Saturday, August 31, 2019

ஹிஜ்ரி புத்தாண்டு நினைத்து எழுந்திட்ட பாடல் இது..

ஹிஜ்ரி புத்தாண்டு நினைத்து எழுந்திட்ட பாடல் இது,

பாடல்  பாடியவர் தேன் இசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் 

Friday, August 30, 2019

லயோலா கல்லூரி கருத்தரங்க அனுபவப் பகிர்வு..! #நிஷாமன்சூர்


"தமிழ் வளர்த்த இசுலாமியர்கள்" என்கிற தலைப்பில் இரண்டு நாட்கள் கருத்தரங்கை லயோலா கல்லூரி பல்சமய உரையாடல் துறை ஏற்பாடு செய்திருந்தது. அதில் முதல் ஆய்வுக் கட்டுரையாக குணங்குடி மஸ்தான் அப்பாவின் ஞானப் பாடல்கள் குறித்த "தமிழின் ராஜபாட்டையில் பவனி வரும் பரமுத்தன் குணங்குடி" கட்டுரையை நான் சமர்ப்பித்து உரையாடினேன்.

பொதுவாக கட்டுரையை வாசித்து,அதனைப் பார்வையாளர் செவிமடுப்பது என்பது அந்தக் கட்டுரைக்கு இழைக்கப்படும் அநீதி என்பது என் கருத்து. ஏனெனில் சொற்களை மட்டும் அல்ல, சொற்களுக்கு இடையில் பொதிந்திருக்கும் மெளனத்தையும் வரிகளுக்கு இடையே பதுங்கியிருக்கும் உரையாடலையும் கவனத்தில் கொண்டு வாசிப்பவரின் வாழ்வனுபவங்களூடே புதிய பரிணாமத்தில் உருவாக்கிக் கொள்பவைதான் கட்டுரைகளின் கருத்துகள். அவ்வாறில்லாமல் வாசிக்கக் கேட்பது பலவீனமான உரையாடலே ஆகும்.

யோசித்து முடிவு செய்யுங்கள்.

ஒரு முடிவுக்கு வரும் முன்,
யோசித்து முடிவு செய்யுங்கள்.

ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது, ஓடோடிச் சென்று கதவை திறந்து, அவருக்கு வணக்கம் சொல்வது இவரது அன்றாட வழக்கம்.

ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி இவரின் வணக்கத்துக்கு பதில் கூறியதே கிடையாது.

காவலாளியின் முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது.

பாதுகாப்பு குறைபாட்டால் Play Storeல் இருந்து Cam Scanner நீக்கம்!

Monday, August 26, 2019

அதீத சிந்தனை மன அழுத்தம் நீங்க இத பாருங்க. Overthinking and Stress reduction Tips.

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் / கவிஞர் புகாரி சுயவிவரம் - Profile of Poet Buhari

