குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை
Post author:Online Editor
Post published:December 30, 2019
Post category:கட்டுரைகள் / சட்டங்கள்
Post comments:0 Comments
குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை
பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்காகப் பிரார்த்திப்போம்
யூத இராணுவத்தினாலும், தீவிரவாதக் குழுக்களாலும் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் மிகப் பெரும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். யூதக் கொடுங்கோலர்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி அவற்றை அபகரிப்பதற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். முஸ்லிம்களின் மூன்றாவது முக்கிய இறையில்லமான பைத்துல் முகத்தஸ் எனும் மஸ்ஜிதுல் அக்ஸாவில் வழிபாடு நடத்துவதை தடுத்து பாலஸ்தீன இஸ்லாமியர்கள் மீது யூதப் பயங்கரவாத இராணுவம் மிகப் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய சமுதாயம் மிகப் பெரும் சோதனைகளுக்கு உள்ளாகும் போது அவர்களின் இன்னல்கள் நீங்குவதற்காக முயற்சி செய்வதும், அவர்களின் துன்பங்கள் அகல இறைவனிடம் பிரார்த்திப்பதும் முஸ்லிம்கள் மீது கடமையாகும்.
பாலஸ்தீன முஸ்லிம்களின் அவலங்கள் நீங்குவதற்காக இறை உதவியை வேண்டி கடமையான ஐங்காலத் தொழுகைகளில் அவர்களுக்காக சோதனைக்கால பிரார்த்தனையை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
குனூத்துன் நாஸிலா தொடர்பான சட்டதிட்டங்களைக் காண்போம்.
குனூத் நாஸிலாவின் நோக்கம்
குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை நபி (ஸல்) அவர்கள் சோதனைகள் ஏற்படும் காலகட்டங்களில் ஓதியுள்ளார்கள்.
و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் ‘உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்’என்றும் கூறினார்கள்
நூல்: முஸ்லிம் 1201
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ الْقُنُوتِ…. إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلًا إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ
நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.
நூல்: புகாரி 1002
குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.
நபியவர்கள் ஒருமாத காலம் ஓதினார்கள் என்பது ஒரு செய்தியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஓத வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்த எல்லையாக கட்டளையாகக் குறிப்பிடப்படவில்லை.
எனவே பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்து நீங்கும் கால அளவிற்கு நாம் இந்த சோதனைக் கால குனூத்தினை ஓதிக் கொள்ளலாம்.
கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்
சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.
கடமையான தொழுகைகளில் கடைசி இரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஒதியுள்ளார்கள்.
இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி (ஸல்) காலத்தில்) இருந்தது.
நூல்: புகாரி 798, 1004
و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْبَرَاءِ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
அறிவிப்பவர்: பராஉ பின் ஆசிப் (ரலி)
நூல்: முஸ்லிம் 1207, 1208
797 بَاب حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَأُقَرِّبَنَّ صَلَاةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِنْ صَلَاةِ الظُّهْرِ وَصَلَاةِ الْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ رواه البخاري
அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர் , இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.
நூல் : புகாரி (797)
சுருக்கமாக ஓத வேண்டும்.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (2 / 32)
1001- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ مُحَمَّدٍ قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் (சோதனைக்கால) குனூத் ஓதினார் களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்’ என்று பதிலளித்தார்கள். ருகூஉவுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்? என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ருகூஉவுக்குப் பின்பு குறைந்த நேரம் ஓதினார்கள் எனப் பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி (1001)
மேற்கண்ட ஹதீஸ் சோதனைக் கால குனூத் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.
இன்றைக்கு சவூதி உட்பட சில நாடுகளில் இந்த சோதனைக் கால குனூத்தினை மிக நீண்ட நேரம் ஓதுகின்றனர். ஆனால் இதற்கு நபிவழியில் ஆதாரம் கிடையாது.
நபியவர்கள் இந்த சோதனைக் காலப் பிரார்த்தனையை மிகவும் சுருக்கமாகத்தான் ஓதியுள்ளார்கள் என்பதை அவர்களின் நடைமுறையில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸில் நபியவர்கள் எவ்வாறு சோதனைக் கால பிரார்த்தனை செய்தார்கள் என்பது இடம் பெற்றுள்ளது.
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 104)
6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்’ ஓதினார்கள். அதில்,
இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்
நூல் : புகாரி (6393)
நபியவர்கள் செய்த பிராரத்தனையின் அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
எனவே நாமும் இதே அளவிற்கு மிகவும் நீண்டு விடாமல் சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.
யா அல்லாஹ் ! பர்மாவில் ராக்கைன் மாநிலத்தில் பாதிக்கப்படும் முஸ்லிமான பலவீனமான ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!
அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!
இறைவா பர்மாவில் அநியாயம் செய்யும் கூட்டத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக!
என்பது போன்ற பிரார்த்தனைகளை நாம் செய்யலாம்.
கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.
مسند أحمد بن حنبل – (3 / 137)
12425 – حدثنا عبد الله حدثني أبي ثنا هاشم وعفان المعني قالا حدثنا سليمان عن ثابت قال كنا عند أنس بن مالك …. فقال أنس فما رأيت رسول الله صلى الله عليه و سلم وجد على شيء قط وجده عليهم فلقد رأيت رسول الله صلى الله عليه و سلم في صلاة الغداة رفع يديه فدعا عليهم ….
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது) அவர்களுக்காக நபியவர்கள் கவலைப்பட்டது போல் வேறு எந்த ஒன்றிலும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. நபி (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகையில் தன்னுடைய இரு கைகளை உயர்த்தி (நபித்தோழர்களை கொலை செய்தவர்களுக்கு) எதிராக பிரார்த்னை செய்ததை நான் பார்த்தேன்.
நூல் : அஹ்மத் (12425)
சோதனைக் கால குனூத்தில் நபியவர்களை கைகளை உயர்த்தி பிரார்த்தித்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
எனவே நபியவர்கள் செய்ததைப் போன்று இமாமும், பின்பற்றி தொழுபவர்களும் கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.
சப்தமாக பிரார்த்திக்கலாமா?
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (8 / 104)
6393- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ يَحْيَى ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الْعِشَاءِ قَنَتَ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தவரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்றான்) என்று கூறிய பிறகு (சோதனைக்கால) குனூத்’ ஓதினார்கள். அதில்,
இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!
என்று பிரார்த்தித்தார்கள்
நூல் : புகாரி (6393)
மேற்கண்ட செய்தியில் இமாமாக தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையை நபித்தோழர்கள் செவியேற்றுள்ளனர் என்பதை நாம் அறிய முடிகிறது.
எனவே இமாமாக தொழுவிப்பவர் பிரார்த்தனையை வெளிப்படுத்திச் செய்யலாம். ஆனால் மிகவும் உரத்த சப்தத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும். பணிவை வெளிப்படுத்தும் வகையில் இமாம் தனது பிரார்த்தனையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பற்றி தொழுபவர்கள் கைகளை உயர்த்தி பணிவாகவும் இரகசியமாகவும் பிராரத்தனை செய்ய வேண்டும்.
ஜூம்ஆ உரையில் மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது ”அல்லாஹும் மஸ்கினா” (இறைவா எங்களுக்கு மழை பொழிவிப்பாயாக) என்ற துஆவை நபியர்கள் மக்களுக்கு கேட்கும் விதமாக செய்துள்ளார்கள். மக்களும் அதே பிரார்த்தனையை தங்கள் கைகளை உயர்த்தி சப்தமின்றி செய்துள்ளனர் (பார்க்க புகாரி 1029, 1013, 1014) இதன் அடிப்படையில் சோதனைக் கால குனூத்திலும் நடைமுறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆமீன் கூற வேண்டுமா?
சோதனைக் கால குனூத்தின் போது பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் சொல்ல வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஒரு செய்தியை ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلَاةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ مِنْ الرَّكْعَةِ الْآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபியவர்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய அனைத்து தொழுகைகளின் இறுதியில், (அதாவது) கடைசி ரக்அத்தி்ல் “சமிஅல்லாஹூ லிமன் ஹமிதஹ்” என்று கூறும் போது பனூ சுலைம் கோத்திரத்தாரில் ரிஃல், தக்வான், உஸைய்யா ஆகிய குலத்தாருக்கு எதிராக பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். நபியவர்களுக்கு பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொன்னார்கள்.
நூல் : அபூ தாவூத் (1231), அஹ்மத் ( 2610)
இன்னும் பல நூற்களில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஹிலால் பின் ஹப்பாப்“ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் உறுதிப் படுத்தியிருந்தாலும் இவர் கடைசிக் காலத்தில் மூளை குழம்பிவிட்டார் என்றும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11 பக்கம் 69)
பொதுவாக மூளை குழம்பியவரின் அறிவிப்பை ஏற்பதாக இருந்தால் அவரிடமிருந்து அறிவிக்கும் மாணவர் அவர் மூளை குழம்புவதற்கு முன் கேட்டாரா அல்லது மூளை குழம்பிய பின் கேட்டாரா என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைப்பதை வைத்தே முடிவு செய்யப்படும்.
இந்த அறிவிப்பில் அதை தெளிவுபடுத்தும் சான்றுகள் எதுவும் கிடைக்காததால் இச் செய்தி நிறுத்தி வைக்கப்படும். தெளிவு கிடைக்கும் வரை இதைக் கொண்டு அமல் செய்ய முடியாது.
எனவே சோதனைக் கால குனூத்தின் போது இமாம் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் சொல்வது கூடாது.
இமாமும் பிராரத்தனை செய்ய வேண்டும். பின்பற்றித் தொழுபவர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என இதர செய்திகளின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்.
தமிழில் பிராரத்திக்கலாமா?
நபியவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் இரண்டு விதமாக உள்ளது. ஒன்று நபியவர்களே அமைத்துதந்த பிரார்த்தனை வாசகங்கள்.
கழிப்பிடத்திற்கு செல்லும் முன் ஓதும் துஆ, பிறகு ஓதும் துஆ, தூங்கும் முன்பும், பின்பும் ஓத வேண்டிய துஆக்கள், சாப்பிடும் முன்பும் பின்பும் ஓத வேண்டிய துஆக்கள் இது போன்ற அன்றாடம் ஒத வேண்டிய பிரார்த்தனைக்கான வாசகங்களை நபியவர்களே கற்றுத் தந்துள்ளார்கள்.
ஒவ்வொருவரும் இது போன்ற நிலைகளில் நபியவர்கள் எந்த வார்த்தைகளைக் கூறினார்களோ எந்த மொழியில் கூறினார்களோ அது போன்றுதான் கூற வேண்டும். இதில் மாற்றம் செய்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால் நபிகளார் கற்றுத்தந்த அரபி மொழியிலும்கூட அதே போன்ற அர்த்தமுடைய வேறு சொல்லை அந்த துஆக்களில் நாம் நமது விருப்பப்படி சேர்ப்பதற்கு மார்க்கம் தடை விதித்துள்ளது.
மற்றொரு வகைப் பிரார்த்தனை நாமாகத் தேர்ந்து எடுத்து சுயமாகச் செய்ய வேண்டிய பிரார்தனைகள் ஆகும். அதாவது பிராரத்தனையில் என்ன கேட்க வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர்தான் முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள பிரார்த்தனைகள்.
அத்தஹிய்யாத் இருப்பின் இறுதியில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதைக் கேட்க வேண்டும் என்றால் அவரவருக்குத் தெரிந்த மொழியில் கேட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அது போன்று தொழுகையில் ஸஜ்தாவின் போது பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். ஸஜ்தாவின் போது நமக்குத் தேவையானவற்றை நமக்குத் தெரிந்த மொழியில்தான் நாம் பிராரத்திக்க முடியும்.
இது போன்று என்ன பிரார்த்திக்க வேண்டும் என்பது பிராரத்திப்பவர் முடிவு செய்ய வேண்டிய பிராரத்தனைகளாக இருந்தால் அதனை நமக்கு தெரிந்த மொழிகளில் நாம் செய்து கொள்ளலாம்.
நபியவர்கள் காலத்தில் ரிஅல், தக்வான் உட்பட சில சமுதாயத்தினர் முஸ்லிம்களைக் கொன்றனர். எனவே அவர்களுக்கு எதிராக நபியவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
எனவே நாம் தற்போது அதே வார்த்தைகளைச் சொல்வது பொருத்தமற்றதாகும். தற்போது பர்மிய இராணுவமும், ஆட்சியாளர்களும், பவுத்த தீவிர வாத குழுக்களும் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே நாம் அநியாயம் செய்யும் இவர்களைக் குறிப்பிட்டுதான் பிரார்த்தனை செய்ய வேண்டும். எனவே யாருக்கு எதிராக, யாருக்கு ஆதரவாக பிரார்ததனை செய்ய வேண்டும் என்பதை பிரார்த்திப்பவர்தான் தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் இதனை அவரவர் தாய்மொழியில் செய்ய வேண்டும். தமிழ் மொழி பேசுவோர் தமிழிலும், உருது, தெலுங்கு , கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், அரபி என அவரவர் பேசும் மொழியில் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
ஆக்கம்: மௌலவி அப்துந்நாசர் எம்.ஐ.எஸ்.சி
No comments:
Post a Comment