தந்தை.
விந்தையிலும்
விந்தை
தந்தையே
நம் உடலின்
ஒவ்வொரு
உயிரணுவும்
தந்தைக்குச்
சொந்தமானதே
தந்தை நம்
உயிரோடு
கலந்த உறவு
ஒவ்வொரு
நொடித்துளியும்
நினைவில்
கொள்ள
வேண்டிய
உறவு
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை
தந்தைக்கு
நிகர்
யாருமில்லை
தலைக்குமேல்
வளர்ந்ததும்
தோழனாய்
தன்னிலை
உணர்த்திடும்
ஆசானாய்
விதைத்து
உருவாக்கிய
வித்தகனாய்
விலாசம்
கொடுத்திட்ட
உத்தமனாய்
சகலமும்
நமக்களித்த
வல்லவனாய்
இவ் வையகம்போற்றிடும்
குடும்பத்தலைவனாய்
தாய்க்குமட்டுமல்ல
தன் வாரிசுக்கும்
துணைவனாய்
இப்படி
அனைத்திற்கும்
சொந்தக்காரனே
தந்தை
தந்தைப்
பாசம்
கண்ணுக்குத்
தெரியாது
அது கண்டிப்பு நிறைந்தது
பாசத்தை
மனதிற்குள்
வைத்து
பார்ப்பதற்கு
வில்லனாய்த்
தோன்றி
மழலைப்
பருவத்தில்
மட்டுமல்ல
வாழ்வின்
மொத்த பருவத்திலும்
நம்மை மனதில் சுமக்கும்
புரிந்து
கொள்ளமுடியாத
பொக்கிஷம்
அதிரை மெய்சா
https://adiraimysha.blogspot.com/2018/06/blog-post_23.html?fbclid=IwAR2rBHtPAUKahZEH-p8dXvDuxtSSW2F3TLl3NjfbvEnbWinp7JKhAG2Q52g
No comments:
Post a Comment