Sunday, May 16, 2021

திருமண வாழ்த்து

 



. திருமண வாழ்த்து துஆ.


பார(க்)கல்லாஹூ (க்) வபார(க்) அலைக்க வஜமஃஅ பைன(க்)குமா ஃபீ கைர்”.

அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக!

உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!

சுவனத்தில் இன்னார்க்கு இன்னாரன்று இணைய 

இறைவனால் நிட்சயிக்கப்பட்டு இப்பூவுலகில் இணையும் மணமக்களே!

சுற்றோரும்  மற்றோரும் பெற்றோரும் போற்றும் இத்திருமணத்தில்

எல்லாம்வல்ல இறைவனது பொருத்தத்தில்

நபிமார்கள் வாழ்துதளோடு 

இறைவன்(அல்லாஹ்) உங்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) பெறச்செய்வானாக.

நன்மையான காரியங்களில்  உங்கள்   இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

பண்பென்னும் குணத்தால்

இறை மறையின் வழிகளில்  இணக்கமாகி

பெண்ணுக்கு நல்லாடை ஆணே யென்ற

பெருமானார் மொழிப்படியே பல்லாண்டு வாழ

இறைவனின்  நல்லருளால் நற்பேறு பதினாறும் பெற்றே வாழ்க!

நல்லறம் பேணி நலமுடன் மணமக்கள். 

உறவுக்கே உறவாகி விளக்கமாக

ஒருவருக்கு ஒருவர்  உற்ற துணையாக...

ஒவ்வொரு பகுதிக்கும் பக்க பலமாக

வாழ்வின் எல்லா தருணங்களிலும்

இறுக்கமாய் பற்றி..நலனோடும் வளமோடும்.

மகிழ்ச்சியாக

மனநிம்மதியோடு

வாழ்க! வாழ்க! வாழ்கவே

 

ஒருவரின் உணர்வு

இன்னொருவரின் மதிப்பாக(புரிதலாக)

இருவரும் இணைந்து

வாழ்க்கையின் அடையாளமான

உணர்வுகள் பரிமாறிக்கொள்ள

இல்லறத்தை பகிர்ந்துக்கொள்ள

இரு மனமும் இணைந்து

 

இறைவனால்  உங்களுக்கென  சுவனத்தில் உறுதி செய்யப்பட்ட  மணமகளை மணமகனை  நீங்கள்  அடைய

 

இறைவனால் உங்கள் பெற்றோர் எடுத்த செயல்கள்  நிறைவேற்றப்பட்டன

 

இறைவனின் அருளால் நீங்கள் சிறப்பாக நீடூழி  வாழ இனி உங்கள் மன ஒற்றுமையே இல்லற வாழ்க்கை நல்லறத்தோடு உங்கள் வாழ்வினை மகிழ்வடையச் செய்யும்

 

உங்களது திருமணத்தில் உங்களை உற்றார் உறவினர்கள் நல்லோர்கள் வாழ்த்தினார்கள் 

 

அவர்களின் வாழ்த்துகள் சிறப்படைய அனைவருடன் அன்புடன் ஒற்றுமையாய் தொடர் தொடர்புகள் இருக்கச் செய்து வாழ்வினை சிறப்பாக்கிக் கொள்வது உங்கள் நல்மனதின் இருப்பிடமாக இருக்கட்டும்

 

 

 

இறைமறை இதயத்தில் இருக்க 

 

இல்லறமும் நல்லறத்துடன் சிறப்படைந்து

 

 குறையற்ற  வளங்களும்

 

நிறைவான நலத்துடன்

 

நீடூழி செழிப்புடன் வாழ   

 

நன்மக்கள் பெற்றேடுத்து

 

வளமோடு வாழ

இறைவனது அருள் கிடைக்க

நிறைவுடன் வாழ்வீரென்று

இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்   

 

 

 

இறைவனைத் தொழுது வேண்டி முயல

 

சோதனைகள் சாதனையாகிவிடும்

 

இறைவனின் நேசம் போற்றுதலாக அமையும்

 

 

எல்லாம் என்னிடம் இல்லை

இல்லாததை பெற ஆசையை கொடுத்தாய்

அனைத்தும் அறியாததால்

அறிவை கற்கும் தேடலை தந்தாய்

சிரமத்தை தந்தாய்

சிரமத்தை நீக்கும் வழியை காட்டினாய்

அளவோடு கொடுத்தாய்

தேவையானதை தேடச் சொன்னாய்

வட்டத்தின் வரம்புகளில் நிற்க வைத்தாய்

முன்னேற்றத்தின் வாய்ப்புகளை உருவாக்க வைத்தாய்

களைத்து ஓயச் செய்தாய்

களைப்பை நீக்கும் வலிமையை தந்தாய்

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்

என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன்

என்னிடம் எல்லாம் இருந்திருந்தால்

உன்னருள் நாடி நின்றிருக்க நினைத்திருக்க மறந்திருப்பேன்

தேவையானது அனைத்தும் இருந்திருந்தால்

முறையான நன்றியை முழுமையாக செய்திருக்காமல் இருந்திருப்பேன்

குறைவானதை தந்து

முறையாக தேட வைத்து

நிறைவாகப் பெற்று

குறைவற்ற நன்றியை

மனமுவப்ப தரச் செய்தாய்

 

நான் வலிமை கேட்டேன் .........

இறைவன் எனக்கு சிரமங்களை கொடுத்து என்னை வலுவாக்கி அதனை சமாளிக்க வழி செய்தான்.

நான் அறிவு கேட்டேன் .........

இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத் தீர்க்க முறை செய்தான்.

இறைவனிடம் வளமாக வாழ பொருளும் பணமும் கேட்டேன் .........

இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்..

ஆண்டவனிடம் தைரியமாக வாழ வழி கேட்டேன் .........

ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.

நான் மக்களின் அன்பு கேட்டேன் .........

இறைவன் எனக்கு சிக்கலுக்குள்ளான மக்களை கொடுத்து அவர்களுக்கு உதவச் செய்து பாசமுண்டாக்கினான்

இறைவனிடம் நான் வளமான வாழ்வு பெற அவனது அருள் கேட்டேன் ...

ஆனால் அல்லாஹ் அதற்குரிய வாய்ப்புகளை கொடுத்து அதனைத் தேடி அடைந்துக் கொள் என்றான்.

நான் விரும்பிய எதுவும் கிடைக்க்கவில்லை

ஆனால் எனக்கு தேவையானது எல்லாம் பெற்றேன்

என் பிரார்த்தனை இறைவனால் வேறு வகையில் அங்கீகரிக்கப் பட்டதில் மகிழ்ந்தேன்

அல்ஹம்துளில்லாஹ்

 

அளவற்ற அருளாலனாய்

நிகரற்ற அன்புடையோனாய்

நிலையாய் நிலைத்திருப்பவனாய்

நிறைந்த மனதுடையவனாய்

நினை நினைத்தோர் மனதில் நிறைந்தவனாய்

நினை யல்லால் யாரை வைத்து தொடங்குவோம்

நினை விடுத்து யாரிடம் யாம் யாசகம் கேட்போம்

உமை முழுமையாக அறிந்து விட்டால் தொல்லை ஏது! துயரமேது!

உமை நாடியோருக்கு நன்மையே செய்வாய்

உம்மிடம் வேண்டியவர்க்கு செய்தவையும் நன்மையாக இருக்கும்

உம்மை நாடி வேண்டியவர்க்கு செய்யப்படாமல் விட்டமையும் நன்மையாகவே இருக்கும்

உமை நாடி கேட்பதும் உமை நினைத்து தொழுவதும் எம்மிடமிருக்க

உமையல்லால் யாரை தொழுவோம்

உமையல்லால் யாரிடம் கேட்போம்

உமக்கு இணையாக யாரையும் சிந்திக்க மனம் வருமோ!

உம்மிடம் கேட்பது எம் கடமை

கடமையச் செய்து கேட்பது உயர்வு

கிடைத்தாலும் மகிழ்வோம்

கிடைக்கவில்லையென்றாலும் மகிழ்வோம்

 -முகம்மது அலி 

 

No comments: