Tuesday, August 26, 2014

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கவிஞர் தாஜ் தீன்


தாஜ் தீன் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
முகநூலில் (ஃ பேஸ்புக்கில்) Taj Deen  (தாஜ் தீன்) அவர்களின் பக்கம்
 
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் தாஜ் தீன் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

தாஜ் தீன் அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரது ஆக்கங்களை முகநூலில் அவரது பக்கத்தில் Taj Deen பார்க்கலாம் .

தாஜ் தீன் அவர்களது சொந்த ஊர் சீர்காழி .
படிப்பு முடித்து சிறிது காலங்கள் ஸவூதியில் பின்பு துபாயில் பணி செய்த பின்பு தற்பொழுது  தனது ஊரில் சீர்காழியில் பல சேவைகளை செய்து வருகின்றார் . தொடர்ந்து தனது எழுத்தின்  ஆக்கங்களை மக்களுக்கு தந்து மகிழ்கின்றார்.
தாஜ் தீன்  அவர்கள் ஒரு சிறந்த கவிஞர்.
கவிதை எழுதுவதில் நிபுணர்
ஆய்வுக் கட்டுரை தருவதில் வல்லமை உடையவர்
அனைத்துக்கும் மேல் நல்ல குணமுடையவர்
தாஜ் தீன் அவரைஅவர்களை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
 அன்புடன்
முகம்மது அலி ஜின்னா 
-------------------------------------------------------------------------
ஆளுமைகளைக் கொண்டாடுவோம்:/by Yasar Arafat

சிறந்த ஆளுமைகளைக் கொண்ட நம் மக்களை எடுத்து அவர்களை விழுதுகள் குழுமத்தின் ஊடே இங்கே வெளிப்படுத்துவதில் மிக்க மன மகிழ்ச்சி அடைகிறோம்.

இவர் ஒரு சிறந்த கவிதை, கட்டுரை, விமர்சனம், குறு நாவல் எழுதக்கூடியவர். இவருடைய கதை கவிதைகளில் ஒரு நகைச்சுவை தொணியும் தொற்றிக்கொண்டு நம்முடைய உதடுகள் புன்னகையாலோ அல்லது பெருத்த சிரிப்பினாலோ பிரிக்காமல் விடாது என்றே சொல்லலாம்.

இவரைப்பற்றிய செய்திகளுக்கு நட்பு வட்டாரங்களின் இணைய பக்கங்களை தட்டினாலே இவருக்கும், சக எழுத்தாளர்களுக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்துக்கொள்ளமுடிகிறது. இவர்களுடைய எழுத்து பரிமாற்றமே நகைச்சுவைகளும் கலந்தப்படியே உள்ளது.

பீகார் இடைத்தேர்தல் சம்பந்தமாக இவர் எழுதிய ஒரு கவிதையே இங்கு சான்று…

பீகார் இடைத் தேர்தல்:

பித்தளையே என்றாலும்.... அது
இத்தனை சீக்கிரம்
பல்லிழித்திருக்கக் கூடாது.

நிறைய கதைகளும், கவிதைகளும் காணக்கிடைக்கின்றன இணையத்தில், அதிலும் ”காதர் பாய் டீ கடை” கதையை படித்து சிரிப்பினை கட்டுப்படுத்தமுடியாமல் போனதுதான் மிச்சம்…அப்படியொரு இயல்பான , வட்டார வழக்கு மொழிகளால் அடித்து துவைத்து போட்டிருக்கிறார்.

அது அல்லாமல் தங்கல் அமீர் (குறு நாவல்),பால்ய விவாஹம் போன்ற கதைகளும் பிரசித்திப்பெற்றிருக்கின்றன. அதிலும் ”ஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்” எனும் கதையில் பின்வரும் வரிகளே அவரின் எழுத்தாளுமைக்கு ஒரு சான்று ..

”இன்றைக்கு அவன் ஆடை
வழக்கத்தைவிட மிகமிக அழுக்காக இருந்தது.
அவனது உலகத்தில் பிரவேசிக்க
இன்னும் எனக்கு பயிற்சி வேண்டும்.
அரை குறைகள் எல்லாம்
அவனை மாதிரி
முழுமையாகிவிட முடியாது.”

இப்படிப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்து ஆளுமைகளைப் பற்றி நாம் மிக மிக குறைவாகவே அறிந்திருக்கிறோம் என்பது சகிக்க முடியாத உண்மையும் கூட.

திறமையான எழுத்தாளரையும், கருத்தாளரையும் ஊக்குவியுங்கள், அவர்களின் சிறப்பான பணி இந்த சமுதாயத்திற்கு தேவை என்பதை உணருங்கள். அந்த சிறப்பு மிகுந்த சகோதரர் இவர்தான்...

# தாஜ் தீன்

# Taj Deen
கட்டுரை ஆக்கம்  யாசர் அரஃபாத் அவர்கள் Yasar Arafat

2 comments:

Anonymous said...

ரொம்ப நன்றி அண்ணே...

உங்கள் ஊக்கத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றி!!

-யாசர் அரஃபாத்

mohamedali jinnah said...

யாசர் அரஃபாத் அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
அன்புடன்