Thursday, April 13, 2023

சமூகத்தில் பெண்களுக்கு பங்கு என்னவாக இருக்க வேண்டும்!

 Ashika Imthiyaz

சமூகத்தில் பெண்களுக்கு பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற என்னுடைய நிலைப்பாடு...

ஆண்கள் எல்லாம் இப்படி தான் இருப்பாங்க...  பெண்கள் எல்லாம் இப்படி தான் இருப்பாங்க... ன்னு stereotype பன்றதே அறிவியல்படி முதல்ல தவறு. இந்த உலகத்தில் இருக்குற ஒவ்வொரு உயிருக்கும் ஒரு uniqueness இருக்கு. Every soul has it's own purpose..  I guess...

    ஏனென்றால், ஆண் பெண் brain structure அமைப்பில் மிக சிறிய அளவில் தான் வேறுபாடு  இருக்கு. அந்த வேறுபாடு அந்த ஆண் மற்றும் பெண்ணின் ஆளுமை தன்மையோடு தொடர்புடையது அல்ல என்று தான் இன்றைய அறிவியல் முடிவுகள் சொல்லுது.


     அறிவியல் முடிவுகள் இப்படி இருக்க... எழுத கையும் பேச வாயும் இருக்குற சிலர் எதயாவது எழுத பேச தான் செய்வாங்க. அதையெல்லாம் ignore பண்றது தான் அந்த வியாதிக்கு செய்யும் மருத்துவம் கூட.

      சரி... பெண்களுக்கு எதுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கணும்..? பெரும்பாலான பெண்கள் தன்னுடைய மற்றும் தங்களை சுற்றியுள்ள பிரச்சினைகளையும் நகைச்சுவை யாக தான் இதுவரை கடந்து வந்து இருக்காங்க...

      நான் என்னோட பிரச்சினைகளையும் என்னை சுற்றியுள்ள பிரச்சினைகளையும்... சும்மா நகைச்சுவையாவே கடக்க எப்பொழுதும் விரும்புவது இல்லை. ஏன்... என்றால்... எல்லா விஷயத்தையும் நகைச்சுவை யாவும் sarcastical லாகவும் பேசுறது எழுதுறதுநால.. எதையும் அந்த நேரத்துல கடக்க உதவுமே தவிர, அதை மாற்ற உதவாது.

    ரொம்ப சுயநலமாக உள்ள ஆண்களால்  ரொம்ப ரொம்ப சுயநலத்துடன் ஆண்களுக்கான சமூகமாகவே இருக்குற இந்த சமூகத்தை மாற்றி வடிவமைக்க வேண்டிய வலிமையும் பொறுப்பும்... அதற்கான அறிவும் மட்டுமே பெண்களுக்கு இருந்தால் போதுமானது...

Our differences make us stronger... So that we can create a place where everyone is valued and respected..!



Ashika Imthiyaz

No comments: