Friday, August 2, 2013

அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா

அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில்
முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
பேராசிரியர் மேஜர் அரவாண்டி சிறப்புரை

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள திருமங்கலக்குடியில் அமைந்துள்ள அஸ் - ஸலாம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் இன்று (01/08/2013) முதலாம் ஆண்டு புதிய வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் M. J .A . ஜமால் முஹம்மது இப்ராஹிம் தலைமை தாங்கினார். துணை தலைவர் முஹம்மத் ஹுசைன், இணை செயலாளர் சிராஜுதீன், சாதிக் மைதீன், அறக்கட்டளை நிர்வாக குழு உறுப்பினர்கள் முஹம்மது சிராஜுதீன், முஹம்மது சுல்தான், ஷாகுல் ஹமீது, அப்துல் மாலிக், முஹம்மது இக்பால், அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன் அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான ஏ. எம். ஷாஜஹான் வாழ்த்துரை வழங்கினார். அவர் தனது உரையின் போது மாணவர்கள் ஆங்கில மொழியை சிறப்பாக கற்க வேண்டியதின் அவசியம் பற்றியும், தங்களது தனி திறமையை மேம்படுத்திகொள்ளும் வகையில் 4 வருட பட்டப்படிப்பை 8 பருவமாக பிரித்து ஒவ்வோரு பருவத்திலும் கூடுதலாக ஒரு சான்றிதழ் படிப்பை படித்து முடிக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும் எடுத்து கூறினார்.மேலும் கல்லூரியின் சிறப்பம்சங்கள், ஆய்வக வசதிகள், சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், அனுபவமிக்க பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளது பற்றி எடுத்து கூறினார். சிறப்பு விருந்தினராக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் கணினி துறையின் முன்னாள் தலைவர் மேஜர் அரவாண்டி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அவர் தனது சிறப்புரையில் மாணவர்கள் எந்தவிதமான கவன சிதறலும் இல்லாமல் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒழுக்கம் நிறைந்த மாணவனாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் கண்ட கனவை நனவாக்கும் விதத்தில் கடுமையாக உழைத்து பல்கலைகழக அளவில் சிறப்பிடம் பெற முயல வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். விழா முடிவில் கல்லூரியின் இயக்குனர் காரல் மார்க்ஸ் நன்றியுரை நிகழ்த்தினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்களும், மாணவர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.
Regards














No comments: