Saturday, August 24, 2019

#அன்பு_அண்ணனோடு ...

Abu Haashima

#டாக்டர்_ஹபிபுல்லாஹ் ..

#டாக்டர்_ஹபிபுல்லாஹ்
இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
பயணம் சொல்வதற்காக நேற்று
வீட்டிற்கு வந்திருந்தவர் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அண்ணனோடு பேசுவதே தனி சுவாரஸ்யம்.
உள்ளூர் மனிதர்கள் முதல்
உலகப் புகழ் பெற்ற மனிதர்கள் வரை
அறிந்து வைத்திருப்பவர்.
அரசியலும் ஆன்மீகமும்
சரளமாக வந்து விழும் அவர் வார்த்தைகளில்.
அவர் தொடாத சப்ஜெக்டே இல்லை எனலாம்.
சிறந்த பேச்சாளர்
எழுத்தாளர்
சிந்தனையாளர்
மனோதத்துவ நிபுணர்
மிகச் சிறந்த குழந்தைகள் நல மருத்துவர்
என பன்முகத் தன்மை கொண்டவர்.

எம்ஜிஆர் காலத்தில் அவருடைய நெருங்கிய நண்பராக இருந்து
அவரது மறைவுக்குப் பின்னால்
அரசியலை விட்டு ஒதுங்கி விட்டார்.
பொது வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால் ஒரு அற்புதமான
ஆற்றலுள்ள மனிதரை தமிழகம்
கண்டிருக்கும்.
எதிரிகளையும் கூட வசீகரிக்கும்
மந்திர புன்னகைக்கு சொந்தக்காரர்
டாக்டர் ஹபிபுல்லாஹ்.
ஒரு நண்பனைப்போல கலகலப்பாக
என்னிடம் பேசுவார்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதே அவரின்
தனி சிறப்பு.
என்னுடைய பத்திரிகை பணிகளுக்கு
உத்வேகம் ஏற்படுத்தி தொடர் கட்டுரைகள் எழுதியவர்.
எனது எழுத்துக்களை
மனம் நிறைந்து பாராட்டுபவர்.
அந்த பாராட்டுக்களையெல்லாம்
என் பெற்றோரின் வாழ்த்துக்களாக
எண்ணி சந்தோஷப்படுபவன் நான்.
தாய்க்கு தலைமகன்
பெற்றோருக்கு நிகரானவன்.
அண்ணனின் சிறப்பான குணம்
சூஃபியிசத்தின் ஈடுபாடு.
மிகப்பெரிய ஞானிகளின்
வாழ்க்கை தத்துவங்களை
மிக எளிமையாக சொல்லி புரிய வைப்பதில் வல்லவர்.
நான் 1982 ல் சவுதியிலிருந்து முதன் முதலாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது
என்னை அழைத்துச் செல்ல விமான நிலைய வாசலில் வந்து நின்றது
அண்ணனின் பிளிமவ்த் கார்.
விஜபி அந்தஸ்து.
அசந்து விட்டேன்.
அத்தனை செல்வாக்கோடு குமரிமாவட்டத்தில் டாக்டராக இருந்தார்.
இன்றும் அப்படித்தான் ... !
அண்ணனைப் பற்றி
இன்னும் நிறையச் சொல்லலாம்.
இன்ஷா அல்லாஹ் !
இப்போதைக்கு
அவருடைய பயணம் இனிமையாக
சந்தோஷமாக
வெற்றியாக அமைய வாழ்த்துக்களும்
துஆவும் !

Abu Haashima

No comments: