சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் இஸ்லாமிய சமய கண்ணோட்டத்துடன் 'பிரிஸ்டன் இன்டர்நேஷனல்' கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தக் கல்லூரி தரப்பில் கூறியிருப்பது: இந்தியாவிலேயே முதல் முறையாக, இஸ்லாமிய கண்ணோட்டத்துடன், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. இந்தக் கல்லூரி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கே.பி.தாசன் சாலையில் உள்ளது. இதில் மூன்று வருட பி.ஏ. (இஸ்லாமிய படிப்பு), பி.பி.ஏ., படிப்புகள், 2 வருட எம்.பி.ஏ., ஒரு வருட எக்ஸிக்யூடிவ் எம்.பி.ஏ., பி.எட். உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. கனடாவைச் சேர்ந்த டாக்டர் பிலால் பிலிப்ஸின் நேரடி மேற்பார்வையில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். ஆகியவற்றில் பணியாற்றிய பேராசிரியர்கள் பாடம் எடுக்கின்றனர். கல்லூரியில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி ஏ.சி. வகுப்பறைகள், தொழுகை நடத்த வசதி, லேப்டாப்களை இயக்கக் கூடிய பிரத்யேக வைப்பி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. Campus Chennai Branch Campus of Preston University, situated at 10, Kavignar Bharathi Dasan Rd, Chennai 600 018. For Further Details Write to : Admission Officer Professional Education and Research Foundation No.10, Kavignar Bharathi Dasan Road, Chennai,Tamil Nadu , INDIA. Email: info@prestonchennai.ac.in Phone: +91-44-24353113, +91-44-42111365 |
Wednesday, March 24, 2010
சென்னையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் புதிய கல்லூரி!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பகிர்வுக்கு நன்றி!
Post a Comment