Monday, May 30, 2022
அத்தாவைப் போல் தப்பாமல் பிறந்த பிள்ளை
அத்தாவின் இறைவழி வாழ்வு
தன் பிள்ளைகளுக்கும் வருவது இயல்பு
அத்தாவைப் போல் தப்பாமல் பிறந்த பிள்ளை
அத்தாவைப் போல் பேச வேண்டும்
அத்தாவைப் போல் சேவை செய்ய வேண்டும்
"அத்தாவைப் போல்" என்று நல்லலோர்கள் நவில வேண்டும்
" டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள் சிறந்த சிந்தனையாளர், சீர்திருத்தவாதி , சமய சமரச நோக்காளர்.
டி .எஸ். ஆர். அப்துல் மஜீது அவர்கள் தந்தை டி .எஸ்.ராஜ்முகம்மது அவர்கள் நீடூரில் மிகவும் புகழுடையவர். இவர் மிகவும் நாணயமானவர். அவர் மீது மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தனர்.மரியாதைக்குரிய
டி .எஸ்.ராஜமுகம்மது அவர்களது சேவை மிகவும் உயர்வானதாக இருந்தமையால் அவர் இறந்த பின்பும் அவரது புகழ் காலமெல்லாம் மறையாமல் நிற்கின்றது".
எனது இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கோவை இலக்கிய வட்ட நிகழ்வாக நேற்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.
·எனது இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கோவை இலக்கிய வட்ட நிகழ்வாக நேற்று மிகச்சிறப்பாக நடந்தேறியது. தோழர்கள் இளஞ்சேரல்,இளவேனில் ஆகியோர் மிக நேர்த்தியாக நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். சாஜிதா மன்சூர் கவிதை நூலை வெளியிட மரியம் ஜமாலியா பெற்றுக்கொண்டார்.லஷ்மி சரவணக்குமார் கட்டுரை நூலை வெளியிட முனைவர் மஞ்சுளாதேவி பெற்றுக்கொண்டார்.
நண்பர் அமுதன் இஸ்மாயீல் Amuthan Ismail கவிதைகள் குறித்த அழுத்தமான ஆழமான நிதானமான உரையை நிகழ்த்தினார்.கவிதைகளுக்குள் ஒலிக்கும் கவிஞனின் இதயத்துடிப்பை உணரும் நுண்செவித்திறன் கொண்ட வாசிப்பு அவருடையது.பின்னர் பேசவந்த தோழர் Kareem Aak கரீம் கட்டுரை நூல் குறித்த விரிவான அலசலை மேற்கொண்டார். பல கட்டுரைகளையும் முழுமையாக வாசித்து உள்வாங்கிக் கொண்டதன் உழைப்பு அவரது உரையில் வெளிப்பட்டது.முக்கியமான பல குறிப்புகளை மேற்கோள் காட்டி அடிக்கோடிட்ட வரிகளை வாசித்தும் காட்டிய நிறைவான உரை அவருடையது.
Sunday, May 29, 2022
Saturday, May 28, 2022
Monday, May 23, 2022
அன்புடன் வாழ்த்துக்கள் Haji Mohamed Arif Maricar அவர்களுக்கு
Saturday, May 21, 2022
Friday, May 20, 2022
அரபிக் கல்லூரியின் சிறப்பு | ஜூம்மா பேருரை
Tuesday, May 17, 2022
Monday, May 16, 2022
Sunday, May 15, 2022
Saturday, May 14, 2022
Friday, May 13, 2022
Tuesday, May 10, 2022
Saturday, May 7, 2022
கலை ஒளிவீசும் மேலப்பாளையம்.. LKS மீரான் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.
கலை ஒளிவீசும் மேலப்பாளையம்.. நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம்களின் கலைநயமிக்க பெருநாள் கொண்டாட்ட அனுபவங்களை
LKS மீரான் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்.
Thursday, May 5, 2022
மூப்பில்லா தமிழே தாயே பாடல் வரிகள் -
Moopilla Thamizhe Thaaye Lyrics
AR Rahman Album’s Moopilla Thamizhe Thaaye Song Lyrics in Tamil. Moopilla Thamizhe Thaaye Song Lyrics has penned in Tamil by Thamarai.
புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே தமிழே வா
தரணியாள தமிழே வா
விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்
திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கவிதை சொட்டும்
Wednesday, May 4, 2022
நாரே தக்பீர் பொருள் என்ன❓
BySadhiq
நாரே தக்பீர் பொருள் என்ன❓
‘நஅர’ (நூன் ஐன் ரா) என்ற அரபுச் சொல்லிலிருந்து பிறந்தது தான் ‘நஃரதுன்’ என்ற சொல். நஅர என்றால் உரத்து சப்த மிட்டான் என்பது பொருள். ‘நஃரதுன்’ என்றால் உரத்துச் சப்தமிடுதல் எனப் பொருள் வரும். நஃரதுன் என்பதை ‘நஃரா’ எனவும் உச்சரிக்கலாம்.
பள்ளிவாசல்களில் ஒரு காலத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வகைக் கொட்டுக்கு ‘நகரா’ என்று கூறுவதும் இந்தச் சொல்லின் மறு உருவம் தான். நஃரா தக்பீர் என்றால் தக்பீரை (அல்லாஹு அக்பர் என்பதை) உரத்த குரலில் கூறுதல் எனப் பொருள் வரும். ஆனால் இதே சொல் அரபு மொழியிலிருந்து பாரசீக, உருது மொழியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை அரபு மொழி இலக்கணப்படி உச்சரிப்பதாக இருந்தால் ‘நஃரதுத் தக்பீர்’ என்று கூற வேண்டும். பார்சி மொழியில் ‘நஃரயே தக்பீர்’ என்று கூற வேண்டும். இது தான் ‘நாரே தக்பீர்’ என்று மருவி விட்டது.