Showing posts with label பேரின்பம். Show all posts
Showing posts with label பேரின்பம். Show all posts

Sunday, August 26, 2012

இறைவா! நான் உன்னுள் அடக்கம் ,நீயே என் வழிகாட்டி

இறைவா! நான் உன்னுள் அடக்கம் ,நீயே என் வழிகாட்டி.
என் வலியை குறைத்து, என்னை வலுவடையச்  செய்.

என் ஆத்மாவின் இருண்ட இரவு முழுவதும் உன்  உதவி நாடி நிற்கின்றது
என் தாயகம் எனக்கு  நீ அளித்த பரிசு
 என் மனம் சிக்கலில் உள்ளது
உன் அருள் நாடி, அமைதி நாடி உன்னை தொழுகின்றேன்
காதலில்  பல மகிழ்வு  தந்தது நீயே!
உன்னை நேசிப்பதைவிட உயர்ந்த காதலி உண்டோ ?
அவள் வருவாள் திரும்பி என்னை விட்டு அவள் உன்னிடமே வந்து விடுவாள் !
அவளால் கிடைத்த சிற்றின்பம் சிதறும்!
உன்னை நேசிப்பதிலேயே  பேரின்பம் நிலைத்து நிற்கும்

என் ஆத்மாவின் திறவுகோல் நீ தான்
சொர்கத்தின் திறவுகோல் உன்னிடம் இருக்க
நீ அதைக் கொண்டு  அந்த  சொர்க்கத்தில்  என்னை நுழையச் செய்
பூமிக்கு நீ அனுப்பியதே உன்னை அறியவே !
உன்னிடம்   திரும்பி வரும் நாள் நான்  அறியாமல்  என்னை ஏன் நீ அனுப்பினாய்!

என் வலி நீ அறிவாய் அதைப் போக்க நீ வழியைக் காட்டு!
நீ கொடுத்த குர்ஆனும், நபிவழியும் வாழ்கையின் வழியன அறிந்தும்
நான் வாழ்க்கையில் உன்னை பிரார்த்தனை செய்தும்
தடுமாறி தத்தளிக்க வைக்கும் உடன் வாழும் மக்களால் சீரழிக்கப் படுவதிலிருந்து உன்னிடம் உதவி நாடி நிற்கின்றேன்!
இறைவா! என் வலியை குறைத்து, என்னை வலுவடையச்  செய்.