Monday, March 21, 2011

ஒருவகை லஞ்சம் போல் தோன்றவில்லையா?

  இலவசமாக தேர்தல் அறிக்கையில்    கிரைண்டர், மிக்ஸி , தொலைக்காட்சி , லேப்டாப் கிடைக்கும் ஆனால் மின்சாரம் மட்டும் காசு கொடுத்தாலும் தடங்கலுக்கு வருந்துகின்றோம் என்ற நிலை வரும் . இனாம் கொடுப்பதனை வெளியில் சொல்வது பண்பாடாக இருக்க முடியாது. இதுதானே நமது  மரபு . ஆனால் இது அரசுக்கு பொருந்தாது. காரணம் நமது பங்கும் அதில் உள்ளது .
கிரைண்டர், மிக்ஸி இவைகளை பயன் படுத்த பொருள் தேவை ! அதற்கு ஒருவர் வருவார் பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுக்க விரைவில் ஒரு  அறிக்கையுடன் .
எங்கு கொடுத்தார்கள் எப்படி கொடுத்தார்கள் சொன்னபடி அனைவர்க்கும் அதனை கொடுத்தார்களா?   அதனை வாங்கியவர்கள் பயன்படுத்தினார்களா  அல்லது விற்று  விட்டார்களா என்பது பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும். 

இடுபவர்களை இடாதார் கெடுப்பார் என்ற பெயர் நமக்கு வேண்டாம் .

எங்களுக்கு தேர்தலில் வாக்களித்தால்  இவை  தருவோம் என்பது ஒருவகை லஞ்சம் போல் தோன்றவில்லையா!  இதற்கு முதலில் கருத்து கணிப்பு எடுங்கள். உங்கள் வோட்டு  இந்த
கருத்து கணிப்பில் யாருக்கு ?




No comments: