Saturday, September 3, 2016

வண்ணமிகு அலங்கார மேடைகளில் ..

Raheemullah Mohamed Vavar

வண்ணமிகு அலங்கார மேடைகளில் ஆரவாரமாய் பேசப்படும் ஆர்ப்பரிப்பு பேச்சுக்களுக்கு எழும் கைதட்டல்களும் காதை கிழிக்கும் விசில் சப்தங்களும்; பேசிய பேச்சுக்கான வரவேற்புகள் என்று சொல்வதை விட, பெருமழை அடித்து அதன் வெள்ளம் வீதிகளில் ஓடும்வேளை அதில் எழும் நீர்க்குமிழிகளுக்கு ஒப்பான ஒரு அனிச்சை செயல் போன்றது என்றே கூறலாம். மழை ஓய்ந்தவுடன் கண்ணில் கண்ட காட்சிகளெல்லாம் எப்படி காணாமல் போய்விடுகிறதோ அவ்வாறே அக்கூட்டம் முடிந்த சில நொடிகளிலேயே இவை யாவும் யாதொரு அடையாளமுமின்றி காட்சியையும் கருத்தையும் விட்டு முற்றாய் அகன்று விடுகின்றன.
ஆயின்........

சிந்தை நிறைகொண்டோர் கூடும் ஒரு சிற்றவையாய் இருப்பினும்; இனம் மொழி, மதம் ஜாதி கடந்து மனிதப் பற்றை மட்டுமே நெஞ்சில் நிறுத்தி ஆற்றாமையில் அருவியாய் வீழும் இதயத்தின் வார்த்தைகளே கேட்போரின் மன ஆழத்தில் விழுந்து, கேட்டவர் அதை நினைக்கிற போதெல்லாம் பீறிடும் கண்ணீர் குமுழிகளாக காட்சிபடுவதே இவ்வுலகில் மனித நேயத்தை நிலைநாட்டும் தொடர் முயற்ச்சிகளாக இருந்து கொண்டிருக்கின்றன !

புகழ்பெற்ற ஏதோ ஒரு அறிஞரின் பேரைச் சொல்லி, அவர் பேராலேயே இதை முடித்திருந்தால் ஏகப்பட்ட வரவேற்புக்கள் கிடைத்திருக்கக் கூடும். ஆயினும் எப்போதும் போல் முடிக்கிறேன்.
வாவர் ரஹீமுல்லாஹ்

Raheemullah Mohamed Vavar

No comments: