Fakhrudeen Ibnu Hamdun
செல்லப் பெண்ணவளும்
சற்றே உறங்கட்டும்
மெல்ல தாலாட்டி
மெத்தை கிடத்திவிட்டு
நில்லாப் பொழுதினிலே
நின்று ஆக்கிடுக
சொல்லும் கைமணத்தில்
சொக்கும் உங்களவர்
இல்லை என்றிடாமல்
இன்னொன்(று) அளித்திடுவார்
நல்லோர் வாழ்த்துவரே
நன்றாய் வாழ்ந்திடுக
(சகோதரி ஒருவருக்கு அளித்த வாழ்த்து)
Fakhrudeen Ibnu Hamdun


No comments:
Post a Comment