Friday, April 15, 2022

அரேபிய நாடுகளின் வணிகத்தில் தலைமையாய் ஒரு நகரம்...

 Mohamed Iqbal



அரேபிய நாடுகளின் வணிகத்தில் தலைமையாய் ஒரு நகரம்...

அமெரிக்க , ஐரோப்பிய கனவை தகர்த்தும்

உலகம் முழுவதும் இருக்கும் மக்களை கவர்ந்தும்

தன் பாலைவன பகுதிகளில் வரச் செய்து

வளமும் செய்திருக்கிறது வனத்தையும் வணிகமாய் செய்திருக்கிறது

அந்தப் பெரு நகரத்தின் பெயர் 

அமீரகம் எனும் அரேபிய நாட்டில் அமைந்துள்ள துபாய் நகரம்.

இது இன்று துங்கியது அல்ல

40 வருடங்களாக மெல்ல மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து

எதிர்மறை வினைவுகள் இல்லாமல் தொலைநோக்குப் பார்வையுடன்

வாழுமிடம் 


தண்ணீரும் உணவு மின்சாரம் தொழிற்சாலைகள்

தொழில் வளர்ச்சிகள் இவை அனைத்தையும்

மக்களின் நலனில் முன்நின்று முன்னெடுத்து

சுயநல அரசியல் இல்லாமல் 

தானும்ம் நாடும் ஒன்றான கொண்டு

நாட்டிற்கான அரசியல் சட்டத்தை வகுத்து

சட்டமும் காவலும் தண்டனையும்

ஒரே நேர்கோட்டில் வடிவமைத்து

ஒரு சிறு கூட்டம் துவக்கியது தான் 

துபாய் எனும் புள்ளி.

இங்கு ஆளும் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் வளத்தை விட

நாட்டை ஆளும் அரசுக்கு இருக்கும் மகத்துவமும் சொத்தும் 

இந்த வளர்ச்சிக்கு முன் காரணமாகும்.

1980 களில்

.................

பெயர் தெரியாத மீனவக் கிராமமாக சுருண்டு கிடந்த இடம்தான் துபாய் நகரம்

மற்ற வளைகுடா நாடுகளைப் போன்று பெட்ரோல் வளமும் அதிகமாக இல்லை. என்றாலும் இன்று செல்வச் செழிப்பு மிக்க நாடாக, 

கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஏன் நான்கு திசைகளிலிருந்தும்

மக்கள் விரும்பிச் செல்கின்ற நகரமாக, உலகத்திலேயே முதன்மையான முக்கியமான வணிக நகரமாக வானுயர்ந்து நிற்கின்றது. 

காரணம், தண்ணீர் இல்லா தேசத்தில் தண்ணீர் பிரச்சனையே இல்லை

மின்சாரத்திற்கு காரண காரியங்கள் இல்லாத இந்நகரில் மின்சாரத் தடை இல்லை,கனிம வளங்களும் இல்லை,கனிகளும் இல்லை.

இந்த ஆதாரத்திற்காக மூல காரணியை கண்டுபிடித்து

அனைத்தையும் இங்கு வர வைப்பது எப்படி என்ற ஒரு சிந்தனைதான் 

இன்று இரவு பகலாக ஜொலிக்கும் இந்நகரின் சூட்சுமம் ஆகும்.

உலகிலேயே மிகப் பெரும் மால்களைக் கொண்டதும் துபாய் நகரம்தான். 

இன்னும் ஐம்பது வருடங்கள் கடந்து தேவைப்படும் சாலை வசதிகளை இப்போதே செய்து வைத்திருக்கின்றது.

தொலைநோக்குப் பார்வையில் நகரின் வடிவமைப்பு

எங்கிருந்து தண்ணீர் உள்ளே வருகிறது எங்கிருந்து தண்ணீர் வெளியே செல்கிறது

மின்சார ஒயர்கள் எங்கே இருக்கிறது எதுவும் கண்ணுக்குத் தெரியாது.

உள்ளூர் பயணத்திற்கான எளிய வடிவ போக்குவரத்து வசதி

இவை அனைத்தையும் அரசே தன் கைக்குள் வைத்து இருக்கிறது.

இங்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அரசியல்வாதி போஸ்டர் முழக்கங்கள் கிடையாது

ஐந்து வருடங்களில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை மூன்று மாதங்களில் செய்து முடிக்கும் வல்லமை மிக்கவர்களை நாடு பணியில் அமர்த்தி இருக்கிறது

உலகிலேயே மிகப் பெரும் அடுக்கு மாடிக் கட்டடம் நிற்பதும் இங்குதான்.

இன்று உலகம் முழுவதிலுமிருந்தும் திறமைசாலிகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்ற நாடுகளில் முதன்மையாக நிற்பதும் துபாய்தான். 

கொரோனாவும் பொது முடக்கமும் ஏற்படுத்திய அதிர்விலிருந்து 

முதலில் மீண்டு எழுந்ததும் துபாய் நகரம்தான். 

ஆறு மாதங்கள் நீடித்த, தொற்றினை துடைத்தெறிந்தது.

அழகாகவும் அன்பாகவும் "இறுக்கமான சட்டத்தை கொண்டும்"

தொற்றின் காற்றினை கூட துடைத்தெறிந்தது உலகளவில் முதலில்

நிற்பது இந்நகரம்தான்.

இரண்டரை கோடி மக்கள் வருகை தந்த, வளர்ந்த நாடுகள், 

வளரும் நாடுகள், வல்லரசு நாடுகள், முன்னணி நாடுகள் என அனைத்தும் பங்கேற்ற மிகப் பெரும் வர்த்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதும் துபாய் நகரம்தான்.

துபாய் நகரத்தின் இந்த அசுரத்தனமான, மலைக்க வைக்கின்ற வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணம் என்ன? 

அது குறுகிய வரையறைக்குள் தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. 

மதம், இனம், குலம், கோத்திரம், மொழி, சாதி என 

எந்தவொரு வட்டத்துக்குள்ளும் அது சிக்கியிருக்கவில்லை.

எல்லோரையும் அரவணைத்துக் கொண்டது. எல்லோருக்கும் சம வாய்ப்பையும் வசதியையும் தந்தது. 

இன்று அரபுகளை விட அரபு அல்லாதவர்களை அதிகமாகக் வசிக்கும் தேசம் என்கிற சிறப்பைப் பெற்றிருக்கின்றது.

முஸ்லிம்கள் மட்டுமின்றி கிறித்துவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள், புத்தர்கள், ஜெயினர்கள் என எல்லாத் தரப்பினரும் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கின்ற, பறக்க வாய்ப்பிருக்கின்ற தேசம்தான் துபாய். 

அது மட்டுமல்ல வெறுப்பு, வெறுப்பரசியல் ஆகியவற்றுக்கு எதிராக உலகத்திலேயே மகிழ்ச்சிக்காக தனி அமைச்சகத்தை அமைத்ததும் துபாய்தான்.

கஜாகிஸ்தான், காஸ்டா ரிகா, மெக்சிகோ, போர்த்துகல், ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுடன் ஒன்றிணைந்து உலகளாவிய மகிழ்ச்சிக் கூட்டணி           ( GLOBAL HAPPINESS COALITION ) என்கிற பெயரில் அமைத்தது.

துபாயின் வளர்ச்சியிலும் எழுச்சியிலும் அதற்குக் கிடைத்த தொலை நோக்கு சிந்தனை நிறைந்த ஆட்சியாளர்களும் அவர்கள் கடைப்பிடித்த ‘அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொள்கையும்’தாம் பெரும் பங்கு வகிக்கின்றன.

ஆக, அனைவரையும் அரவணைக்கின்ற சமூக, அரசியல் மாதிரி கொண்ட துபாயின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணம் அவர்கள் கொண்டுள்ள

"நேர்மையான காவல் துறையும் சட்டமுமே!" 

அங்கு மக்கள் இறைவனுக்கு அடுத்து பயப்படுவது 

*காவல்துறைக்கும் சட்டத்திற்கும் மட்டுமே!

அங்கு மட்டுமே சட்டமும் காவல்துறையும் நீதிமன்றத்தில் கைகளில் இருக்கின்றது.

தற்போது இங்கு வசிக்கும் மக்கள், மற்றும் எதிகாலத்தில் இங்கு வரவிருக்கும் மக்களுக்கும் மண நிறைவோடு வாழ அணைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ள துபாய் நகர ஆட்சியாளர்களுக்கும் அந்நகர மக்களுக்கும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியவனாக 

உங்கள் சகோதரன்

முஹம்மது இக்பால்.

No comments: