்ஜித் ஆகும் ..
Abu Haashima Vaver
மிக்க நன்றிகள் தனபாலன் சார்...
Post a Comment