கவிஞர் புகாரி சுயவிவரம் - Profile of Poet Buhari
உள்ளடக்கம்:
· குறுங்குறிப்பு
· வாழ்க்கைக் குறிப்பு
· கல்வி
· தொழில்
· குடும்பம்
· 1960-81 தமிழ்நாடு, இந்தியா
· 1981-99 சவூதி அரேபியா
· 1999-இன்றுவரை கனடா
· வெளியான கவிதைத் தொகுதிகள்
· அன்புடன் புகாரி - என் அறிமுகம்
· நிலாச்சாரல் நேர்காணல் 
குறுங்குறிப்பு:
· 1965 நினைவுக்கும் வராத இளவயது முதலே கவிஞன்
· 1973 பள்ளியிலேயே தமிழ் ஆசிரியரால் கவிஞரே என்று அழைக்கப்பட்டேன்
· 1976 முதல் உரைவீச்சுப் புதுக்கவிதை
· 1979 நண்பர்களோடு கயிறு என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன்
· 1979 அலிபாபா வாராந்திர இதழில் முதன் முதலில் கவிதை பிரசுரம்
· 1979 முதல் மேடையில் இரங்கல் கவிதை வாசிப்பு
· 1980 மாலனின் திசைகளில் என் கவிதைகள் பிரசுரம்
· 1981 சவுதிக்கு பணி நிமித்தம் புலம்பெயர்வு
· 1982 தீபம் இலக்கிய இதழில் தொடர்ந்து என் கவிதைகள் பிரசுரம்
· 1984 தாய் இதழின் ஆசிரியர் பக்கத்தில் என் கவிதைகள் பிரசுரம்
· 1986 இந்திய அமைச்சரவையில் தமிழ்மாநில அடையாளக்கவிதையாக என்கவிதை தேர்வு
· 1987 கணினியின் அச்சு எந்திரத்திற்கான தமிழ் எழுத்துருவை உருவாக்கினேன்
· 1988 குமுதம் கவிதைப் போட்டியில் பரிசு
· 1999 கனடாவுக்குக் குடிபெயர்வு
· 1999 நிலாவிலும் கற்கள் என்னும் வலைத்தளம் உருவாக்கினேன்
· 2000 தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின் தமிழோசை ஆண்டிதழை நான் மட்டுமே ஆக்கினேன்
· 2001 கனடா உதயன் நடத்திய கவிதைப் போட்டியில் தங்கப் பரிசு
· 2002 தங்கப்பதக்கக் கவிதைத் தேர்வில் நடுவர்
· 2002 கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுப்பினர்
· 2002 பாரதிதாசன் வையவிரி அவையின் இரண்டாம் பரிசு
· 2002 தமிழ் நாட்டுத் தமிழர்களுள் முதன்முறையாக வெளிநாட்டில் நூல் வெளியிட்டவன்

Sunday, August 25, 2019

திருமண வாழ்த்துப் பாடல்

*இளமையா முதுமையா*


இளமையின் வேகம்
தோல்வியின் சக்கரமா
வெற்றியின் ஏணியா

முதுமையின் நிதானம்
பாதுகாப்புப் பட்டையா
வாழ்வு பறிக்கும் தொல்லையா

v

பயமறியா இளமை
சறுக்கியும் விழுகிறது
சாதித்தும் காட்டுகிறது

அனுபவ முதுமை
இழந்தும் நிற்கிறது
வென்றும் நிமிர்கிறது

v

Saturday, August 24, 2019

பாசத் தங்கை மகன் புர்ஹானுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்

சர்வதேச செய்திகள்

Modi-க்கு UAE உயரிய விருது வழங்கியது ஏன்? | UAE Honours Narendra Modi | Order of Zayed |

போதி தர்மரின் முழுமையான வரலாறு

மனவலிமை இல்லாதவர்கள் இதை பார்க்க வேண்டாம் | Varalaru | தமிழ் | Bioscope

சீன பெருஞ்சுவருக்கே சவால் விடும் இந்திய பெருஞ்சுவரை தெரியுமா ? | Great wall of India | Bioscope


#அன்பு_அண்ணனோடு ...

Abu Haashima

#டாக்டர்_ஹபிபுல்லாஹ் ..

#டாக்டர்_ஹபிபுல்லாஹ்
இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
பயணம் சொல்வதற்காக நேற்று
வீட்டிற்கு வந்திருந்தவர் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அண்ணனோடு பேசுவதே தனி சுவாரஸ்யம்.
உள்ளூர் மனிதர்கள் முதல்
உலகப் புகழ் பெற்ற மனிதர்கள் வரை
அறிந்து வைத்திருப்பவர்.
அரசியலும் ஆன்மீகமும்
சரளமாக வந்து விழும் அவர் வார்த்தைகளில்.
அவர் தொடாத சப்ஜெக்டே இல்லை எனலாம்.
சிறந்த பேச்சாளர்
எழுத்தாளர்
சிந்தனையாளர்
மனோதத்துவ நிபுணர்
மிகச் சிறந்த குழந்தைகள் நல மருத்துவர்
என பன்முகத் தன்மை கொண்டவர்.

Burhan Deen பாரிஸ் சென்றபோது

Friday, August 23, 2019

எல்லாமும் நிறைவாய் கலந்ததே வாழ்க்கை!

Samsul Hameed Saleem Mohamed
சிரிப்பும் அழுகையும்
சந்தோசமும் சோகமும்
பிறப்பும் இறப்பும்
எல்லாமும் நிறைவாய்
கலந்ததே வாழ்க்கை!

காலம் சிலதை
நினைவூட்டும்
அந்த காலமே சிலதை
மறக்கடிக்கும்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அளவற்ற அருளாளன்,
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
அவனே மனிதனைப் படைத்தான்.
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
81:1. சூரியன் சுருட்டப்படும் போது,
81:2. நட்சத்திரங்கள் உதிரும் போது,
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது,
81:4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது,
81:5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது,
81:6. கடல்கள் தீ மூட்டப்படும் போது,
81:7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும் போது,
81:8, 9. என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,
81:10. ஏடுகள் விரிக்கப்படும் போது,
81:11. வானம் அகற்றப்படும் போது,
81:12. நரகம் கொளுத்தப்படும் போது,

1. அல் பாத்திஹா

1.  அல் பாத்திஹா

தோற்றுவாய்

மொத்த வசனங்கள் : 7

அல்ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87


بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1:1   اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 
1:1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.
1:2   الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏ 
1:2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.
1:3   مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏ 
1:3. தீர்ப்பு நாளின்1 அதிபதி
1:4   اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏ 
1:4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
1:5   اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ 
1:5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!
1:6,7   صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 
1:6,7 அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்களும், பாதை மாறிச் செல்லாதவர்களும் ஆவர்.26


© 2016 tamilquran.in




அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம் இந்த வசனத்திலோ அல்லது திருக்குரானிலோ இருக்கிறதா?

குர்ஆனில் இருக்கிறதா?
ஆக்கம்: சத்தியமார்க்கம் -

ஐயம்:

“பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்” எனும் வசனத்தை தமிழில் “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்” என்று மொழி பெயர்க்கின்றனர். அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன் எனும் அர்த்தம் இந்த வசனத்திலோ அல்லது திருக்குரானிலோ இருக்கிறதா? – சாணக்கியன்.


தெளிவு:

பி, இஸ்மு, அல்லாஹ், அல்-ரஹ்மான், அல்-ரஹீம் ஆகிய ஐந்து அரபுச் சொற்கள் இணைந்து, அரபு மொழியின் சந்தி இலக்கணத்துக்கு இயைந்து, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்று வழங்கப்படுகிறது. அந்த ஐந்து அரபுச் சொற்களுக்கும் தனித் தனியான தமிழ்சொற்கள் முறையே:

பி=ஆல்
இஸ்மு = பெயர்
அல்லாஹ் = வணக்க-வழிபாடுகளுக்குரிய கடவுள்
அர்ரஹ்மான் = அளவற்ற அருளாளன்
அர்ரஹீம் = நிகரற்ற அன்புடையவன்

தமிழ்நாட்டுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை கொடுத்த ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் பேரன் ப.சிதம்பரம் தற்போது சி.பி.ஐயின் பிடியில் -

Tuesday, August 20, 2019

What is wrong with Islam today? | Head to Head

Al Jazeera English | Live

Kelvigal Aayiram: இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடும் போது கவனிக்க ...

கதையல்ல வரலாறு : இந்தியாவை ஆண்ட தமிழர்களின் கதை

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவின் அம்சங்கள் என்ன? | Motor Vehic...

உஷார்!!! இனி 25,000 ரூபாய் அபராதம்... புதிய மோட்டார் வாகன சட்டம் |Motor...

வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி


Abu Haashima Videos-part 1 - samaiyal


Monday, August 19, 2019

அந்த நாள்...! ஆனந்த திருநாள்!!

Dr.Vavar F Habibullah
காதல் - திருமணம்
இது பற்றி ஒரு முறை
கேள்வி கேட்ட போது
கிரேக்க தத்துவ மேதை
சாக்ரடீஸ் சொன்னான்...

வாழ்வில்...
மனிதன், தான்
விரும்பியது கிடைக்காத
போதும் மனம் வருந்துகிறான்!
விரும்பாதது கிடைக்கும்
போதும் மனம் வருந்துகிறான்!!
விரும்பியதே கிடைத்த
போதும் மனம் வருந்துகிறான்!!!

கிடைத்ததை முழு மனதுடன்
விரும்புவதே வாழ்வில்
மகிழ்ச்சி தர உதவும்
மாமருந்தாகும்.

சாலை சுமை தாங்கி... போல்
வாழ்வில் இந்நாள் வரை எனை
தாங்கி பிடித்த எங்கள் வீட்டு
இல்லத்தரசிக்கு நன்றி...நன்றி!
ஆம்...ஆயிரம் நன்றிகள் உரித்து!!

Saturday, August 17, 2019

சீதாராம் VS ஜெய் ஸ்ரீராம் - கன்னையாகுமார்

அதிக விஷயம்... விஷம்.


சிந்திக்க!

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர்.
படுத்தேன்.
வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர்படுத்தேன்.

குப்புற படுக்காதீங்க என்றார்.
மல்லாக்க படுக்காதீங்க என்றார்
இன்னொருவர்..

படுக்கவிடாமல் படுத்தாறங்களே.

காலையில் நடக்க சொன்னார்கள் நடந்தேன் நேராக நடக்க கூடாது எட்டு போட்டு தான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

வெளிநாட்டு சம்பாத்தியங்களும் சமுதாய முன்னேற்றங்களும் ....

Abdul Gafoor

வெளிநாட்டு சம்பாத்தியங்களும்
சமுதாய முன்னேற்றங்களும் ....

மூன்றாம் பாகம் 
எழுபதுகள் எண்பதுகளில்
நிகழ்ந்தேறிய நீங்கா நினைவுகள் ....

முந்தைய பதிவுகளின் சுருக்கம் ....

நமது சமுதாயங்களின் மூதாதையர்கள் நாற்பது ஐம்பது அறுபதுகளில் பர்மா ரங்கூன் மலேஷியா சிங்கப்பூர் புருணே போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கப்பலில் பயணித்து தங்கள் குடும்பங்களுக்காக வருமானம் ஈட்டிய கடுமையான உழைப்புக்கு பின்னர் அடுத்த தலைமுறையினர் அரேபிய தேசங்களுக்கு பணிகள் தேடி ஏஜெண்டுகள் வாயிலாக பம்பாய் நகருக்கு ரயிலில் பயணிக்கிறார்கள் ....

Saturday, August 10, 2019

ஒரு தந்தையின் வாழ்த்து. by. Haja

புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்


வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன் --புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்



லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக். ...
தல்பியா
வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை

Assalamu Alaikkum and Eid Mubarak.
புனித ஹஜ் (ஈத்) பெருநாள் நல் வாழ்த்துகள்!!!

ஹஜ் ஒரு பார்வை

ஆக்கம் Dr.Vavar F Habibullah
ஹஜ் கடமை என்றாலும் அது
தரும் அநுபவம் அளப்பறியது.
அநுபவித்தால் மட்டுமே
அறியப்படும் ரகசியம் இது.

பெற்ற மகனை, தந்தை
அறுத்து பலியிடத் துணியும்
தியாகப் பலி,இறை
கட்டளையால் மிருகப்
பலியான அதிசயம்!
பாலை வனத்தில்
குழந்தை இஸ்மாயில்
காலடியில் உருவான
வற்றாத ஜம்ஜம் நீரூற்று!
அழும் குழந்தையின் தாகம்
நீங்க அன்னை ஹாஜரா நடந்த
சபா மர்வா மலைப்பாதை...!
வலம் வரும் கஃபா ஆலயம்
அதை கட்ட வானில் இருந்து
இறங்கிய அஸ்வத் விண்கல்
என்ற விஞ்ஞானம் சொல்லும்
மெஞ்ஞானக் கல்...!!

தமிழர் மரபணுவை செதுக்கியவர்கள்.

மரங்களைப் பாடுவேன்........ வாரும் வள்ளுவரே,

வாரும் வள்ளுவரே,
மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அவ்வளவு மட்டமா?
வணக்கம், அவ்வையே!
நீட்டோலை வாசியான் யார் என்றீர்?
மரம் என்றீர்!
மரம் என்றால் அத்தனை இழிவா?
பக்கத்தில் யாரது பாரதிதானே?
பாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்க‌ள் என்றீர்!
மரங்கள் என்றாள் அவ்வளவு கேவலமா?
மரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,
பூமியின் ஆச்சர்யகுறி!

Thursday, August 8, 2019

கவிஞர் மு. மேத்தா பெயரில் மு.மேத்தா அறக்கட்டளை சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் தொடங்கப்படுகின்றது.

செப்டம்பர் 5 அன்று, கவிஞர் மு. மேத்தா பெயரில்
மு.மேத்தா அறக்கட்டளை சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் தொடங்கப்படுகின்றது.
சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ரூபாய் 5 லட்சம் நிதி அளித்து உள்ளது.
அனைத்து கல்லூரி இளங்கலை முதுகலை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கவிதை-கட்டுரை-சிறுகதை என சுழற்சி முறையில் போட்டி நடத்தி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசும், நூலும் வெளியிடப்படும். அத்தோடு புதுக்கல்லூரி தமிழ்த்துறை மு.மேத்தா விருதும் அளித்து கவுரவப்படுத்தும்.

Musthafa Mohamed M A

Tuesday, August 6, 2019

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen ஒருவர்! "
சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வம் அதன் தொடர்ச்சி அவரது முகநூல் பதிவுகள்

Monday, August 5, 2019

அல்லாஹ்வின் #அருட்கொடை

சுப்ஹு சிந்தனை 06/08/19 #தலைப்பு_அல்லாஹ்வின் #அருட்கொடை நீடூர்நெய்வாசல் ஜாமிஆ மஸ்ஜித் முஹம்மது இஸ்மாயில் பாகவி

காஷ்மீரின் கதை

Friday, August 2, 2019

வெளிநாட்டு சம்பாத்தியங்களும் சமுதாய முன்னேற்றங்களும் ....


ஆக்கம் :Abdul Gafoor



மனசில் படருகிற
சரித்திர நிகழ்வுகளை
தொகுத்து தொடருகிற
இரண்டாம் பதிவு ....

இடக்கை வலக்கை மாற்றி உலக்கை கொண்டு உரல்களில் இடித்த அரிசி மற்றும் கோதம்பு போன்ற மாவுகள் கலந்து உருவாகிய உணவு பதார்த்தங்களை பெரும்பாலோரின் நாவுகள் மென்று சுவைத்திடாத எழுபதுகளும் எண்பதுகளும் நினைவெனும் யதார்த்தங்களை நமது உள்ளங்களுக்கு விருந்தாய் பரிமாறுகிறது ....

உலைகளில் இட்டு வடித்திட ரேஷன் அரிசியும் சின்ன கும்பாக்களில் ஊற்றி குடித்திட பழங்கஞ்சியும் வயிற்று பசியாற்ற அவித்த மரச்சீனி கிழங்குகளும் குடும்பமெனும் நீரோட்டங்களில் சங்கமமாகி நீக்கமற அங்கம் வகித்தது ....