தாழ்வு மனப்பான்மை தவிர்க்க விரலும் பயன்படலாம்!
தினமும் விரலுக்கு பயிற்சி கொடுப்பது அவசியம் . அதிலும் நமது பணத்தாளை எண்ணுவது மிகவும் மகிழ்வானது
அழகானவைகள் எப்பொழுதும் நன்றாக இருப்பது இல்லை ~ ஆனால் நல்லவைகள் எப்போதும் அழகாக இருக்க முடியும்!
நீங்கள் ஒரு ஆப்பிள் வைத்திருந்து மற்றும் நான் ஒரு ஆப்பிள் வைத்திருந்து நாம் இந்த ஆப்பிள்களை பரிமாற்றம் செய்து கொண்டால், ஒவ்வொருவரிடமும் ஒருஆப்பிள்தான் இருக்கும் . ஆனால் நீங்கள் ஒரு யோசனை மற்றும் நான் ஒரு யோசனை வைத்திருந்து அதனை நாம் பரிமாற்றம் செய்து கொண்ட பின்னர், இந்த கருத்துக்களை பரிமாற்றம் செய்து கொண்டமையால் நமக்கு இரண்டு யோசனைகள் கிடைக்கும். அதனால்தான் நாட்டுக்கு நாடு தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்ள முயல்கின்றன. அம்பாசிடர் என்று ஒருவர் நாடுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்கின்றார்
எண்ணப் பரிமாற்றம், நாணயங்களுக்கிடையிலான பரிமாற்றம்,தகவல் பரிமாற்றம் ....இன்னும் பல் வகை பரிமாற்றங்கள். இதனால் தரகர்களுக்கு வேலை வாய்ப்பு.
Showing posts with label பயிற்சி. Show all posts

Friday, August 12, 2011
Saturday, January 8, 2011
மனம் மகிழுங்கள் - 30 : பாதையெல்லாம் பாடம்
மனம் மகிழுங்கள்!30 - பாதையெல்லாம் பாடம் - நூருத்தீன் குறிக்கோள் நம்மை நகர்த்துகிறது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். எனவே வாழ்க்கையில் நல்லதொரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்வது, மனதிற்கும் உடம்பிற்கும் நல்லது என்றும் அறிந்தோம். அப்படியொரு குறிக்கோளை அமைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் நாம் இயங்கும்போது நாம் எட்டுவது இலக்கை மட்டுமில்லை; இன்னபிறவற்றையும்தாம்!அவை என்ன? ஒரு குறிக்கோளுக்கான பாதையில் நாம் பயணிக்கும்போது வழிநெடுக நாம் என்னென்ன கற்றுக் கொண்டோம், எந்தளவு நம் மனது அதனூடே வளர்ந்தது, பக்குவப்பட்டது என்பது குறிக்கோளின் இலக்கைவிட முக்கியமான விஷயம் ஆகும்.. எப்படியென்று பார்ப்போம். |
ஒருவர் கல்லூரியில் சேர்ந்து மாங்கு மாங்கென்று படித்து உழைத்துப் பட்டம் வாங்கியதன் பின்னர் ‘நான் பாடுபட்டதெல்லாம் இந்த ஒரு காகிதத்திற்காகவா’ என்று டிகிரி சர்டிபிகேட்டைக் காட்டி அலுத்துக் கொண்டால் எங்கோ தப்பு. அல்லது ஏட்டில் படித்ததெல்லாம் அவருக்கு வெறும் சுரைக்காயாக ஆகிவிட்டிருந்தால், “அவர் படித்தார்; பயிலவில்லை”! பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ளப்போகும் எழுத்துகளுக்காகவா டிகிரி என்ற குறிக்கோள்? இல்லையே!
பாடம் ஒருபுறமிருக்க அந்தக் கல்விப் பயணத்தில் என்னென்ன கற்றார், யாரையெல்லாம் சந்தித்தார், எவரையெல்லாம் நண்பராக்கிக் கொண்டார் எதிரியாக்கிக் கொண்டார், என்னென்ன இன்ப துன்பங்களை அனுபவித்தார், தம்மைத் தாமே என்ன அறிந்து கொண்டார் என்பனவெல்லாம் பாடத்தைவிட முக்கியமான அனுபவங்களல்லவா? அவைதானே வாழ்க்கைப் பக்குவத்திற்கு வித்திடுகின்றன? இவற்றையெல்லாம் பேராசிரியர்கள் போர்டில் எழுதிக் காண்பிப்பதில்லை; அவையெல்லாம் அனைவருக்கும் ஒன்றுபோல்அமைவதும் இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறிக்கோள் இருக்கும் -
நான் சுயமாய்த் தொழில் தொடங்க வேண்டும்;
கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்;
மிகப் பெரிய பங்களா கட்ட வேண்டும்;
இன்றைய ஸீரியலை கண்ணீர் சிந்தாமல் பார்த்துவிட வேண்டும்...
இப்படியாக ஏதோ ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு அதை நீங்கள் சாதித்தும் முடித்துவிட்டீர்கள். இங்கு வெற்றி என்பது நீங்கள் துவங்கிய தொழிலோ, சென்றடைந்த கஷ்மீரோ, கட்டி முடித்த பங்களாவோ அல்ல. அந்த இலக்கை அடைய நீங்கள் சந்தித்த மனிதர்களும் அனுபவமும் நன்மையும் தீங்குகளும்தான் நீங்கள் அடைந்த வெற்றியில் முக்கியமானவை. அவைதாம் உங்கள் மனதின் உள்ளே இருக்கும் கண்களுக்கு ஒளி.
ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது துணிவைக் கற்றுக் கொண்டிருக்கலாம்; மன உறுதியைப் பெற்றிருக்கலாம்; மக்களிடம் இணக்கமாகவோ தூண்டியோ காரியமாற்றிக் கொள்ளும் திறனைப் புரிந்து அறிந்து கொண்டிருக்கலாம்; சுய ஒழுக்கம் மேம்பட்டிருக்கலாம்; விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கலாம்; அவரது தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கலாம்; அல்லது இல்லாளின் அதட்டல்களிலிருந்து தப்பிக்கும் உபாயம் புலப்பட்டிருக்கலாம்.
இப்படி ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ ‘லாம்’ உங்களை வந்தடைந்திருக்கும். சுருக்கமாய்ச் சொன்னால் நீங்கள் அடைந்தது என்ன என்பதைவிட உங்கள் மனதை அடைந்தது என்ன என்பதே முக்கியம்!
இவை இவ்வாறிருக்க,
குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஒன்றை முக்கியமாய்க் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது இப்புவியின் விதி!
இங்கு விதியென்பது fate அல்ல rule!
“என்னது நீ அணு விஞ்ஞானி ஆகப் போகிறாயா? என்னவொரு குறிக்கோள், இலட்சியம்” என்று உங்கள் உற்றார், உறவினர், பால்காரர், உஙகளின் சிகை அலங்கார நிபுணர் என்று அனைவரும் உங்களுக்குச் சிகப்புக் கம்பளம் விரித்து இரு புறமும் வெள்ளையுடை மங்கையரை நிறுத்தி வைத்துப் பூத்தூவி வாழ்த்தப் போவதில்லை.
வாழ்க்கைப் பாதை கடினமானது. மேடு, பள்ளம் நிறைந்தது. இதை முதலில் உணர வேண்டும். அழுத்தந்திருத்தமாய் உணர வேண்டும்.
மரக் கன்று நட்டு அது மெதுமெதுவே வளர்ந்து மரமாவதைப் பார்த்திருக்கிறீர்களா? இன்றைய ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உலகில் யாருக்கு அதற்கு அவகாசம் இருக்கிறது? அல்லது மரம் வளர்க்கும் அளவிற்கு இடமொன்று இருந்தால் கூட, அதைப் ப்ரமோட்டார்கள் பிடுங்கி ஃப்ளாட் கட்டி விற்றுவிடுகிறார்கள். போகட்டும். செடியொன்று வளரும்போது சில இலைகள் பழுத்து உதிரும்; ஆனால் அதைவிடச் சிறிது அதிகமாய் இலைகள் துளிர்க்கும். இப்படிச் சில இலைகளை இழந்து, இழந்து, அதனிலும் அதிகமாய் இலைகளை ஈன்று, ஈன்று தான் செடியொன்று நெடிய மரமாகிறது.
சில, பல முறைகள் கீழே விழுந்து எழுந்தால்தானே சைக்கிள்ஓட்ட பேலன்ஸ் கிடைக்கிறது!
சில சுதந்தரங்களை இழந்தால்தானே நல்லறமாக இல்லறம் அமைகிறது!
இதை நாம் நன்றாக உணரவேண்டும். அதைவிட்டுவிட்டு, என் இலட்சியமும் குறிக்கோளும் உலக உன்னதம்; அதனால் எனக்கு அனைத்து விஷயங்களும் தங்குதடையின்றி நடைபெறவேண்டும்; அதற்கு இணக்காமாய் இல்லையெனில் புவியின் விதியை மாற்றுங்கள்; Break the Rules என்று யாரேனும் நினைத்தால்... ஸாரி! நாளைக் காலை உங்கள் ஊரிலும் சூரியன் கிழக்கேதான் உதிக்கும்!
மிகப்பெரிய தொந்திக்குச் சொந்தக்காரர் ஒருவர். ஒரு நாள் தம் செருப்பைத் தேடக் குனிய முடியாமல்போய், அதைப் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததால் முடிவே செய்துவிட்டார்… உடற் பயிற்சி!
அதை ஆரம்பித்து, சிறிது சிறிதாய்ப் பயிற்சி செய்து, ஆனால் கரைத்த கொழுப்பைவிட அதிகமாய் உண்டு, ஒரு மாதத்தில் பெரிய பலன் ஏதும் இல்லையென்றதும் அத்தீர்மானத்தைத் தூக்கிப் போட்டுவிட்டார். என்னாவது? மிச்ச வாழ்நாளும் அவர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.
மற்றொருவருக்கு வேறு கவலை. பணம் என்று எதுவும் சேமிக்க முடியாமல் எப்பவும் செலவாகிக் கொண்டே இருக்கிறதே; இம்மாதத்திலிருந்து சிறிது சிறிதாய்ப் பணம் சேமித்து ஆண்டு இறுதியில் அதைக் கொண்டு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது செலவு வந்து கொண்டேயிருக்க ‘நமக்கு இது சரிப்படாது’ என்று விட்டுவிட்டார்.
குறிக்கோளுக்கான தீர்மானமொன்றை ஏற்படுத்திக் கொண்டால் இடையில் ஏற்படும் தடங்கலைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்; தீர்மானத்தைக் கைவிடாதீர்கள்.
சிலர் சாமான்யமாய் எதையும் விட்டுவிடுவதில்லை. குறிக்கோளை நோக்கி நகர்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை எனப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். அடியெடுத்து வைக்கும்போது அங்கு சறுக்கினால் ‘இது தப்பு அல்லது என்னிடம் தப்பு’ என்று அடுத்து அடியெடுத்து வைக்கும்போது திருத்திக் கொள்கிறார்கள். தங்களைத் திருத்தி, தங்களது செயல்பாடுகளைத் திருத்தி, இப்படித் திருத்தி திருத்திக் குறிக்கோளின் இலக்கை வெற்றிகரமாய் எட்டிவிடுகிறார்கள்.
யார் அவர்கள்?
வெற்றியாளர்கள்!
பாடம் ஒருபுறமிருக்க அந்தக் கல்விப் பயணத்தில் என்னென்ன கற்றார், யாரையெல்லாம் சந்தித்தார், எவரையெல்லாம் நண்பராக்கிக் கொண்டார் எதிரியாக்கிக் கொண்டார், என்னென்ன இன்ப துன்பங்களை அனுபவித்தார், தம்மைத் தாமே என்ன அறிந்து கொண்டார் என்பனவெல்லாம் பாடத்தைவிட முக்கியமான அனுபவங்களல்லவா? அவைதானே வாழ்க்கைப் பக்குவத்திற்கு வித்திடுகின்றன? இவற்றையெல்லாம் பேராசிரியர்கள் போர்டில் எழுதிக் காண்பிப்பதில்லை; அவையெல்லாம் அனைவருக்கும் ஒன்றுபோல்அமைவதும் இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறிக்கோள் இருக்கும் -நான் சுயமாய்த் தொழில் தொடங்க வேண்டும்;
கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்;
மிகப் பெரிய பங்களா கட்ட வேண்டும்;
இன்றைய ஸீரியலை கண்ணீர் சிந்தாமல் பார்த்துவிட வேண்டும்...
இப்படியாக ஏதோ ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு அதை நீங்கள் சாதித்தும் முடித்துவிட்டீர்கள். இங்கு வெற்றி என்பது நீங்கள் துவங்கிய தொழிலோ, சென்றடைந்த கஷ்மீரோ, கட்டி முடித்த பங்களாவோ அல்ல. அந்த இலக்கை அடைய நீங்கள் சந்தித்த மனிதர்களும் அனுபவமும் நன்மையும் தீங்குகளும்தான் நீங்கள் அடைந்த வெற்றியில் முக்கியமானவை. அவைதாம் உங்கள் மனதின் உள்ளே இருக்கும் கண்களுக்கு ஒளி.
ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது துணிவைக் கற்றுக் கொண்டிருக்கலாம்; மன உறுதியைப் பெற்றிருக்கலாம்; மக்களிடம் இணக்கமாகவோ தூண்டியோ காரியமாற்றிக் கொள்ளும் திறனைப் புரிந்து அறிந்து கொண்டிருக்கலாம்; சுய ஒழுக்கம் மேம்பட்டிருக்கலாம்; விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கலாம்; அவரது தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கலாம்; அல்லது இல்லாளின் அதட்டல்களிலிருந்து தப்பிக்கும் உபாயம் புலப்பட்டிருக்கலாம்.
இப்படி ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ ‘லாம்’ உங்களை வந்தடைந்திருக்கும். சுருக்கமாய்ச் சொன்னால் நீங்கள் அடைந்தது என்ன என்பதைவிட உங்கள் மனதை அடைந்தது என்ன என்பதே முக்கியம்!
இவை இவ்வாறிருக்க,
குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஒன்றை முக்கியமாய்க் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது இப்புவியின் விதி!
இங்கு விதியென்பது fate அல்ல rule!
“என்னது நீ அணு விஞ்ஞானி ஆகப் போகிறாயா? என்னவொரு குறிக்கோள், இலட்சியம்” என்று உங்கள் உற்றார், உறவினர், பால்காரர், உஙகளின் சிகை அலங்கார நிபுணர் என்று அனைவரும் உங்களுக்குச் சிகப்புக் கம்பளம் விரித்து இரு புறமும் வெள்ளையுடை மங்கையரை நிறுத்தி வைத்துப் பூத்தூவி வாழ்த்தப் போவதில்லை.
வாழ்க்கைப் பாதை கடினமானது. மேடு, பள்ளம் நிறைந்தது. இதை முதலில் உணர வேண்டும். அழுத்தந்திருத்தமாய் உணர வேண்டும்.
மரக் கன்று நட்டு அது மெதுமெதுவே வளர்ந்து மரமாவதைப் பார்த்திருக்கிறீர்களா? இன்றைய ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உலகில் யாருக்கு அதற்கு அவகாசம் இருக்கிறது? அல்லது மரம் வளர்க்கும் அளவிற்கு இடமொன்று இருந்தால் கூட, அதைப் ப்ரமோட்டார்கள் பிடுங்கி ஃப்ளாட் கட்டி விற்றுவிடுகிறார்கள். போகட்டும். செடியொன்று வளரும்போது சில இலைகள் பழுத்து உதிரும்; ஆனால் அதைவிடச் சிறிது அதிகமாய் இலைகள் துளிர்க்கும். இப்படிச் சில இலைகளை இழந்து, இழந்து, அதனிலும் அதிகமாய் இலைகளை ஈன்று, ஈன்று தான் செடியொன்று நெடிய மரமாகிறது.சில, பல முறைகள் கீழே விழுந்து எழுந்தால்தானே சைக்கிள்ஓட்ட பேலன்ஸ் கிடைக்கிறது!
சில சுதந்தரங்களை இழந்தால்தானே நல்லறமாக இல்லறம் அமைகிறது!
இதை நாம் நன்றாக உணரவேண்டும். அதைவிட்டுவிட்டு, என் இலட்சியமும் குறிக்கோளும் உலக உன்னதம்; அதனால் எனக்கு அனைத்து விஷயங்களும் தங்குதடையின்றி நடைபெறவேண்டும்; அதற்கு இணக்காமாய் இல்லையெனில் புவியின் விதியை மாற்றுங்கள்; Break the Rules என்று யாரேனும் நினைத்தால்... ஸாரி! நாளைக் காலை உங்கள் ஊரிலும் சூரியன் கிழக்கேதான் உதிக்கும்!
மிகப்பெரிய தொந்திக்குச் சொந்தக்காரர் ஒருவர். ஒரு நாள் தம் செருப்பைத் தேடக் குனிய முடியாமல்போய், அதைப் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததால் முடிவே செய்துவிட்டார்… உடற் பயிற்சி!
அதை ஆரம்பித்து, சிறிது சிறிதாய்ப் பயிற்சி செய்து, ஆனால் கரைத்த கொழுப்பைவிட அதிகமாய் உண்டு, ஒரு மாதத்தில் பெரிய பலன் ஏதும் இல்லையென்றதும் அத்தீர்மானத்தைத் தூக்கிப் போட்டுவிட்டார். என்னாவது? மிச்ச வாழ்நாளும் அவர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.
மற்றொருவருக்கு வேறு கவலை. பணம் என்று எதுவும் சேமிக்க முடியாமல் எப்பவும் செலவாகிக் கொண்டே இருக்கிறதே; இம்மாதத்திலிருந்து சிறிது சிறிதாய்ப் பணம் சேமித்து ஆண்டு இறுதியில் அதைக் கொண்டு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது செலவு வந்து கொண்டேயிருக்க ‘நமக்கு இது சரிப்படாது’ என்று விட்டுவிட்டார்.
குறிக்கோளுக்கான தீர்மானமொன்றை ஏற்படுத்திக் கொண்டால் இடையில் ஏற்படும் தடங்கலைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்; தீர்மானத்தைக் கைவிடாதீர்கள்.
சிலர் சாமான்யமாய் எதையும் விட்டுவிடுவதில்லை. குறிக்கோளை நோக்கி நகர்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை எனப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். அடியெடுத்து வைக்கும்போது அங்கு சறுக்கினால் ‘இது தப்பு அல்லது என்னிடம் தப்பு’ என்று அடுத்து அடியெடுத்து வைக்கும்போது திருத்திக் கொள்கிறார்கள். தங்களைத் திருத்தி, தங்களது செயல்பாடுகளைத் திருத்தி, இப்படித் திருத்தி திருத்திக் குறிக்கோளின் இலக்கை வெற்றிகரமாய் எட்டிவிடுகிறார்கள்.
யார் அவர்கள்?
வெற்றியாளர்கள்!
னம் மகிழ, தொடருவோம்...Friday, November 19, 2010
மனம் மகிழுங்கள்! அத்தியாயம் - 23 : மன ஒத்திகை
கற்பனை செய்ய ஆரம்பிச்சாச்சு - அடுத்து?
கற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?
ரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா? எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி? மன ஒத்திகையைப் பற்றி!
ஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை? செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு!
யதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.
ஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது? மனைவியிடம் பொய் சொல்லும்போது!
லேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு?” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை?
நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி! தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.
நாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.
நேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு! அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள்? அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா? இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.
மன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.
அதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.
ஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,
மனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.
னம் மகிழ, தொடருவோம்...
கற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?
ரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா? எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி? மன ஒத்திகையைப் பற்றி!
ஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை? செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு!
யதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.
ஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது? மனைவியிடம் பொய் சொல்லும்போது!
லேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு?” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை?
நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி! தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.நாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.
நேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு! அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள்? அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா? இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.
மன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.
அதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.
ஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,
மனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.
னம் மகிழ, தொடருவோம்...
Subscribe to:
Comments (Atom)

மனம் மகிழுங்கள்!