Monday, April 15, 2019

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் 156 ஆம் ஆண்டு விழா 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பவள விழா!

வரலாற்று சிறப்பு வாய்ந்த லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 156 ஆம் ஆண்டு விழா , 75 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பவள விழா   14-4-2019 காலை 10-00 மணி முதல் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி தலைவர் ஜெ.அப்துல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி செயலாளர் கே.ஏ.அமானுல்லா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா காரி ஆர்.இஜட்.முஹம்மது அஹ்மது அவர்கள் கிராஅத் ஒதினார்கள்.


ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் , கடலூர் மாவட்ட அரசு காஜி, மவ்லானா ஹாஃபிழ் ஏ.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் மாணவர்களுக்கு ஸனது வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுக்குழு தலைவர் ஷைகுல் ஹதீஸ் ஹதீஸ் அல்லாமா மவ்லானா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹள்ரத் ,சென்னை அடையாறு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமும் , ஜாமிஆ அல்ஹூதா அரபுக்கல்லூரி முதல்வருமான மவ்லானா மவ்லவி எம்.சதீதுத்தீன் பாக்கவி ஹள்ரத், மவ்லானா மவ்லவி T.N.M. ஹாமீத் பக்ரி ஹள்ரத், ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர்கள் ஸனது பெற்ற இளம் உலமாக்களை வாழ்த்தி உரையாற்றினர்.

ஜாமிஆ வின் பொருளாளர் ஏ.ஆர்.அப்துர் ரஷீத் அவர்கள் நன்றி கூறினார்.

சங்கைமிகு உலமாக்கள் , ஜாமிஆவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், இளைஞர்கள், பெண்கள், வெளியூர் சகோதரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர்
.From: Lalpet Express<lalpetexpress@gmail.com>
from:Muduvai Hidayathmuduvaihidayath@gmail.com





No comments: