Tuesday, January 13, 2015

’பளார்’ என்று அவளை அறை / ரபீக் சுலைமான்

உலகம் முழுவதும் பெண்களுக்கெதிரான, பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிலோ சொல்லவே வேண்டாம். வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவோர் பட்டியல் நாளொரு தினசரியில் வந்த வண்ணம் இருக்கிறது.

இதனை எதிர்த்தும் கண்டித்தும் போராட்டங்களும், விளம்பரங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், இத்தாலியின் செய்தி நிறுவனம் FANPAGE
( www.fanpage.it ), 'அவளை ஓங்கி கன்னத்தில் அறை” எனும் வித்தியாசமான கோணத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.
7 முதல் 11 வயது வரையிலான சிறுவர்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மனதில் பெண்களைப் பற்றிய எண்ணம் எவ்வாறு உள்ளது. வன்முறை நோக்கில் பெண்களை அணுகுகிறார்களா? என்பது பற்றிய ஆய்வாம் அது.

மார்ட்டினா என்ற சிறுமியை கேமிராவிற்கு முன் நிறுத்தி, அவளது கண்ணத்தில் ஓங்கி அறையுமாறு அச்சிறுவர்களிடம் கேட்கப்பட்டதாம்.

குழப்பமடைந்த சிறுவர்கள், எதற்காக இந்த ஆய்வு என்று பேட்டியெடுப்பவரிடம் கேட்டுள்ளனர். பிறகு செய்தியாளர், “சரி, கேமிராவை அணைத்துவிடுகிறேன். இப்போது அடி” என்று கேட்டிருக்கிறார்.Rafeeq Friend

அச்சிறுவர்களின் பதில் மிகவும் அழகாகவும், ஆச்சரியமூட்டும் வகையிலும் இருந்திருக்கிறது. கேட்டால் நம் கண்களில் கண்ணீர் வருவது உறுதி.

ஒரு சிறுவன் சொல்லியிருக்கிறான். “ நான் அவளைத் துன்புறுத்த மாட்டேன்.

இன்னொருவன், “ நான் எதற்காக அவளை அடிக்க வேண்டும், நான் ஒரு ஆண். பெண்ணை அடிப்பது இழுக்கு”. என்று சொல்கிறான்,

வீடியோ இணைப்பில் பாருஙக்ள்.

ஆண் என்றால் பெண்ணை அடிப்பதும், துன்புறுத்துவதும் தான் ஆண்மை என்று அநியாயமாக காட்சியமைக்கும் நம்மூர் குடும்ப(?) சீரியல் இயக்குனர்களும்,

”எவன்டி உன்னை பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்,
கைல கிடைச்சா செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான் செத்தான்.”

போன்ற வன்மத்தைத் தூண்டும் தத்துவப்(?) பாடல்களும் ஒழியும் நாள் என்னாளோ!
 கட்டுரை ஆக்கம்  Rafeeq Friend

No comments: