பரம்பரைத் தன்மை, நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் செய்து கொள்ளுதல், ரத்தப் பிரிவு, கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் பாதிப்பது, கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குன்றியிருப்பது, கர்ப்ப காலத்தில் சில மருந்துகளைச் சாப்பிடுதல், கர்ப்ப காலங்களில் அடிக்கடி நுண்கதிர் வீச்சு படம் எடுத்தல் ஆகியவை குழந்தைக்கு பிறவி செவித் திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களாகும்.
குழந்தை பிறந்த பிறகு...: குறை மாதத்தில் பிறப்பது மற்றும் ஆயுதம் மூலம் பிறப்பது, குழந்தைக்கு பிறந்தவுடன் மூச்சுத் திணறல் ஏற்படுவது, குழந்தை பிறந்தவுடன் நீண்ட நேரம் அழாமல் இருப்பது, குழந்தையின் எடை 1,200 கிராமுக்கும் குறைவாக இருப்பது ஆகியவை காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம்.
குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை, அதிகமான காய்ச்சல் அல்லது வலிப்பு போன்றவை செவித் திறனைப் பாதிக்க வாய்ப்பு உண்டு. தொற்று நோய்கள், நீண்ட காலமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சாப்பிடுதல், காதில் அடிபடுதல், தொடர்ந்து அதிக சத்தமான சூழ்நிலையில் இருத்தல், உயர் ரத்த அழுத்த நோய், கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், காது நரம்பில் கட்டி இருத்தல், காதில் நீர் வடிதலை அலட்சியம் செய்தல், முதுமை ஆகியவை காரணமாக செவித் திறன் குறைபாடு ஏற்படலாம்.
காது கேட்கும் திறன் குறைபாடு ஏற்படுத்தும் பல காரணங்களை எல்லா சமயங்களிலும் கட்டுப்படுத்த முடியாது.
எனினும் காரணத்தை காலதாமதமின்றி அறிந்து கொள்வதன் மூலம் முன்னெச்சரிக்கையாக தடுக்கும் முறைகளைக் கண்டறிந்து செயல்படுவது நல்லது.
செவிக் கோளாறுகளுக்கு காரணம்? நன்றி:http://www.tamilsaral.com/news
No comments:
Post a Comment