Thursday, July 30, 2020

இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே! பெருநாள் வாழ்த்துக்கள்

எல்லோரும் இன்புற்று வாழ இவ்வினிய நேரத்தில் எல்லாம் வல்ல

அல்லாஹ்வின் (இறைவனது) அருள் நாடி இறைத்தூதர் நபி அவர்கள்

காட்டிச் சென்ற தியாகத் பெருநாளில் வேண்டுவோம். அனைத்துப் புகழும்

அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும்

நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.


அ முஹம்மது அலி ஜின்னா(“நீடூர்அலி”)


=======================================================================
இன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே!
-முஹம்மது பெளமி-

பெருநாட்கள் அல்லது பண்டிகைகள் அரபி மொழியில் “ஈத்” என அழைக்கப்படுவது உண்டு. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்கின்றது. ஆண்டு தோறும் வருவதால் பெருநாட்களுக்கு இவ்வாறு பெயர்கள் உண்டு!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் ஆண்டு தோறும் இரண்டு பெருநாட்கள் மட்டுமே! அவை தவிர ஒவ்வோர் வார இறுதியிலும் வெள்ளிக் கிழமை நாள் முஸ்லிம்களுக்கு பெருநாளாக கருதப்படுகிறது. இது தவிர வேறு எவ்விதமான கொண்டாட்டங்களும் இஸ்லாத்தில் கிடையாது!
பெருநாட்களின் நோக்கம்!
யாவற்றையும் அறிந்த வல்ல இறைவன் மிக உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் இரு பெருநாட்களையும் அவனது நல்லடியார்களுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றான். ஒன்று ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாள். மற்றொன்று ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள்.

பெருநாள் கொண்டாட்டம்!
இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நன்மைகள் செய்யக் கூடிய நல்வாப்பாகவே பெருநாட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இறைவனை அதிகமாக நினைவு கூர்ந்து திக்ர் செய்தல், அவனுக்கு நன்றி செலுத்தல், தான தருமங்கள் செய்தல், நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளல் மூலம் இணக்கத்தையும் சகோதரத் துவத்தையும் வலிமையாக்கிக் கொள்ளல், பகையும் குரோதமும் களைந்து உற்றார் உறவினர்களை சந்தித்து உறவுகளை பலப்படுத்திக் கொள்ளல், நோயாளிகளை நலன் விசாரித்தல், அண்டை அயலாரோடு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்ளல், பகை கொண்ட உள்ளங்களை சேர்த்து வைத்தல், பெற்றவர்களை மனம் குளிரச்செய்தல், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதுடன் அனுமதிக்கப்பட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு இன்புற்று மகிழுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகின்றது.
இதற்கு மாற்றமாக பண்டிகை என்ற பெயரில் மது அருந்தி, போதையில் மிதந்து, சூதாட்டத்தில் புதைந்து, வீடுகளிலும் வீதிகளிலும் வன்முறையை ஏற்படுத்தி சண்டைசச்சரவுகளில் ஈடுபட்டு, துன்புற்று சீரழியும் நிலையை இஸ்லாம் தடுத்துள்ளது.
உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டாடுவதற்கென்று சில தினங்கள் இருக்கின்றன அந்த தினங்களில் அந்தந்த சமூக மக்கள் தங்கள் மன விருப்பப்படி யெல்லாம் சந்தோஷமாக இருப்பார்கள். குறிப்பாக அந்த தினங்கள் பெருவாரியான மக்களுக்கு கேளிக்கைகளுக்குறிய தினங்களாகவே கழிந்து விடும். முஸ்லிம்களுக்கு மகிழ்சிக் குறிய தினங்களாக இஸ்லாம் இரண்டு தினங்களை ஏற்படுத்தியுள்ளது அதில் ஒன்று தியாகத் திருநாள் மற்றொன்று ஈகைத் திருநாள்

இறைவனை அதிகம் அதிகம் நினைவுக்கூறுவதிலும், தாளாரமாக தான தர்மங்கள் வழங்கி பிறர் மகிழ்சியில் மன சந்தோஷம் அடைவதிலும் இந்த நாளை கழிக்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும்.

Abu Haashima #தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_6

அபு ஹாஷிமா

அரேபியா
தமிழக முஸ்லிம்களுக்கு
ஒரு வாழ்நாள் கனவு !
அதை நினைவாக்குவதற்காக
அன்றைய முஸ்லிம்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.
சொந்த ஊரில் உறவுகளைப் பிரிந்து
செய்து வந்த தொழிலைத் துறந்து
பாஷை தெரியாத பாம்பே நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.
உம்மா கழுத்திலும்
மனைவி கழுத்திலும் கிடந்த தாலிக் கொடிகளையும் விற்று
ஏராளமான பணத்தை அரபு நாட்டு விசாவுக்காகக் கொடுத்துவிட்டு
விமானம் ஏறும் நாளுக்காக காத்திருந்தார்கள்.

Abu Haashima #தொட்டால்_தொடரும் ... #குறுந்தொடர்_5



இந்த ஐந்தாம் அத்தியாயத்தை நான் எழுதவில்லை.
தொட்டால் தொடரும் என்ற இந்த தொடர்
தொடர்ந்து வரும் வேளையில்
என் மனதை வருந்த வைத்த இந்த
சம்பவத்தை இன்றைய அத்தியாயமாக
பதிவு செய்து கோயா அண்ணனுக்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்.

#எம்_சிராஜுதீன்_அஹ்ஸனி அவர்கள்
எழுதிய இந்தப் பதிவை
காஜா முகைதீன்
என்பவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதை செம்மைப்படுத்தி பதிவிட்டிருப்பவர் அண்ணன்
#இக்வான்_அமீர் அவர்கள்.
நன்றி அண்ணன் !

#கோயா_அண்ணனின்_பெட்டி

இன்று நாங்கள் மூவரும் சிகிக்சை முடிந்து எங்கள் அறைக்கு திரும்பினோம். ஆனால் எங்களுடன் சிகிச்சைக்கு வந்த கோயா அண்ணன் திரும்பி வரவில்லை. இனி அவர் வரவும் மாட்டார்.

அவரது நினைவுகளால் சூழப்பட்ட அந்த அறையில் எங்களுடன் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக வாங்கிய சில பொருட்கள் அடங்கிய பெட்டியும் இருந்தது.

அந்த பெட்டியை கண்ணீர் மல்கிய கண்களுடன் நீண்ட நேரம் தடவிக் கொண்டிருந்தோம். எங்கள் ஸ்பரிசத்தை அந்த பெட்டி நிச்சம் உணர்ந்திருக்கும்.

நாங்கள் நால்வரும் அந்த அறையில் ஏழு வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம். எங்கள் மூவரையும் விட கோயா அண்ணன் வயதில் மூத்தவர். அவர் எங்கள் அறையின் மூத்த உறுப்பினர் எனலாம்.

கொரோனா ஆரம்பம் முதலே அறையில் பெரும்பகுதி நேரமும் கோயா அண்ணனின் உடல் நலம் சம்பந்தமான வகுப்புகள் நடைபெற்று வந்தன. “கவனமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்!” – என்று அவர் அறிவுறுத்தியவாறு இருப்பார்.

கோயா அண்ணன் தமது வாழ்வின் பெரும்பகுதியை - சுமார் கால்நூற்றாண்டு காலம் அதாவது 24 ஆண்டுகள் அரேபிய மண்ணில் செலவழித்திருந்தார். கூடிய சீக்கிரத்தில், அரேபிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தாயகம் திரும்பி கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க சிந்திக்கத் தொடங்கி அதற்காகத் தயாராகி கொண்டிருந்தார்.
இந்த நேரத்தில்தான் கொரோனாவின் அச்சுறுத்தல் துவங்கி அவரது பயணத்தை தடைப்போட்டு அங்கேயே தங்க வைத்தது.

“அனைத்து பொறுப்புகளையும் முடித்து விட்டேன். இனி நான் என் குடும்பத்திற்கு ஒரு சுமையாகாமல் இருந்தாலே போதும்!" - என்று அவர் வேடிக்கையாகச் சில நேரங்களில் சொல்வது எங்கள் காதுகளில் ஒலித்தவாறே உள்ளது.

அரேபிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் நினைத்திருந்த லட்சியங்களை எல்லாம் நிறைவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், “லட்சியத்தை அடைவதற்காக சொந்த வாழ்க்கையைத் தொலைத்துவிட்டேன்!” - என்ற துக்கம் சில நேர பேச்சுகளில் அவரை அறியாமல் வெளிப்படுவதுண்டு.

மூன்று சகோதரிகளின் திருமணம்.
ஒரு சிறிய வீடு. தனது திருமணம். இவைதான் அவருடைய லட்சியம். இதற்காக 24 ஆண்டுகள் ஒரு பாலைவன பூமியில் ஏராளமான வியர்வை துளிகளை சிந்த நேரிட்டது. இதன் விளைவாய் சம்பாதித்தது வித விதமான நோய்களை மட்டுமே!

சொந்தமாகத் தனக்காக தான் சம்பாதித்த நோய்களுடன் ஊர் போய் சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் பாவம் கோயா அண்ணனின் எண்ணம். பல நேரங்களில் இதை அவர் வாய்த்திறந்து சொல்லவும் செய்திருக்கிறார்.

எல்லாம் சகித்து ஒரு வழியாக ஊர் செல்வதற்காக 1300 திர்ஹம் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்த ஒரு வார இடைவேளையில்தான் கொரோனா அவரை பாதித்தது.

ஊர் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்த நாள் முதல் ஒரு தேனீ போலவே அவர் மாறிவிட்டார். வேலை முடிந்து வரும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வந்து ஊருக்கு கொண்டு செல்வதற்காக தயாராக்கி வைத்திருக்கும் பெட்டியில் வைப்பார். ஊர் செல்ல தயாராகும் புலம்பெயர்ந்து வாழும் எல்லா அரேபிய வாழ் மக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கும்!

கோயா அண்ணனின் இந்த செயலை பார்த்து கொண்டிருக்கும் நாங்கள், “அண்ணே, போறப் போக்கைப் பார்த்தால், இந்த பெட்டியை ஒரு கிரேன் வைத்துதான் தூக்க வேண்டியிருக்கும்!” – என்று சிரித்தபடியே சொல்வோம்.

இதைக் கேட்டு வாய்விட்டு சிரிக்கும் அவர், “உயிர் இருந்தால், இந்தப்பெட்டியுடன் செல்வேன். இல்லாவிட்டால் மற்றொரு பெட்டியில் போவேன். இனி நான் எடுத்து போகாவிட்டாலும் நீங்கள் இதை என் வீட்டில் கொண்டு சென்று ஒப்படைப்பீர்கள் என்று எனக்கு தெரியும்!” – என்பார்.

ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த நாளில் இருந்து எல்லாருக்குமான உணவை, கோயா அண்ணன் தான் சமைப்பார். “நான் ஒரு வாரம் மட்டும் தானே இருப்பேன். என் தம்பிமார்களுக்கு என் கையாலேயே சமைத்து பறிமாறுகிறேன்!” – என்பார்.

ஒரு வெள்ளிக்கிழமை.

கோயா அண்ணன் சமைத்த சுவையான பிரியாணியை சாப்பிட்டவாறு, “அண்ணே, ஊருக்கு சென்று என்ன செய்வதாக உத்தேசம்?” – என்று கேட்டோம்.

அதற்கு கோயா அண்ணன் சொன்னார்: “ஊருக்கு சென்று ஒரு சின்ன மளிகை கடை வைத்து வாழ்க்கையை ஓட்டலாம் என்று நினைத்துள்ளேன்!” பிறரின் நலன்நாடும் அவரது எண்ணம் சிறக்க நாங்களும் பிரார்த்தித்தோம்.

“தம்பிங்களா, பிரார்த்தனை செய்தால் மட்டும் போதாது! உங்கள் வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்களை என் கடையிலிருந்துதான் வாங்க வேண்டும்!” – என்று சொல்ல, நாங்கள் அனைவரும் வாங்விட்டு சிரித்தோம்.

அன்று இரவு கோயா அண்ணனுக்கு லேசான காய்ச்சல். அதுதான் ஆரம்பம். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தோம். கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு கோயா அண்ணனை மருத்துவமனையில் சேர்த்து கொண்டு, எங்களை தனிமைப் படுத்தினார்கள்.

இரு நாட்களுக்குப் பிறகு எங்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது

அப்போதும், கோயா அண்ணன், “உங்களுக்கும் கொரோனாதான் தம்பிங்களா! மகிழ்ச்சியடைய வேண்டாம்!” – என்று கிண்டலடித்து சிரித்தார்.

கோயா அண்ணனின் அந்த சிரிப்பு இன்றும் நினைவில் இருக்கிறது.

அதன்பிறகு, “டிக்கெட் பணம் என்னவாகும்? அதைபற்றி விசாரிச்சு சொல்லுங்கள். நீங்கள் அந்த பணத்தை திரும்ப வாங்கி வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்!” - என்று சொல்லிவிட்டு, “எல்லாம் சரியாகிவிடும். பார்ப்போம்!” - என்று சொல்லி போனை துண்டித்தார்.

அடுத்தடுத்த நாட்களில் எங்களுக்கு அழைப்பு வரவில்லை. நாங்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லை.

அதன்பின்னர்தான் கோயா அண்ணன் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்டார்! என்ற செய்தி இடியாய் வந்து இறங்கியது.

எங்களால் அழக்கூட முடியவில்லை. ஏழு ஆண்டுகள் இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றாய் வாழ்ந்த நாங்கள் கோயா அண்ணனின் நெற்றியில் முத்தமிட இயலாத நிலைக்கு ஆளானோம்.

கதறி அழவேண்டுமென்றுதான் முதலில் தோன்றியது.

அரேபிய மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு குடும்ப சூழல் காரணமாகவே அந்த பாலை வாழ்வை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் வெறும் பாலை வாழ்வியல் பொம்மைகள் மட்டுமே! குடும்பத்தாரின் இன்பங்களுக்காக, சுமைகளுக்காக தொலைதூரத்தில் யாருக்கும் தெரியாமல் சுமை சுமக்கும் சுமைதாங்கிகள்!

நாங்கள் அறைக்கு திரும்பி வந்தோம்.

கோயா அண்ணன் இல்லாமல் அவரது கட்டில் தனியே கிடக்கிறது. அதை வெறித்துப் பார்க்கிறோம். எங்களால் நம்ப முடியவில்லை. பாசம் நிறைந்த அந்த மனிதன் இன்று இந்த பூமியில் எங்களுடன் இல்லை. “இறைவா இது என்ன சோதனை!” – எங்கள் விழிகள் கண்ணீரால் நிரம்புகின்றன.

கட்டிலுக்கு கீழே கோயா அண்ணனின் பெட்டியை நாங்கள் திறந்து பார்த்த போது, எங்கள் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியதை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஊரிலுள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக கோயா அண்ணன் வாங்கி வைத்திருந்த ஸ்பிரே, அத்தர் வாசனை திரவியங்கள், சோப்பு போன்ற ஏராளமான பொருட்கள் அதில் இருந்தன. அவற்றை பத்திரமாக கோயா அண்ணனின் வீட்டில் ஒப்படைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம்.

பாவம்..! கோயா அண்ணன்தான் ஊர் சேரவில்லை! அவர் ஆசையோடு சேகரித்த பெட்டியாவது ஊர் போய் சேரட்டும்!

#இன்ஷா_அல்லாஹ் ...
#தொடரும்


தியாகத் திருநாள் சிந்தனைகள்

Wednesday, July 29, 2020

பக்ரீத் பண்டிகை. / Vavar F Habibullah

பக்ரீத் பண்டிகை
a bit long skip if you want


சென்னையில் இருந்தாலும்
நாகர்கோவிலில் இருந்தாலும்
எங்கள் வீட்டு ஈத் பெருநாள்
விருந்து நிகழ்ச்சிகளில் எனது
மாற்று மத நண்பர்கள் அதிகம்
கலந்து சிறப்பு செய்வதுண்டு.
கொரோனா இப்போது இந்த
நிகழ்ச்சிகளுக்கு தடைவிதித்து
விட்டது.

நோன்பு பெருநாள் பற்றி
தெரியும்...ஆனால் ஹஜ்
பெருநாள் ஏன்..எதற்காக!
மத பண்டிகை பற்றி அறிய
விரும்பும் நண்பர்கள்
சாதாரணமாக என்னிடம்
கேட்கும் கேள்விகளுக்கு
நான் சில விளக்கங்கள்
தருவது உண்டு.

Abu Haashima #தொட்டால்_தொடரும் ... #குறுந்தொடர்_4

அபு ஹாஷிமா

#எத்தனை_தொல்லைகள்
#என்னென்ன_துன்பங்கள்....

அரபு நாட்டுப் பயணத்தின் ஆரம்ப நாட்களில் மக்கள் இலவசமாகத்தான் அங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
சிலருக்கு 500 ரூபாய் கொடுத்து அவர்களே பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் எடுத்துக் கொடுத்து அழைத்துப் போனார்கள்.
ஆப்பிரிக்க நாட்டு கறுப்பர்களை
வெள்ளையர்கள் ஆசைகாட்டி கடத்திச் சென்றதுபோல பல இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்.
பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டுவது,
பாலைவனங்களில் சாலைபோடுவது போன்ற கடினமான பணிகள் அவர்களுக்குத் தரப்பட்டன.

He wanted to BAN Islam from the Netherlands - Look what happened to him

Tuesday, July 28, 2020

தொட்டால்தொடரும் ! #குறுந்தொடர் -2 / Abu Haashima






அது ஆச்சர்யங்களை கொண்டு வந்து குவித்த இருபதாம் நூற்றாண்டின்
இறுதி காலம்.

1960 வருட வாக்கில் துபாய் மஸ்கட் நாடுகளுக்கு நம் மக்கள் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்தார்கள்.
பஸ்ஸில் சென்னை வரை பயணிக்காதவர்கள் கூட ஜெயந்தி ஜனதா ரெயிலில் பம்பாய்க்கு பயணித்து
அங்கிருந்து விமானம் ஏறி வளைகுடா நாடுகளுக்கு பயணித்தார்கள்.
ஏர்போர்ட்
இமிகிரேசன்
ஏர் ஹோஸ்டஸ்
வான்வெளி எல்லாமே புதுசு.
குடும்பத்தில் எல்லோரிடமும் பிரியா விடைபெற்று ...
" என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் .."
என்று முணுமுணுத்துக்கொண்டே பறந்தார்கள்.

தொட்டால்_தொடரும் ! #குறுந்தொடர்-1 /Abu Haashima

தொட்டால்_தொடரும் !#குறுந்தொடர்-1 அபு ஹாஷிமா



இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் சிங்கப்பூர்
மலேசியா
இலங்கை
ரங்கூன் போன்ற நாடுகளுக்கு
#திரை_கடலோடி_திரவியம்_தேடச் சென்றார்கள்.
அப்படிப் போன பலபேருடைய குடும்பம் #நல்லா இருந்தது. அவர்கள்
#ஜக்காத் கொடுத்தார்கள்.
மற்றவர்கள் வாங்கினார்கள்.
அவர்கள் #ஹஜ் செய்தார்கள். மற்றவர்கள் அவர்களை
#ஹாஜியாரே என்று அழைத்தார்கள். அவர்கள் புதிய வீடு கட்டினார்கள்.
கார் வாங்கினார்கள்.
பிள்ளைகளை டாக்டராகவும் இஞ்சினியராகவும் படிக்க வைத்தார்கள். வயல், தோப்பு, மனைகள் வாங்கிப் போட்டார்கள்.

அந்தக்குடும்பங்களில் பல குடும்பங்கள் இன்றும் நல்ல நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து வழங்கப் பட்டது. சென்ற இடமெல்லாம் அவர்களை கவுரவிக்க பலர் காத்திருந்தார்கள்.
அங்கே அவர்களின்
#பணம் அவர்களின் தகுதியைப் பேசியது. பலர் அவர்களை அண்டி வாழ்ந்தார்கள். மற்றும் சிலர் அவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.
தங்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதே அதற்குக் காரணம்.

ஏனென்றால் ...
சிங்கப்பூர், மலேசிய நாடுகளின் கதவுகள் அடைபட்டு விட்டன. புதிதாக யாரும் அங்கே போக முடியாது. உள்ளூர்வாசிகள் பலர் அந்த #முதலாளிகளின் கடைகளில் வேலைப் பார்த்தார்கள். பெரும்பாலான மக்கள் கூலி வேலையும்
#சாப்பாடு_கழிந்தால்_போதும் என்ற அளவுக்கு வருமானமுள்ள வேலையும் பார்த்தார்கள்.

Monday, July 27, 2020

எங்கே செல்லும் இந்தப் பாதை?

Sabeer Ahmed
எங்கே செல்லும் இந்தப் பாதை?


நீங்கள் மாற்று மதச் சகோதரர்களிடம் இஸ்லாத்தை எத்தி வைப்பவரா?

‘தாஃவா” பணியை தலையாயப் பணியாகச் சிரமேற்றுச் செய்பவரா?

ஊணுறக்கம் துறந்து தொலை தூரங்கள் பயணித்து இஸ்லாம் சென்றடையாத இடங்களுக்குச் சென்று, தங்கி மார்க்கம் போதிப்பவரா? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

ஒரு சம்பவத்தை விளக்கி விட்டு இந்தத் தலைப்பை ஞாயப்படுத்துவதாக இருக்கிறேன்.

நான் பணிபுரியும் நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளேயே இங்கு வேலை செய்வோரின் வசதிக்காகவும், நேரப்படி தொழுவதற்காகவும் ஒரு மஸ்ஜிதைக் கட்டித்தந்திருக்கிறார் எங்கள் (அர்பாப்) நிர்வாக இயக்குனர். சரியாகச் சொன்னால் இரும்பு வேலைகளில் துவங்கி உள் வேலைப்பாடுகள் வரை நானே முன்னின்று உருவாக்கியது இந்தப் மஸ்ஜித், அல்ஹம்துலில்லாஹ். இங்கு ஐந்து வேளைத் தொழுகை நடத்த பிரத்யேக இமாம் நியமிக்கப்பட்டு, வேலை நேரம் போக மற்ற எல்லா நேரங்களிலும்கூட தொழுகை நடக்கும். நிறுவனத்தின் கேம்ப்பில் வசிக்கும் இந்தியர்கள், பாக்கிஸ்தானியர், வங்க தேசத்தவர் மட்டுமல்லாது அரேபியர்களும் தொழும் இந்த மஸ்ஜித் 50க்கு 50 அடி பரிமாணத்தில் போர்ட்டபிளாக அமைக்கப்பட்டது. ஷார்ஜாவின் GECO SIGNAL எனும் இடத்தில் உள்ளதால் தினமும் ஓரளவு வரிசைகள் நிரம்பவே தொழுகை நடக்கும்.

கதவுகள்

கதவுகள்
Senthilkumar Deenadhayalan


எங்கள் வீட்டுக் கதவுகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்! அதில் கி. ரா வின் கதவு சிறுகதையை வாசித்துப் பாருங்கள் என்று சொல்லி இருந்தேன்!

நண்பர் ஒருவர் அது ஏழையின் வீட்டுக் கதவு, உழைத்து சம்பளம் வாங்குபவர்கள் வீட்டு கதவிற்கும், அவனுக்கு சம்பளம் தருபவன் வீட்டு கதவிற்கும் வித்யாசம் உண்டல்லவா என்று கேட்டிருந்தார்.

ஏழை, பணக்காரன், யார் வீட்டுக் கதவுகளுக்கு உள்ளும் புறமும் பல கதைகள் இருக்கும். அதில் களிப்பும் இருக்கும்! கண்ணீரும் இருக்கும். அதில் பொருளாதார வித்யாசங்கள் ஏதுமில்லை!

மகிழ்ச்சி மட்டுமல்ல, பல சொல்லொணாத் துயரங்களும் கூட அந்தக் கதவுகளில் பின்னால் புதைந்து இருக்கலாம்!

கதவே இல்லாமல் சாக்கு படுதா போட்டு மறைத்த வீடுகளுக்கும் அந்தக் கதவு ஒரு கௌரவம் தான்!

கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் கதவுகள் ஒரு சம்சாரி வீட்டிற்கு எவ்வளவு கௌரவம் என்று ஒரு உதாரணம் சொல்கிறேன். கிராமங்களில் பெரும்பாலும் விவசாயக் குடிகள். அவர்கள் என்ன தான் பெரிய விவசாயியாக இருந்தாலும் சிறிய விவசாயியாக இருந்தாலும், கையில் காசு இருக்காது!

/ தொட்டால்_தொடரும் ! #குறுந்தொடர்_3 / அபு ஹாஷிமா

தொட்டால்_தொடரும் ! குறுந்தொடர்_3
அபு ஹாஷிமா




இதை நான் தொடராக எழுத எண்ணவில்லை. என் கருத்தை சொல்லிவைக்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன். நண்பர்கள் பலர் அதை தொடர் என்று எண்ணி நிறைய எதிர்பார்த்ததால் 2012 ல் இதை
#அதிரை_வலைதளத்தில்
தொடராக எழுதினேன்.
இதில் வெளிநாட்டு வாழ்க்கையை பற்றிய இன்ப துன்பங்கள் எல்லாமே கலந்து வரும்.
கடைசியில் ஒரு புள்ளியில் முடியும்.

வெளிநாட்டில் இருந்தவர்களுக்கும்
இருப்பவர்களுக்கும் இந்தத் தொடர் ஒரு ஆறுதலாகவும் தங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இருப்பதால்
தொட்டால் தொடரும் தொடர்கிறது.

வெளிநாடுகளில் உழைப்வர்களின்
பின்னூட்டங்களில் அவர்கள் படும் வேதனையின் உச்சம் தெரிகிறது. வறுமை,வேதனை மற்றும் இக்கட்டுகளில் இருந்து விடுபட முடியாத ஏராளமான இளகிய உள்ளங்கள் வெயில் தேசத்தின் பாலை அடுப்புகளுக்கு விறகாகிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். தங்கள் துன்பங்களை துயரங்களை நம்மில் ஒருவர் பகிர்ந்து கொள்கிறார் என்பதை எண்ணி அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படுகிறது. அந்தத் துன்பங்களை அனுபவித்த அனுபவசாலிகளில் நானும் ஒருவன் என்பதால் சகோதரர்களின் இன்ப துன்பங்களை அவர்களோடு பகிர்வதில் எனக்கும் ஒரு ஆறுதல்தான்.

நினைவில் மலர்ந்தவை!

நினைவில் மலர்ந்தவை!
———————————

இஸ்லாமிய இலக்கியக் கழக ஆளுமைகள்!
———————————————————
1972 ஆம் ஆண்டு தொடக்கம் பெற்ற
இஸ்லாமிய இலக்கியக் கழகம்
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில்
முதல் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டின் போது 13-05-1973 அன்று
பேராசிரியர் இ. ப. முஹம்மது இஸ்மாயில், பேராசிரியர் பெரும்புலவர் சி. நயினார் முஹம்மது
ஆகியோரை அமைப்பாளர்களாகவும் இறையருட்கவிமணி கா.அப்துல் கபூர், மெளலானா எம். அப்துல் வஹ்ஹாப், எம்.ஏ., பிடி.எச்.,
பன்னூலறிஞர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீம், செந்தாமரை கே.பி.எஸ். ஹமீது,
கவிக்கோ அப்துல் ரகுமான்,
பேரா. கா.முஹம்மது பாரூக்,
மலேசியா டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லா, இலங்கை அறிஞர் டாக்டர் ம.மு. உவைஸ், அறிஞர் எம்.ஏ. அப்துல் அஜீஸ் ஆகியோரைச் செயற்குழு உறுப்பினர்களாகவும் கொண்டு செயல்படத் தொடங்கியது.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில் அங்கம் கொண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகிற்கு அரும்பெரும் சேவைகள் ஆற்றிய ஆளுமைகளில் இதோ சிலர்:-

Sunday, July 26, 2020

பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைகிறார் அமுதா ஐ.ஏ.எஸ்! அடுத்த ஸ்டெப் என்ன?

Documentaries Shows The Story Of Dawood Ibrahim The Head Of The Don World

கஷ்டப்பட்ட நடிகையால் கவரப்பட்ட ஹாஜி மஸ்தான் | Underworld DON Haaji Mast...

“பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிக இசையமைக்கவில்லை?” என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டபோது,

பாலிவுட் திரைப்படங்களுக்கு ஏன் அதிக இசையமைக்கவில்லை?” என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டபோது, “நான் நல்ல திரைப்படங்களை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் ஒரு கும்பல் எனக்கு எதிராக பாலிவுட்டில் இயங்குகிறது.” என வெளிப்படையாக கூறியிருந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, “வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.” என டிவிட்டரில் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

“பாலிவுட்டை கையாளக்கூடியதை விட உங்களிடம் அதிக திறமை இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது.” என பாலிவுட் கலைஞர் சேகர் கபூர் டிவிட் செய்திருந்தார்.


இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம். ஆனால், நேரத்தை மட்டும் மீட்க முடியாது. செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன. அமைதியாக கடந்து செல்வோம்.” என சேகர் கபூரின் டிவிட்டிற்கு ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.


கவிஞர் வைரமுத்து, “வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை.” என டிவிட்டரில் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

https://www.ndtv.com/…/st-money-comes-back-fame-comes-back-…

யாரை எங்கே வைப்பது!


முதல் வருட எம்பிபிஎஸ்
மதுரை மருத்துவக்கல்லூரியில்
சேர்ந்த நேரம்.ஒரு நாள், ஊர்
பிரமுகர் அதுவும் ஒரு டாக்டர்
என்னை பார்க்க ஹாஸ்டல்
பக்கம் வந்தார்.

அவரை வரவேற்று உபசரித்து
மாலை நேரம் மதுரை பிரபல
தாஜ் ஹோட்டலுக்கு அழைத்து
சென்று விருந்து பரிமாறி வழி
அனுப்பி வைத்தேன்.மிகவும்
சந்தோசத்துடன் சென்றார்.

அடுத்த வாரம் லீவில் நான்
ஊர் வந்தேன்.அடுத்த நாள்
என்னிடம் பேசிக் கொண்டி
ருந்த தந்தை கேட்டார்...

காலங்கள் திரும்ப கிடைக்காது


Thursday, July 23, 2020

என் இறைவனை எப்படி இன்னும் அதிகமாக நேசிப்பது

Fazil Rahman

என் இறைவனை எப்படி இன்னும் அதிகமாக நேசிப்பது என்று நினைத்தவண்ணமே இருட்டில் கொட்டக்கொட்ட விழித்த படியே படுத்து கிடத்தேன். வெகுநேரமாயிற்று உறக்கம் வர நேற்று!

அவன் மீதான என் நேசம் நிஜம் தானா என்ற எண்ணம் எப்பொழுதுமே எனக்குண்டு. அதன் விளைவு தான் இந்த உறக்கம் ஊறாத இரவு. நினைத்து பார்க்கையில், ரமளான் மாதம், பிறகு இந்த துல்ஹஜ்ஜின் முதல் பத்து, வருடாவருடம் நிகழ்கிற நான்கைந்து நாள்நீள பயிற்சி வகுப்புகள், அவ்வப்போது நிகழ்கிற அறிஞர்களின் உரைகள் தொடங்குவது முதல் அன்றைய இரவு படுக்கையை உதறி விளக்கணைத்து கிடந்துறங்குகிற வரை... இப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய சந்தர்ப்பங்களில் தான் அவன் நினைவு என்னை நனைக்கிறது.

எப்படி அவனை நேசிக்கலாம் என்றெண்ணிய போது எனக்கு சில உபாயங்கள் தோன்றின...

கட்டிட கலையின் மாஸ்டர்பீஸ் , ஐரோப்பாவின் மிக அழகிய மசூதிகளில் ஒன்றாகவும் வர்ணிக்கப்பட்டது.





இந்த பள்ளிவாசல் திறக்கப்பட்ட போது கட்டிட கலையின் மாஸ்டர்பீஸ் எனவும், ஐரோப்பாவின் மிக அழகிய மசூதிகளில் ஒன்றாகவும் வர்ணிக்கப்பட்டது. வெறுமனே அழகு என்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு பயன் தரும் வேறு பல தனித்துவங்களும் இந்த பள்ளிவாசலில் இருந்தன. குரோஷியாவின் மூன்றாவது பெரிய நகரமான Rijeka-வில் அமைந்துள்ளது இந்த பள்ளி. இந்நகரத்தின் முஸ்லிம் மக்கட்தொகை சில ஆயிரம்களை தொட்ட நிலையில், தங்களுக்கான முதல் மசூதியை கட்டமைக்க முயன்றனர் இந்நகர முஸ்லிம்கள்.

விரும்பும் நலம் வரும் வெள்ளி தின வாழ்த்துக்கள்!


புலரும் பொழுது
பொன்கதிர் பரப்பும்;
அலரும் மலர்கள்
அழகிய முகமாம்!

வளரும் தளிர்கள்
வனப்புடன் காணும்!
இளமை ராகம்
இதயம் உணரும்!

இளமை எண்ணம்


 

ஓருவன் எவ்வித எண்ணங்களை கொண்டுள்ளானோ அவற்றிற்குத் தக்கபடியே அவன் தோற்றமளிப்பான். அவன் இளமை எண்ணங்களைக் கொண்டிருப்பானாயின் இளமைப் பொலிவுடன் காட்சியளிப்பான். முதுமை எண்ணங்களை கொண்டிருப்பானாயின் முதுமைத் தன்மையுடன் தோற்றம் வழங்குவான்.

இதற்கு காந்தியடிகள், பண்டித நேரு ஆகிய  இருவரின் வாழ்க்கையும் சிறந்த சான்றுகளாகும்.

காந்தியடிகள் தம்முடைய வாணாளின் ஐம்பதாவது மைல்கல்லை தாண்டியதுமே தம்மை கிழவரென்று கருதத் தொடங்கிவிட்டார். எனவே மக்களும் அவரை அப்பொழுதே ‘காந்தி தாத்தா’ என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள். அவரும் அப்பொழுதே பல்லெல்லாம் விழப்பெற்று பொக்கை வாயில் புன்னகை மிளிர காட்சி வழங்கலானார்.

ஆனால் பண்டித நேருவோ, தம்முடைய வாழ்க்கை பாதையில் 73-வது மைல்கல்லை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது கூடத் தம்மை இளைஞரென்றே கருதி கொண்டார். தம்முடைய பிறந்த நாளை மக்கள் கொண்டாடுவதை கூட வெறுத்தார். அவ்விதம் செய்வது தம்முடைய வயதைப் பற்றியே சிந்தனைப் பற்றியிருக்கும் தமக்கு தம்முடைய வயதை நினைவுறுத்தி கிழவனாக்க முயல்வதென்றும் அவர் வருந்தினார்.

இளமையை என்றென்றும் பெற்றிருப்பதற்குச் சிறந்த வழி சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் ஒரு சிறுவராக மாறி அவர்களுடன் சிரிக்கவும், விளையாடவும் செவ்யது தான் என்பதை உணர்ந்து அவ்விதமே செய்தும் வந்தார். எனவே காந்தியடிகளை அவருடைய ஐம்பது வயதுக்கு மேற்பட்டு தாத்தா என்று அழைத்த சிறுவர்கள் 73 வயது நிரம்பப் பெற்றிருந்த நேருவை ‘சாச்சா’ என்று அழைத்தார்கள்.

உங்களின் தலைமை அமைச்சருடன் சேர்ந்து எங்களால் ஒத்து நடைபோட இயலவில்லையே, அவர் அவ்வளவு வேகமாக அல்லவா நடக்கின்றார்! என்று ரஷ்யர்கள் வியப்பு மொழி பகர்ந்தார்கள். எழுபத்து மூன்று வயது நிரம்பப் பெற்றிருந்த போதும் அவர் இளமை எழிலுடன் காட்சி வழங்கினார். அவருடைய கடும் உழைப்பைக் கண்டு இளைஞரும் வெட்கித் தலைகுனிய வேண்டியிருந்தது. இவற்றிற்கெல்லாம் அடிப்படை என்ன ? அவருடைய இளமை எண்ணம் தான்.

மாயவரம் காஃபி_பில்டர்!



முதலில் காஃபி_பில்டர் தயாரித்தது எங்கள் கடையில்தான் .

எங்கள் கடை ஆரம்பிக்கப்பட்டது 1932 இல்
காஃபி_பில்டர் பம்பாய் வரை சென்றது .அதனால்தான் மாயவரம் காஃபி_பில்டர்! எனப் பெயர் பெற்றது .பின்புதான் கும்பகோணத்தில் தயாரிக்க ஆரம்பித்தனர்

காளியாகுடி_காஃபி_பில்டர்!

காளியாகுடி_காஃபி_பில்டர்!


மயிலாடுதுறையில் 18 வருடங்களுக்கு முன் ஒரு கணிப்பொறி பயிற்சி மையத்தை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது!

எல்லா நாளும் இரவு முழுவதும் மாணவர்களுக்கு லேப் கொடுப்போம். வாரத்திற்கு ஒரு நாளென இரவுப் பணியை பகிர்ந்து கொள்வோம்! என்னுடைய முறை புதன் இரவு.

இரவு பதினொரு மணிக்குமேல் லேபில் எங்கள் உதவி தேவைப்படாது. அதன் பிறகு முதுகலை படிக்கும் மாணவர்கள்தான்! அவர்களையே பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு உறங்கி விடுவேன். அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்து பல் துலக்கிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பேப்பரை வாங்கி அதை அரிவாள் போல காலரின் பின் புறம் செருகிக் கொண்டு மணிக் கூண்டு அருகிலிருக்கும் டிபன் காளியாகுடியை வந்தடைவேன்.

மகிழ்ச்சியான காலம் திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா !

அறிஞர் அண்ணாவின் படம் இவர் வீட்டில்

அறிஞர் அண்ணாவின் படம் இவர் வீட்டில்

மாயவரம் (மறைந்த late )டாக்டர்.கேப்டன் R .ராஜ்கோபால் அவர்களது சேவை எக்காலமும் நினைவில் நிற்கும்
இவர் எங்களது குடும்ப மருத்துவராக இருந்தார் . இவருக்கு எங்கள் தந்தை ஒவ்வொரு ஆண்டும் அவரது வீட்டுக்கு தேவையான முக்கிய பொருட்களை அனுப்புவதுடன் வைத்தியம் பார்த்ததற்கான தொகையும் கணக்கு பாராமல் அனுப்பி வைப்பார்கள் .அதனால் நாங்கள் அவ்வப்போது பார்க்கும் வைத்தியத்திற்கு பணம் கொடுப்பது அவசியமில்லாமல் இருந்தது .
எங்கள் தந்தைக்கு அவர்தான் தந்தையின் இறுதிவரை வைத்தியம் பார்த்தார் .
எங்கள் தந்தை ஆவி பிரியும் சில வினாடிகளுக்கு முன்கூட தமக்கு வைத்தியம் செய்த மருத்துவருக்கு நன்றி கூறினார்கள்.
இவரது இருப்பிடம் மயிலாடுதுறை மகாதானத் தெருவில் இருந்தது .அவரது மருத்துவம் பார்த்த இடம் பட்டமங்கலத் தெருவில் மணிக்கூண்டு அருகில் இருந்தது

Tuesday, July 21, 2020

அருள்வாய்_யா_அல்லாஹ் ...

அருள்வாய்_யா_அல்லாஹ் ...
                                                                           Abu Haashima

இறைவா...
என் பிழைகளைப்
பொறுத்தருள்வாய்!

என் பாதையை
ஒளியாக்குவாய்!

என் சிந்தனையை
அழகாக்குவாய்!

உன் அருட் கொடைகளை
அள்ளித் தந்திடுவாய்!

முட்களிலேயே
வாசம் செய்கின்ற என்னை
மலர்களோடும்
வாழச் செய்வாய்!

மகராஜரும்_மகராசியும்


மகராஜர் என்ற அடைமொழி சிலருக்கு வியப்பாக இருக்கலாம்: அவர்களை அறியாதவர்களுக்கு! அவர்களைத் தெரிந்தவர்களுக்கு இந்த அடைமொழி ஓர் ஆச்சர்யக் குறி இல்லை.
ஏனெனில் அவர் தன்னளவில் ஒரு சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தவர், சட்டைப் பையில் காலணா இல்லாதிருப்பினும்!

இந்த அடை மொழிக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று பல வால்யூம்கள் பலரால் எழுதப்படும் என்ற நம்பிக்கை உண்டு இன்ஷா அல்லாஹ்.

அவர்களது இந்த நினைவு தினத்தில் அவர்களைப் பற்றிச் சிந்திப்பதை விட, அவர்களுடைய வாழ்க்கைத் துணைவியாகிய நர்கீஸ் அம்மா அவர்களைப் பற்றி எழுதுவது சாலப் பொருத்தம் என்று நினைக்கின்றேன்.

#நர்கீஸ்_அம்மா
அவர் பெற்றெடுத்த ஐந்து பிள்ளைகளுக்கு மாத்திரமல்லாமல், முஸ்லிம் லீக்கர்கள் அனைவருக்கும் அன்னையாக விளங்கியவர்.

#அவர்_கையால்_அமுதூட்டப்படாத_முஸ்லிம்_லீக்_செயல்வீரர்கள்_யாரேனும்_உண்டா?
#தலைவரைப்_பார்க்க_வாலஸ்_கார்டனுக்கு_வந்தவர்களில்_பெரும்பாலோனோர்_ஓர்_கவளமாவது_உண்டிருப்பர்.

Monday, July 20, 2020

Joe Biden Will End Donald Trump's Muslim Ban


மதம் / ஈரோடு தமிழன்பன் கவிதை

மதம்
மாறச் சொல்வதல்ல இஸ்லாம்
மனம்
மாறச் சொல்வது இஸ்லாம்

குணம்
மாறச் சொல்வது இஸ்லாம்
சாதியை மறந்து
மனித குலம் ஒன்றாக
மாறச் சொல்வது இஸ்லாம்

Sunday, July 19, 2020

LIFE IN A DAY TAKE PART

Taking part is simple: On July 25, grab your camera or smartphone and film your day.

You might record a typical day ⁠— going to work, connecting with family, being with friends. Or maybe something special is happening – it’s your wedding day, you have important news to share, or you’re having a baby. You could show us lockdown in your city, how your world is opening up, or something you’re fighting for.

Alternatively, you could choose to film someone you find interesting and spend the day capturing their July 25th.

We’d also like you to show or tell us the answers to these four questions:

What do you love?
What do you fear?
What would you like to change? Either about the world, or your own life.
What’s in your pocket?
The most important thing is to make it personal. Share what matters to you. This is your film.

Submissions are open from July 25 – August 2. After submissions close, a team of researchers and editors will review the clips received. If your footage is used in the final film, we will contact you later in the year.

Saturday, July 18, 2020

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு! / Vavar F Habibullah


கொரோனாவை யாரால்
கட்டுப்படுத்த முடியும் என்று
கேட்டால் அது டாக்டர்களால்
மட்டுமே முடியும் என்று பச்சை
குழந்தைகளும் சொல்லும்.

Medical Doctors
ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு
நூற்றுக்கும் மேல் உயிரழப்பு
என்றாலும் கொரோனா நேரம்
தொய்வின்றி கடும் உழைப்பு.
நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம்
சுழலும் மருத்துவப்பணி.
சரியாக உணவில்லை
நிம்மதியாக உறக்கம் இல்லை
குடும்பத்தை பிரிந்து
இல்லறம் துறந்து சன்யாச
துறவு போல் வாழும் ஒரு
அசாதாரண கர்ம யோகம்.

அரசு மருத்துவமனைகளில்
இளம் டாக்டர்கள் படும்பாடு
இங்கு சொல்லி மாளாது.
டாக்டருக்கான முகக்கவசம்
கூட ஒன்றே வழங்கப்படும்
அவல நிலை.தினமும் கைப்
பணம் நூறு ரூபாய் செலவில்
வெளியில் கவசம் வாங்கும் நிலை.
ஐம்பது கொரோனா நோயாளிகளை
ஒரு ஷிப்டில் ஒரே டாக்டரே
கவனித்து சிகிச்சை அளிக்க
நெஞ்சில் உரம் வேண்டும்.
கொரோனா தன்னையும்
தாக்கும் என்பது தெரிந்தும்
அச்சம் இல்லை
அச்சம் இல்லை
அச்சம் என்பது இல்லையே
என்ற உண்மையை உரக்கச்
சொல்லிக் கொண்டே
வார்டுகளில் நடை பயின்று
என் கடன் பணி செய்து
கிடப்பதே என்ற நீதிக்கு
தலைவணங்கி அறவழியில்
நடந்து கொரோனா காலத்தில்
நோயாளிகள் உயிர் பிழைக்க
உதவும், எனது இளம் தம்பிகள்
மருத்துவ சகாக்களின் தூய
தொண்டுள்ளம் கண்டு நெஞ்சம்
உவப்பதை அல்லால் வேறொன்று
அறியேன் பராபரமே!

அந்த இளம் மருத்துவர்கள்
நண்பர்கள் அனுதினமும்
மருத்துவ பணிக் காலத்தில்
படும் பணித்துயரங்களை
சீனியர் என்ற முறையில்
என்னிடம் பகிரும் போது
அவையடக்கம் கருதி...
எதுவும் விமர்சனம்
செய்யாமல் சற்று
விலகிச் செல்கிறேன்.

நாங்கள் மருத்துவம் படிக்கும்
அந்த நாட்களில் மருத்துவத்
துறையை நோபிள் புரபசன்
என்று பெருமையாக சொல்வர்.
ஹிரோசிமா நாகாசாகி
அணுகுண்டு பேரழிவிற்கு
பின்னர் விஞ்ஞானி ஆல்பர்ட்
ஐன்ஸ்டைனிடம் பத்திரிகை
யாளர்கள் கேட்டார்கள்.

சார் மறுபிறப்பு என்று ஒன்று
இருந்தால் நீங்கள் யாராக
இருக்க விரும்புவீர்கள்.
ஐன்ஸ்டைன் மிகவும் கூலாக
சொன்னார்..
ஐ ஜஸ்ட் வாண்ட்
டு பிகம் எ பிளம்பர்!
நோ மோர்
எ சயிண்டிஸ்ட்.

இப்போது என் போன்ற
மூத்த மருத்துவர்களுக்கும்
அப்படித்தான் சொல்லத்
தோன்றுகிறது.
Medical Profession is
No more a Noble Profession
DR HABIBULLAH
Former Honorary Secretary
Indian Medical Association
Kanyakumari District Branch


National Mathematics Day (I.e.,Birth Day of Srinivasa Ramanujam)

✖➕➖➗


See this Absolutely amazing Mathematics given by great Mathematician இராமானுஜம்

1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்


200 கோடி மக்களின் தன்னிகரற்ற, உயிரிலும் மேலான தலைவர்.

200 கோடி மக்களின் தன்னிகரற்ற, உயிரிலும் மேலான தலைவர்.

அவரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் நடைமுறையையும் இனம், மொழி, கலாச்சாரம், தேசம், பிரதேசம், அரசாங்கம், கட்சி, இயக்கம் என்ற அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி அவரை பின்பற்றும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து குறைவாகவோ அதிகமாகவோ ஏற்று கொள்ளப்பட்ட உலகின் ஒரே தலைவர்.

# அவரின் வாழ்க்கையில் #

பொய், புரட்டு, பித்தலாட்டம், கோள் சொல்லி, ஏமாற்றியது இல்லை.

மதத்தின் பெயரை சொல்லி உழைக்காமல் வயிற்றை நிறப்பியது இல்லை.

அடுத்தவரின் நிலத்தையோ, உரிமையை பறித்தது இல்லை.

மூன்று நாட்கள் தொடர்ந்து வீட்டில் உணவிற்காக அடுப்பு எரிந்ததும் இல்லை.

எண்ணையல் பொறிக்க பட்ட உணவை வாழ்வில் ஒரு முறை கூட உண்டதில்லை.

அரசாங்க கருவூலத்தில் இருந்து சல்லிகாசு சொந்த தேவைக்கு எடுத்ததில்லை.

மது அருந்தியதில்லை, வட்டி வாங்கியதில்லை, விபச்சாரம் செய்ததில்லை.

அவரின் சொந்த விஷயங்களில் துரோகம் இழைத்தோரை பழி வாங்கியதில்லை.

நெஞ்சு எரிச்சல், வாயு, மலச்சிக்கல், புட்-பாய்சன், வாய் துர்நாற்றம்


AR Rahman's Exclusive Interview | எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு திரும்பக்...

Dr.Rela Institute and Medical Centre was inaugurated by M.K. Stalin Pres...

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் மன்னர் Rela Institute டாக்டர். முகமது ரேலா | Mohamed Rela


Thursday, July 16, 2020

பேரம் பேசி மானங்காப்பாள்...! /Hilal Musthafa




தலைவா வாழ்க!--எங்கள்
தலைவா நீ வாழ்க!
ஓசை தொண்டையைக் கிழிக்கும்--எதிர்
ஓசை வானையும் பிளக்கும்!
( தலைவா...)

ஆளுயர மாலை அக்குளிலே சரவெடி
அள்ளிச் சுமந்து பற்றவைப்பான்!

தோளிலே துண்டு பக்கெட்டு பசைமாவு
போஸ்டர் ஒட்டிச் சுற்றித்திரிவான்!
( தலைவா...)

மத்தியானம் பசிதான் மாலையிலே டீ பீடி
தலைவர் வாழ உயிர்கொடுப்பான்!

சத்தியமா குடும்பம் கஞ்சியின்றி வீட்டில்
நொந்து வீழத் தண்ணியடிப்பான்!
( தலைவா...)

ரோட்டிலே படுக்கை கொசுக்கடி வேறே
கட்சி வாழ கொடிபிடிப்பான்!

பாட்டோடு டான்ஸு ஆடித்தான் தெருவில்
டப்பாங் கூத்தைப் பாடிக்களிப்பான்!
( தலைவா...)

முருங்கை மரம் சில தகவல்கள்

கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது.  பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே.  மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.

இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை.  இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள்.  இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.

முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர்.  முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.  வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர்.  அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும்.  எளிதில் உடையும் தன்மை கொண்டது.  இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

இது இந்தியா முழுமைக்கும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.

These Foods Clean Your Arteries & Can Prevent A Heart Attack

Here are some links to simplify your search!

Wednesday, July 15, 2020

HOW TO FIX - Server IP/DNS Address Could Not Be Found

காமராஜர் வரலாறு - சிவகுமார் | History of Kamarajar - Sivakumar

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு! Perunthalaivar Kamarajar Vazhkkai...

"தெருவுக்குள் ஓடும் ரயிலை பார்த்திருக்கிறீர்களா? | Hanoi Train Street..

"தெருவுக்குள் ஓடும் ரயிலை பார்த்திருக்கிறீர்களா? | Hanoi Train Street.. குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே ஹனோய் ரயில் தெரு நம்பமுடியாத வாழ்க்கை

கவிப்பேரரசு வைரமுத்து | கவி.க.மு.ஷெரிஃப் நூற்றாண்டு விழா | முஸ்தபா தமிழ்...

திரு. வீரபாண்டியன் | கவி.க.மு.ஷெரிஃப் நூற்றாண்டு விழா | முஸ்தபா தமிழ் அற...

Tuesday, July 14, 2020

அமெரிக்க விமானதளத்தில் எந்தவிதமான சோதனையும் செய்யாமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்


அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்துவிட்டேன். அமெரிக்க விமானதளத்தில் எந்தவிதமான சோதனையும் செய்யாமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள். ஏர் இந்தியாவும் உறுதிமொழியை மட்டும் வாங்கிக்கொண்டு பயணச்சீட்டுக் கொடுத்துவிடுகிகிறது. சென்னை விமானதளத்தில் ட்ராலி கூடக் கொடுப்பதில்லை. பயணிகளே தத்தம் பெட்டிகளைத் தள்ளிக்கொண்டு செல்லவேண்டும். உடன் வருபவர்களும் உதவ அனுமதியில்லை. பயணியரில் பாதிக்கும் மேல் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள். மற்றவர்களில் சிலர் கைக்குழந்தையுடன் வந்தவர்கள். நல்ல வேளையாக ஒருவர் என்மேல் பரிதாபப்பட்டு எனக்கு ஒரு உதவியாளரை அனுப்பினார். ஆனால் விமானதளத்திற்குள் இடைவெளி நியதி நன்றாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வெப்பச் சோதனை செய்தார்கள்.

Sunday, July 12, 2020

The Real Masjid Al-Aqsa (Underground)����

This video is to clarify misconceptions about Masjid Al-Asa the third holiest Mosque in Islam. The Dhome of The Rock and Masjid Qiblay (The name is not Masjid Al-Asa, this is wrong propaganda) are both on the blessed earth, which is Masjid Al-Asa. Al-Aqsa also have undergrounds which can hold many 100 thousands of People, in one of the undergrounds you will find the original structure said to be built by Prophet Sulayman (Solomon).

ஜெருசலம் நகரில் யூதர்கள் பெரும்பான்மையா? அது உண்மையா?

Aashiq Ahamed

இன்றைய தேதியில் யூதர்கள் பெரும்பான்மையாக இங்கே ஆக்கிரமித்து இருந்தாலும் (யூதர்கள் 60%, முஸ்லிம்கள் 33%), ஒரு முக்கிய விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். அதாவது, இன்றைய ஜெருசலம் நகரத்தை எப்படி நாம் புரிந்துக்கொள்கிறோம் என்பதில் தான் விசயம் இருக்கிறது.

இன்றைய ஜெருசலம் என்பது வரலாற்றில் நாம் படித்த / கேட்ட ஜெருசலம் அல்ல. அல் அக்ஸா பள்ளிவாசல் உள்ளிட்ட இஸ்லாமிய, யூத, கிருத்துவ புனிதத்தலங்கள் அடங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்நகரானது, இன்று, பழைய நகரம் (Old City) என்றழைக்கப்படுகிறது. சுமார் 0.9 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இந்த பழைய நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தான் இன்றைய நவீன ஜெருசலம் உருவாக்கப்பட்டது. ஆக, பழைய நகரம் என இன்று அழைக்கப்படும் பகுதி தான் வரலாற்றில் நாம் படித்த ஒரிஜினல் ஜெருசலம்.

சரி, விசயத்திற்கு வருவோம். இந்த பழைய நகரத்தின் இன்றைய மக்கட்தொகை சுமார் 37,000 ஆகும். இதில் முஸ்லிம்களே பெரும்பான்மை. அதாவது, ஒரிஜினல் ஜெருசலத்தின் இன்றைய மக்கட்தொகையில் 81% மக்கள் முஸ்லிம்களாவர். யூதர்கள் 9% இருக்கின்றனர்.

முனீர் தொலைக்காட்சிக்கு மனமுவந்தளித்த வாழ்த்து.

அப்துல் கையூம் 
இசையமைப்பாளர் நாகூர் D. மியான் துவங்கயிருக்கும் முனீர் தொலைக்காட்சிக்கு அடியேன் மனமுவந்தளித்த வாழ்த்து.

ஆர்வத்தை ஊக்கப்படுத்தினால் உயர்வடைய முடியும்

தந்தை சொல் மந்திரமா அல்லது உன் செயல் உனக்கு உயர்வுதருமா !
ஆர்வத்தை தடுத்து நிறுத்துவதால் செயலின் விளைவு சரியில்லாமல் போகும்
ஆர்வத்தை ஊக்கப்படுத்தினால் உயர்வடைய முடியும்
தந்தை சொல்லையும் கேட்க வேண்டியதுதான் அது மார்க்கத்திற்கு விரோதமாக இல்லாதவரை
கல்வியை செயலை நல்லதாய் இருக்க தம் பிள்ளைகளுக்கு ஊக்கம் கொடுப்பதால் அதுவும் நிச்சயமாக உயர்வடையலாம்
ஆர்வமும் பிடிப்பும் இல்லாத செயலில் தொடர்வது மனதளவில் கேடு விளைவிக்கும் .அத்துடன் அந்த செயலிலும் தொடர்ந்து நீடித்து இருக்க முடியாது

Friday, July 10, 2020

ஊத்தப்பம் செய்க


எல்லோரும் போற்றும் இறைத் தூதரே

Abdul Kaiyoom Baqavi

What is Dhul Hijjah?


PERSIAPAN NEW NORMAL TK ISLAM ARRAZZAQ

What does 2020 look like for you? Be part of LIFE IN A DAY on 25 July.

Make a movie with Ridley Scott and Kevin Macdonald | Film your day July 25

பள்ளிவாசல் கட்டுமான நிலத்துக்கு நிதியளித்த ஈகை மனசுக்காரர்கள் ....


இம்மை வாழ்க்கையில் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவியளித்தால் மறுமை வாழ்க்கையில் கருணையாளன் அல்லாஹ் நமக்கு சிறப்புகளை உள்ளடக்கிய அழகிய அந்தஸ்த்தை வழங்குவான் என்பதை நாமறிவோம் ....

உகாண்டா தேசத்தின் தலைநகர் கம்பாலாவிலிருந்து தோராயமாக 250 கி.மீ.தூரத்தில் கிழக்கு திசையில் அமைந்திருக்கும் 'பல்லிசா' என்கிற மாவட்டத்தின் ஏழை மக்கள் வசிக்கும் ஊரில் பள்ளிவாசல் கட்டும் நிலத்துக்காக உதவியளிக்க கோரும் விண்ணப்பத்தை அங்குள்ள பொறுப்பாளரான இமாம் வழியாக உகாசேவா தலைமைக்கு மே மாதம் அனுப்பப்பட்டது ....

செயற்குழு வல்லுனர்கள் நேரடியாக சந்தித்து உரையாடி தேவையினை பரிசீலித்து தீர்மானிக்க தற்போதைய கொரோனா சூழல் அனுமதி அளிக்காததால் அந்த வேண்டுகோள் கடிதத்தை செயற்குழுவின் வாட்ஸப் தளத்தில் பதிவு செய்யப்பட்டது ....

இணையில்லா இறைவனே


Thursday, July 9, 2020

இறைவன் என்பவன் … இறைமறையின் அத்தியாயம் 112 – இக்லாஸின் கரு !



இறைமறையின் இனிய வசனங்களை எழில் கொஞ்சும் அழகிய குரலில் எங்கள் இளவல் T. அஹ்மது ஓத அதனை அழகு தமிழில் கம்பீரமான குரலொலியில் சகோதரர் சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் அவர்கள் இணைந்து வழங்கியிருக்கும் மொழியாக்கம் கேட்போரை சிலிர்க்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கிறது !

ஆக்க ஒரு தெய்வம்
அழிக்க ஒரு தேவன்
காக்க ஒரு கடவுள்
கண்காணிக்க ஒன்று

படைக்க ஒரு பரம்பொருள்
பரிபாலிக்க பரமன் என
பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய
பலகீனனல்லன் இறைவன்

வானங்களைப் படைத்தவன்
வணக்கத்திற்குரியவன்
அவன் என்று சொல் – அவன்
ஒருவன் என்று கொள்

உடற் தேவை உளத் தேவை
உள்ளிழுத்து வெளியேற்றும்
உயிர் சுவாசத் தேவை – இன்னும்
அகத் தேவை புறத் தேவை
அளவற்ற பொருட் தேவை
எனும் எத்தேவையும்
இல்லாதவன் அவன்

Wednesday, July 8, 2020

கவுன்சிலிங் ! (Hyper Active Psychology)

கவுன்சிலிங் !
(Hyper Active Psychology)

தற்காலத் தலைமுறையின் மற்றுமொரு நவீனக் கண்டுபிடிப்பு ‘கவுன்சிலிங்’! முந்தையத் தலைமுறைகள் அதிகம் கேட்டிராதச் சொல். படிப்பறிவே இல்லாத கிராமத்தில் போய்க் கேட்டாலும் ‘கவுன்சிலிங்’ கவுன்சிலிங்தான். தமிழ்ச் சொல் தெரியாது. அவ்வளவு பிரபல்யம் இச்சொல்.

என்னாயிற்று? ஏன் கவுன்ஸிலிங்?

“பையன் நல்லாப் படிக்கிறான். துறுதுறுன்னு இருக்கான். வேர்க்க விறுவிறுக்க விளையாடுறான். ரொம்பவும் சுறுசுறுப்பாக இருக்கான். நாட்டி பாய்” என்று புகழாரம் சூட்டிக் கொஞ்சிக் கொண்டாடியக் காலம் போய், “என்ன உங்க பையன் ரொம்பச் சுட்டித்தனம் பண்றான்! ஒழுங்கா உடனே டாக்டரிடம் அழைச்சிட்டுப் போய் கவுன்சிலிங் கொடுங்க. ஹைப்பர் ஆக்டிவா இருக்கான்” என்று பெற்றோருக்கு அறிவுரை சொல்லும் காலத்தில் இருக்கிறோம்.

சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்

சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்5

எங்கள் குழு
நிறுவனர்
முஸ்தபா


சிங்கப்பூரின் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் வகையில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் திரு முஸ்தபா அவர்கள் தனது முஸ்தபா தமிழ் அறக்கட்டளை மூலம் தமிழ்ப் பணிக்கு உதவிகள் பல செய்து வருகிறார். தனது அறக்கட்டளை தஞ்சை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘கரிகால் சோழன் விருது’ எனும் பெயரில் ஆய்விருக்கை ஏற்படுத்தி சிங்கை, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் சிறந்த நூலுக்கு நடுவர் கொண்டு விருதுகள் அளித்து வருகிறார். சிங்கப்பூர் எழுத்தாளர்களின் தமிழ், இலக்கியம் வளர்ச்சிக்கென இலாப நோக்கமில்லாத ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழையும் நடத்தி வருகிறார்.

வெட்டுண்ட மரம் போல வீழ்ந்தான் தம்பி.


30 வயதுதான். திடகாத்திரமானவன். 70 கிலோ எடை. ஐந்தேமுக்கால் அடி உயரம். புகை, மது, மாது, இத்யாதிகளென்று கெட்டப் பழக்கமென சமூகம் சுட்டும் எந்தப் பழக்கமும் இல்லாதவன். சித்தா, ஆயுர்வேதம் தொடங்கி நாட்டு மருத்துவம் வரை நல்ல பரிச்சயம் கொண்டவன். ஆரோக்கியம் மீது அத்தனை அக்கறை. லிட்டர் லிட்டராக கபசுரக் குடிநீர் அருந்தி, எப்போதும் கைகளை சானிட்டைஸ் செய்து, மாஸ்க் அணிந்து உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் தீவிரமாகக் கடைப்பிடித்தவன்தான்.

வீழ்ந்தவன் அப்படியே மயக்கநிலைக்குப் போனான். அண்ணன் சிவராமன் மடியில் தாங்கியிருக்க, அவனது வாயில் தண்ணீரை ஊற்றினேன். நாக்கை மடக்கி தண்ணீரை உட்கொள்ள மறுத்தான். முகத்தில் பளிச்சென்று குளிர்ந்த நீரை அடித்தவுடன் மயக்கம் தெளிந்தான்.

தாஜ்மகாலின் அழகை வீட்டில் இருந்தபடியே முழுவதும் சுற்றி பார்க்கலாம். இந்த லிங்கை அழுத்தவும்*

*உள்ளே செல்ல செல்ல வெள்ளை நீல குறியீடு இருக்கும். அதனை தொட தொட தொடர்ந்து முழு பூங்கா வையும் ரசிக்கலாம்.தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை பாராட்டு வோம்.*