Tuesday, March 29, 2011

என்ன கொடுமை - இது கவிஞர் இரா .இரவி



கிரிக்கெட் காண அனுமதிச் சீட்டு தாருங்கள்
கிட்னி தருகிறேன் என்கிறார்     ரசிகர்
உயிர் காக்கும் உன்னதத்தை
கேளிக்கைக்காக தருகிறேன் எனும் அவலம்
கிட்னியைத்   தேவைப்படும் நண்பனுக்கு
குடும்ப உறுப்பினர்க்குக் கொடுக்கலாம்
கிட்டினியை இட்லிக்கு வைக்கும்
சட்னியைப் போல தருகிறேன்  என்கிறார்
ஊடகங்கள் போட்டிப் போட்டு
ஊதி ஊதிபெருசாக்கி விட்டனர் கிரிக்கெட்டை
கால்ப்பந்துக்கு ஈடாகுமா ?  கிரிக்கெட்
கபடிக்கு    ஈடாகுமா ?  கிரிக்கெட்
குளிர்ப் பிரதேசத்து ஆடையை
வெப்பப்பூமியில்   அணியும் மடமை
ஆவலுடன் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்
அனைவரையும் முட்டாள் ஆக்குகின்றனர்
முந்தைய விளையாட்டுகளில் நடந்த
சூதாட்டங்கள் அம்பலமாகி விட்டது
ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாத
ஒழுக்கம் கெட்ட கிரிக்கெட் வீரர்கள்
விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்
விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்
இந்தியா பாகிஸ்தான்  கிரிக்கெட் விளையாட்டை
இந்தியா பாகிஸ்தான் போராகப் பார்க்காதீர்கள்
பிரதமர்களும் முதல்வர்களும்  கிரிக்கெட்டைப்
பார்க்க நேரில் செல்வதை நிறுத்துங்கள்
விளையாட்டை வெறியாக மாற்றாதீர்கள்
விரயம் செய்யாதீர்கள் பொன்னான நேரத்தை

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Source : http://eraeravi.wordpress.comஎன்ன கொடுமை இது கவிஞர் இரா .இரவி

2 comments:

ப.கந்தசாமி said...

கொடுமையிலும் மகாக் கொடுமை இதுதான்.

அதை விடக் கொடுமை இந்த அருமையான கவிதைக்கு இதுவரை ஒருவரும் கருத்து தெரிவிக்காததுதான்.

Anonymous said...

என்ன கொடுமை சார் இது :O