Friday, March 9, 2012

சம்சாரத்தின் புலம்பலைவிட மின்சார புலம்பல் கடுமை!

இறைவன் மின்சாரம்  என்று  அழைக்கப் படும் என்னை மின்னல் வழி உண்டாக்கினாலும் மனிதனுக்கு அறிவைக் கொடுத்து பல மாற்றங்களுக்கு உள்ளானேன்.
   ஃபர்
துணியை அம்பர் மீது தேய்ப்பதைக் கொண்டு இரண்டுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நான் (மின்சாரம்) உண்டாவதாக பண்டைய கிரேக்கர்கள் கண்டுபிடித்ததாக  என் (மின்சார) வரலாறு சொல்கின்றது .
பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்கள் எனது தந்தை என்றும் சொல்வார்கள்.
நான் உருவானதின் மாற்றங்களும் வினோதம்தான்.
ஆனால் நான் தமிழ்நாட்டில் படும் அவதியை யாரிடம் சொல்வது . நான் மலடியாம் , உரு முறையாக தங்காமல் கலைந்து விடுகின்றதாம் .
நான் என்ன செய்வது !

என் கணவன் அரசு என்னை சரியாக கவணிப்பதில்லை.அவருக்கு பல வேலை. பாவம் அவர்! ஏழை, எளியமக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு,  
அவரைக் பார்த்து மக்கள் கேட்டால் அவர் சொல்கின்றார் எனது முந்தைய கணவன் என்னை சரியாக பராமரிக்காமல் ஊட்டச் சத்தும் சரியாக கொடுக்கவில்லை  என்கிறார் . என் நிலை இவ்வாறு இறுக்க மக்கள் ஏன் என்னை குறை சொல்கிறார்கள் . நான் ஒழுங்காக எனது பரம்பரையை உருவாக்க என் கணவன் முன்எச்சரிகையோடு நடந்திருந்தால் எனக்கு இந்த அவப்பெயர்  வந்திருக்காதே. என்னை குறை சொல்வதை விடுத்து என் கணவன் அரசுக்கு அறிவுறை கொடுங்கள் .அது பயனுள்ளதாக இருக்கும்.அதுவரை  எனது புலம்பலும் நிற்காது, நீங்கள்  என் மீது கூறும் குற்றச் சாட்டுகளும் ஓயாது.
இனி நிலா, மின்னல் ஒளிகளை நம்பி வாழுங்கள். என் சக்களத்தி
கள் ஜெனரேட்டர்,காத்தாடி, கேஸ் ,மண்ணெண்ணை , விறகு ஒன்றையும் நம்பாதீர்கள் .
உங்களையே நம்பி ஒரு கைவிசிறி வாங்கி பயன் படுத்துங்கள்  


 பகலில் மின்சாரத்தை பேட்டி காண முடியாது .அவள் பகலில் வெளிநாட்டு வாகன  உற்பத்தியாளர்களுக்கு  சேவை  செய்யப் போயிருப்பாள். அங்கு என்னதான் கொட்டிக் கொடுக்கிறார்களோ! மாலை வருவரை காத்திருப்போம் என இருந்தேன். ஆறு மணிக்கு மின்சார மங்கை வந்தாள். பேட்டி ஆரம்பித்து முடிப்பதற்குள் அரை மணிக்கு ஒருதடவை ஓடி ஓடி ஒளிந்துக் கொள்கின்றாள்.அலுத்துப்போய் விட்டது. ஆளை விடு என அவளே போய் விட்டாள். நான் எங்கே எழுதுவது! அதனை எப்படி சரி பார்ப்பது என் பிழையை மற்றவர்கள் இருட்டில் கண்டுகொள்ளமாட்டார்கள் என்பதோடு எழுதி முடித்து விட்டேன் .
     வீட்டில் 'தோசை சுடு' பசிக்கிறது என்றேன். சம்சார புலம்பல்   ஆரம்பமாகி விட்டது.'கேஸ் இல்லை மின்சாரம் வந்ததால்தான் சுட்டு தர முடியும்'   வார்த்தையால் என்னச் என்னைச்  சுட்டாள். 'அப்பொழுதே சொன்னேனே இன்வேன்ட்டர் வாங்கி வையுங்கள்' என்று புலம்பினாள் .நான் அரசு இனாமாக கொடுக்கும் என்று நினைத்தேன். 'இனாமிலேயே கிடைத்தாலும் அதற்கு சார்ஜ் ஏற்ற மின்சாரம்  வேண்டுமே' என சமாளித்தேன். கொசு வேறு கடிகின்றது மொட்டைமாடிக்குப் போய் நிலாவின் ஒளியில் அமைதி காண்போம் என ஓடிவிட்டேன் 

5 comments:

ஸாதிகா said...

சகோதரர் அவர்களுக்கு

ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்ரி

http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_1903.html

கிளிக் செய்து பாருங்கள்

உடல் நலத்துடன் இன்னும் நீண்டகால தெம்புடன் பணி செய்ய பிரார்த்தனை செய்தவளாக
ஸாதிகா

VANJOOR said...

மின்சாரம் தானாக புலம்ப மட்டுமே செய்கிறது.

மாறாக மின்சார தடங்களால் கதறும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,

விவசாயிகள்,

தொழிற்பட்டறையாளர்கள் ........

அல்லலுறும் பொதுமக்கள்

கோடி கோடியாக குமுறுவதை கேட்டு வானத்து மேகங்களும் பொறுக்காமல் மேலும் மேலும் பூமியை விட்டு இன்னும் உயரத்துக்கு சென்றுகொண்டிருக்கின்றன.

.

mohamedali jinnah said...

புதுமையாகவும்,புலமையுடன்,சக்தி தரும் மருந்தாகவும் விமர்சனம் செய்வதில் நீங்கள் ஒரு சிந்தனையுள்ள நண்பர்.மிக்க நன்றி முகம்மதலி அலி ஜின்னா (VANJOOR) அண்ணன் அவர்களே

ஜெய்லானி said...

ஆஹா....அதையே புலம்ப வச்சிட்டீங்களே :-)))

http://kjailani.blogspot.com/2012/02/blog-post.html இது நான் புலம்பியது ஹா..ஹா... :-)))))))

mohamedali jinnah said...

ஜெய்லானி அண்ணன் அவர்களுக்கு எல்லோரும் புலம்புவது நாம் அறிவோம்.அது என்ன விதி விலக்கா! அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்படும் காரணமாக மின்சாரத்தையே நாம் சாடுகின்றோம். அம்பு எய்தவனை விடுத்து அம்பை சாடுவது ஏன்!
தங்கள் அன்பான வருகையும் அருமையான விமர்சனமும் மகிழ்விக்கின்றது .