Wednesday, April 6, 2022

திருமறை பற்றிய சிறுகண்ணோட்டமும் ஓதுவதன் பலாபலன்களும்..!!```

 Noor Saffiya



💞 இறை சிந்தனை

       தீன் துன்யா ஆஹிரா_ வின்

           *🎉அவ்ராது குழுமம்*

      *திருமறை அல்-குர்ஆன்..!!*

```திருமறை பற்றிய சிறுகண்ணோட்டமும் ஓதுவதன் பலாபலன்களும்..!!```

*👉🏽குர்ஆன் என்னும் பெயர்*

```வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபிகள் நாயகம்  ﷺ அவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் *“குர்ஆன்”* என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது```

```“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி ﷺ அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.```


*👉🏽அருளப்பெற்ற நாள்*

```நபிகள் பெருமானார் ﷺ அவர்களுடைய நாற்பதாவது வயதிலே, ரமழான் மாதத்தின் பிந்திய இரவுகளில் ஓர் இரவன்று, மக்கமா நகருக்கு அருகிலுள்ள ஹிராக் குகையிலே தனித்திருந்து, இறைவனைச் சிந்தித்திருந்த நேரத்தில் தான் திருக் குர்ஆன் முதன் முதலாக அருளப் பெற்றது. அந்த இரவு தான் “லைலத்துல் கத்ர்” (கண்ணியமிக்க இரவு) என்று அறியப்படுகிறது.```

```மாண்புமிக்க அந்த இரவிலே முதன் முதலாக அருளப் பெறத்துவங்கிய இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.```

```இவ்வாறு அந்த 23-ஆண்டுகளில் இறைவனால் அறிவிக்கப்பட்டதே திருக் குர்ஆன்.```

*👉🏽குர்ஆனின் அமைப்பு*

```திருக்குர்ஆன் 3 வசனங்கள் முதல் 286 வசனங்கள் வரையிலுமுள்ள, சிறிய, பெரிய 114 அத்தியாயங்களாக அமைக்கப்பட்டுள்ளது.```

```திருக் குர்ஆனில் உள்ள வசனங்களும், அத்தியாயங்களும் இப்பொழுதுள்ள வரிசைக்கிரமப்படி அருளப் பெறவில்லை.```

```கால நிலைமைக்கும், மக்களின் தேவைக்கும் அவசியமான அளவு சிறிது, சிறிதாக அத்தியாயங்களாகவும், வசனங்களாகவும், அருளப் பெற்று வந்தன. இவ்வாறு அருளப் பெற்று வரும் காலத்தில், நபி பெருமானார் ﷺ அவர்களுக்கு இறைவன் கற்பித்ததற்கிணங்க, இன்னின்ன வசனங்கள், இன்னின்ன அத்தியாயங்களை சேர்ந்தவையெனவும், அதிலும் குறிப்பிட்ட வசனம், குறிப்பிட்ட அத்தியாயத்தில் எத்தனையாவது வசனம் எனவும் அறிவித்து வந்தார்கள். அந்த ஒழுங்கு முறைப்படி அமைக்கப் பெற்றது தான், இக்காலத்தில் நம்மிடத்தில் இருக்கும் திருக் குர்ஆன்.```

```இந்த அமைப்பு முறைக்கு, “தௌகீஃபீ” (அறிவிப்புப்படி அமைக்கப் பெற்றது) என்றும், “தர்தீபே திலாவதி” (ஓதக்கூடிய வரிசை) என்றும், “தர்தீபே ரஸுலி” (ரஸுலுடைய வரிசை) என்றும் கூறப்பெறுகின்றது. ```

```தவிர, திருக் குர்ஆனின் வசனங்களும், அத்தியாங்களும் அருளப் பெற்ற முறைக்குத் “தர்தீபே நுஜுலி” (அருளப் பெற்ற வரிசை) என்று கூறப்பெறுகின்றது.```

*👉🏽ஜுஸ்வுகள்*

```ஒவ்வொருவரும் திருக் குர்ஆனைக் குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையேனும் ஓதி முடிப்பதற்கேற்றவாறு, திருக் குர்ஆனிலுள்ள வசனங்கள்யாவையும் ஏறத்தாழ சமமான முப்பது “ஜுஸ்வு” (பாகங்)களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது.```

*👉🏽ஜுஸ்வுகளின் பெயர்கள்*

```ஒவ்வொரு பாகத்திற்கும், “ஸயகூல்”, “தில்கர்ருஸுலு” போன்ற அந்தந்தப் பாகத்தின் தலைப்பிலுள்ள சொற்களையே பெயராகக் கூறப்பெறுகின்றது.  எனினும், “அல்ஹம்து” (தோற்றுவாய்) என்னும் முதல் அத்தியாயம், திருக் குர்ஆனிலுள்ள 30 பாகங்களுக்குமே ஒரு முன்னுரையைப் போன்று அமைந்திருப்பதனால், முந்திய பாகத்திற்கு, “அல்ஹம்து ஜுஸ்வு” என்று பெயர் கூறாமல், இரண்டாம் அத்தியாயத்தின், முதல் வாக்கியமாகிய “அலிஃப் லாம் மீம்” என்பதையே பெயராகக் கூறப்பெறுகிறது```

*👉🏽ருகூவுகள்*

```தவிர, திருக் குர்ஆனின் பிற்பகுதியில் உள்ள 35 அத்தியாயங்களைத் தவிர, மற்ற அத்தியாயங்களை- தொழுகையின் சாதாரண ஒரு ரகாஅத்தில் ஓதக்கூடிய ஒரு மத்தியதர அளவில் - பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு “ருகூவு” (அதாவது, “மாயுக்ரவு பிர்ரகஅதி” ஒரு “ரகாஅத்”தில் ஓதக் கூடியது) என்று பெயர். இந்தப் பிரிவைக் குறிக்க ஆங்காங்கே “அய்ன்” அடையாளமிடப்பட்டிருக்கிறது. அந்த “அய்ன்” உடன் குறிக்கப்பட்டிருக்கும் எண், அந்த அத்தியாயத்தில் அது எத்தனையாவது ருகூவு என்பதை குறிக்கும்.```

*👉🏽மக்கீ - மதனீ*

```திருக் குர்ஆன் அருளப் பெற்று 23 ஆண்டுகளில், பெருமானார் ﷺ அவர்கள், முதல் பதிமூன்று ஆண்டுகள் மக்காவிலும், பிந்திய பத்தாண்டுகளில் மதீனாவிலும் வாழ்ந்திருந்தார்கள். ```

```அவர்கள் மக்காவில் வாழ்ந்திருந்த 13 ஆண்டு காலத்தில் மக்காவிலும், அதையடுத்து அவர்கள் சென்றிருந்த மற்றைய இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு “மக்கீ” (மக்காவில் அருளப் பெற்றவை) என்றும், அவர்கள் மதீனாவில் வாழ்ந்த 10-ஆண்டு காலத்தில் மதீனாவிலும், அதையடுத்து அவர்கள் சென்ற மற்ற இடங்களிலும் அருளப் பெற்ற அத்தியாயங்களுக்கு “மதனீ” (மதீனாவில் அருளப் பெற்றவை) என்றும் கூறப்பெறும்.```

```திருக் குர்ஆனில் உள்ள மொத்த அத்தியாயங்களில் 86 “மக்கீ” அத்தியாயங்களும், 28 “மதனீ” அத்தியாயங்களும் இருக்கின்றன. இவ்வாறு பொதுவே அத்தியாயங்களை “மக்கீ” “மதனீ” என்று பிரித்து குறிப்பிட்ட போதிலும், “மக்கீ” அத்தியாயங்கள் சிலவற்றில், “மதனீ” காலத்திய வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே “மதனீ” அத்தியாயங்கள் சிலவற்றில் மக்கா காலத்திய வசனங்களும் இடம் பெற்றுள்ளன.```

*👉🏽ஸஜ்தா திலாவத்*

```ஸஜ்தா திலாவத்

திருக் குர்ஆனில் சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போதோ, அல்லது ஓதக் கேட்கும் போதோ, ஸஜ்தா செய்ய வேண்டுமென்பது (-சிரம் பணிந்து வணங்க வேண்டுமென்பது) நம் மார்க்க விதி. இவ்வாறு சிரம் பணிய வேண்டிய வசனங்கள் 14 இருக்கின்றன.```

*அல் குர்ஆனைப் பொறுத்தவரை அது இறை வசனங்கள் என்பதே முதல் சிறப்பம்சமாகும்.* ```அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆனில் இருக்கும் ஒவ்வொரு வசனத்தையும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு படுத்தாமல் ஓதிவருவதே மிகப்பொறுத்தமாகும். அதேநேரம் ஒரு சூராவை குறிப்பிட்டு சிறப்புகள் வந்திருக்குமாயின் அவற்றை அந்த சிறப்பின் அடிப்படையில் கவனிப்பதும் கட்டாயமாகும்.```

*முஹம்மதிப்னு அல் ஜஸ்ரீ ஷாஃபி;யீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்  கோர்வை செய்த அல்ஹிஸ்னுல் ஹஸீன் என்னும் துஆக் களஞ்சியம் என்ற நூலிலிருந்து….*

```1⃣ குர்ஆனை ஓதி வாருங்கள். அது கியாமத்து நாளில் அதனை ஓதியவருக்குப் பரிந்துரை செய்யும் நிலையில் வரும்``` _(நபிமொழி)_

```2⃣ என்னை திக்ரு செய்வதை விட்டும், என்னிடம், கேட்பதை விட்டும் குர்ஆன் ஓதுவதிலேயே ஒரு வர் ஈடுபட்டிருந்தால், கேட்பவர்களுக்குக் கொடுப்பதை விடச் சிறந்ததை அவருக்கு நான் கொடுப்பேன்’``` _(ஹதீது குத்ஸி)._

```3⃣ அல்லாஹ்வுடைய திருவேதத்தின் சிறப்பாகிறது, அல்லாஹுதஆலா தன் படைப்பினங்களை விட எவ்வாறு சிறப்புள்ளவனாக இருக்கிறானோ அது போன்றதாகும்``` _(ﷺ அவர்கள் கூறினார்கள்)._

```4⃣ குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆனைக் கற்று, அதனை ஓதி, அதன்படி அமல் செய்பவருக்கு உதாரணமாகிறது, அதனுடைய வாடை எல்லா இடங்களிலும் வீசிக்கொண்டிருக்கிற, ஒரு தோல்பையைப் போன்றதாகும். குர்ஆனைக் கற்று, அதன்படி அமல் செய்யாமல் தூங்கி விடுகிறவருக்கு உதாரணம், வாய் கட்டப்பட்ட கஸ்தூரி நிரப்பப்பட்ட வாயைப் போன்றதாகும்’``` _(அல்ஹதீஸ்)_

```5⃣ திருக்குர்ஆனில் நன்கு தேர்ச்சியடைந்தவர்கள், கண்ணியவான்களும், நல்லோர்களுமாகிய எழுதுகின்ற மலக்குகளுடன் இருப்பார்கள். எவர் குர்ஆனை திக்கித் திக்கிச் சிரமமப்பட்டு ஓதுகிறாரோ அவருக்கு இரண்டு மடங்கு நற்கூலிகள் இருக்கின்றன’``` _(அல்ஹதீஸ்)_

```6⃣ அல்லாஹ்வுடைய திருவேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுகிறவாகு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை என்பது அது போன்று  பத்து மடங்கு நன்மை உடையதாகும். அலிப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று நான் சொல்லவில்லை. அலிப் ஓர் எழுத்து, லாம் ஓர் எழுத்து, மீம் ஓர் எழுத்து```  _(ﷺ அவர்கள் அருளினார்கள்.)_

```7⃣ (கியாமத்து நாளில்) குர்ஆன் உடையவரை (குர்ஆன் ஓதி அதன்படி அமல் செய்தவரை) நோக்கி, குர்ஆனை ஓதிக் கொண்டே செல்வாயாக! அதன் மூலம் (சுவனத்தில்) படித்தரங்களில் முன்னேறிச் செல்வாயாக! இன்னும் உலகில் நீ குர்ஆனை நிறுத்தி நிறுத்தி ஓதியது போல் இங்கும் நீ நிறுத்தி நிறுத்தி ஓதி முன்னேறுவாயாக! நீ ஓதுகின்ற கடைசி ஆயத்தின் எல்லையில்தான் உன்னுடைய தங்குமிடம் இருக்கிறது என்று சொல்லப்படும்``` _(ஹதீஸ் குத்ஸி)_

```8⃣ இரண்டு மனிதர்களுடைய விஷயத்தில் தவிர பொறாமை வைத்தல் கூடாது. ஒருவர்: அல்லாஹுத்தஆலா அவருக்கு குர்ஆனுடைய அறிவைக் கொடுத்தான். அவர் அதனைக் கொண்டு இரவுக் காலங்களிலும், பகல் காலங்களிலும் அமல் செய்கிறாரே அவராகும். இரண்டாமவர்: அல்லாஹுத்தஆலா அவருக்கு செல்வத்தைக் கொடுத்தான். அதனை அவர் இரவு காலங்களிலும், பகல் காலங்களிலும் (அல்லாஹ்வின் கட்டளைப் படி) செலவு செய்கிறாரே அவராகும்```  _(அல்ஹதீஸ்)_

```இன்ஷா அல்லாஹ் !!

புனித ரமழானை அடைந்து இருக்கிறோம். முடியுமானவரைக்கும் இறைவனின் திருமறையை ஓதி வசந்தமிகு ரமழானை சங்கைப்படுத்துவோம்```

*அவ்ராது குழுமம்*

```Ramazhan 1 - 1443```

No comments: