Tuesday, April 4, 2023

மக்ரிப் உண்டு ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆகாது.

https://youtu.be/shK4rlz0ezw https://youtu.be/shK4rlz0ezw

 ↪️Kindly click the LINK at the bottom most line to see the video in English ⤵️

↪️வீடியோவை ஆங்கிலத்தில் பார்க்க, ஆகக் கீழே உள்ள LINK-ஐ கிளிக் செய்யவும்⤵️


*↪️நான் இமாம் அபூ ஹகீம். நான் ஆர்க்டிக் பிரதேசத்திலுள்ள நார்வே என்ற இடத்திலிருந்து பேசுகிறேன். நான் தற்சமயம் தராவீஹ் தொழுகையை முடித்துக்கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பின்னால் இருக்கும் திசையில்தான் மசூதி உள்ளது. தாங்கள் பாதி இரவில் சூரியன் உதிக்கும் நாட்டைப்பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இந்த காணொளியில் அதை நான் உங்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பின்னால் தாங்கள் பார்க்கும் சூரியன் பாதி இரவு சூரியன் ஆகும். இங்கு மக்ரிப் உண்டு ஆனால் சூரியன் அஸ்தமனம் ஆகாது. இங்கு இரவு முழுவதும் சூரியன் எல்லா திசைகளிலும் சுற்றிக்கொண்டு இருக்கும். அதே நேரத்தில் சந்திரனும் வானில் இருக்கும்.

இங்கு பகலிலும் சூரியன் இருக்கும் இரவிலும் சூரியன் இருக்கும். இப்படிப்பட்ட வியப்பான இடத்தை (ஆர்க்டிக் பிரதேசம்) பற்றி அல்லாஹ் சூரதுல்-கஹஃப் என்ற அத்தியாயத்தில் “துல்கர் நைன்” என்ற மன்னரின் வலிமையை பற்றி குறிப்பிடும் போது அவர் உலகில் பெரும் பகுதிக்கு தன் படையை எடுத்துச்சென்று பெரும் பகுதிகளை வெல்லும் ஆற்றல் படைத்தவர் மேலும் அவர் இரவையே பார்க்காத மக்கள் வசிக்கும் இடத்துக்கும் தன் படையை ஈட்டிச்செல்லும் வல்லமை படைத்தவர் என்று அல்லாஹ் சுட்டிக்காட்டுவது இந்த இடத்தைத்தான். இந்த சூரா அருளப்பட்டபோது அன்றைய காலத்து மக்களுக்கு “இரவு என்ற போர்வையை பார்க்காத மக்கள் வசிக்கும் பிரதேசம்” என்ற வரிக்கு முழு அர்த்தம் புரியவில்லை. ஏனெனில் அன்றைய காலத்தில் பூமியில் இப்படிப்பட்ட பிரதேசங்கள் இருப்பது அவர்களுக்கு தெரியாது.*


*சூரியன் உதயமும் அஸ்தமனமும் ஆகாத இந்த பகுதி வாழ் மக்கள் பிறகு எப்படி தொழுகை மற்றும் நோம்பு கடைபிப்பார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால் அதற்க்கான பதில்: இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் வாழ்பவர்கள் அல்-அஜ்ஹர் பல்கலைகழக ஃபத்வாவை ஏற்று மக்காஹ் மாநகரின் நேரத்தை பின்பற்றி தொழுகை மற்றும் நோம்பு நோற்க்கிறார்கள் என்பது என் பதில்.*


*சுப்ஹானல்லாஹ்!*

*அல்லாஹ் நன்கறிந்தவன்!!*

⤵️

https://youtu.be/shK4rlz0ezw

⤴️

No comments: