ஜன்னல் எனபதற்கு தமிழ் வார்த்தை என்ன தெரியுமா?
சாண்டில்யன் வாசகர்கள் உடனே சாளரம் என்று கூறிவிடுவீர்கள்.
" சடுதியில் புரவியிலிருந்து குதித்த வீரசிம்மன் மாளிகையை ஒட்டியிருந்த மரமொன்றில் ஏறி மேன்மாடத்தை ஒட்டியிருந்த கிளை ஒன்றில் தாவி மேன்மாடச் சாளரம் வழியாக மாளிகையின் உப்பரிகையில் கண நேரத்தில் குதித்துவிட்டான்!"
என அடிக்கடி படித்திருப்போம்.
சாளரம் தமிழ்ச் சொல்தான்.
சரி அதற்கு இணையாக நல்ல தமிழில் காரணப் பெயர் எதுவும் இருக்கிறதா?
இருக்கிறது!
காலதர்.
காலதர்= கால்± அதர்.
கால், காலி என்றால் காற்று. காலியை காற்று என்ற பொருளில் தற்போது தெலுகிலும், கன்னடத்திலும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.
தமிழில் காலி என்ற வார்த்தையை பொருளறியாமல் பயன்படுத்துகறோம்.
உதாரணம்: வீடு காலியா இருக்கு. காலி பாத்திரம்.
வீடு காலியாக இருக்கிறதை என்றால் வீட்டில் காற்று மட்டுமே உள்ளது எனப்்பொருள.
The house is filled with air. If there is no air the house is filled with vaccum.
ஆகவே கால்/காலி என்றால் காற்று.
அதர்= வழி
உதாரணம்: ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையானுழை என்ற குறட்பா.
ஆக்கம்/ உயர்வு ஆனது அதர்வினாய் வழி வினவிச் செல்லும். யாரிடத்திற்கு? அசைவில்லாத ஊக்கத்துடன் உழைப்பவனிடத்திற்கு.
ஆக அதர் = வழி
காலதர்=கால்±அதர்= காற்று வழி.
காற்று செல்லக்கூடிய வழியே சாளரம்.
எனவே காலதர் என்பது ஜன்னல்/சாளரத்திற்கான நல்லதமிழ் காரணப் பெயர்.
#நல்லதமிழறிவோம்!
No comments:
Post a Comment