Saturday, August 10, 2019

ஹஜ் ஒரு பார்வை

ஆக்கம் Dr.Vavar F Habibullah
ஹஜ் கடமை என்றாலும் அது
தரும் அநுபவம் அளப்பறியது.
அநுபவித்தால் மட்டுமே
அறியப்படும் ரகசியம் இது.

பெற்ற மகனை, தந்தை
அறுத்து பலியிடத் துணியும்
தியாகப் பலி,இறை
கட்டளையால் மிருகப்
பலியான அதிசயம்!
பாலை வனத்தில்
குழந்தை இஸ்மாயில்
காலடியில் உருவான
வற்றாத ஜம்ஜம் நீரூற்று!
அழும் குழந்தையின் தாகம்
நீங்க அன்னை ஹாஜரா நடந்த
சபா மர்வா மலைப்பாதை...!
வலம் வரும் கஃபா ஆலயம்
அதை கட்ட வானில் இருந்து
இறங்கிய அஸ்வத் விண்கல்
என்ற விஞ்ஞானம் சொல்லும்
மெஞ்ஞானக் கல்...!!


தையல் இல்லாத வெள்ளை
உடை தரித்து,கஃபா ஆலயம்
உலா வந்து,சபா மர்வா
மலையிடை நடந்து,
மினா கூடாரத்தில் தங்கி,
அதிகாலையில் அரபாத் சென்று
வாழ்நாளில், தான் செய்த
தவறுகளை நேரிடையாக
இறைவனிடம் முறையிட்டு
கருங்கல் மனிதனே கைகட்டி
வாய் விட்டு கதறி அழும் காட்சி
(100% catharsis) ஆகும்.

இரவில் முஸ்தலிபாவில்
தனிமையில்.. வெட்ட
வெளியில், அநாதைப் போல்
படுத்து, தியானிக்கும் அச்ச
உணர்வு,மரணத்தையும்,
மறுமை ரகசியத்தையும்
ஆத்மாவுக்கும்
கற்றுக் கொடுக்கும்.

காலையில் எழுந்து, தன்னை
வழி கெடுக்கும் சாத்தான்களின்
கல் சிலைகளை கல்லெறிவது
மயிர் கூச்சரிய செய்யும்.இந்த
தன்னை மறந்த,
பேரானந்த நிலையில்
பலர் உயிரிழப்பதும் உண்டு.
பின்னர்,மக்கா கஃபா
ஆலயம் வந்து, தவாப் முடித்து
தலைமுடி களைந்து,வெள்ளை
உடை களைந்து,ஒட்டகம்
அல்லது ஆடுகளை அறுத்து
அதன் மாமிசத்தை
ஏழைகளுக்கு இனாமாக
வழங்குவதோடு ஐந்து நாள்
ஹஜ் கடமை நிறைவு பெறும்.
ஹஜ் ஒரு புதிய வாழ்க்கை
முறையை கற்று கொடுக்கும்
ஆன்மீக பயிற்சி பட்டறை
என்று சொன்னால் அது
மிகை அல்ல.முறையாக
ஹஜ்ஜை அநுபவித்தவர்கள்
வாழும் காலம் வரை எந்த
தவறையும் செய்வதில்லை.
Hundred percent
Life Transforming
Experience
ஈத் முபாரக்!

Vavar F Habibullah

No comments: